எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , » TNPSC | பொருளாதாரத்தின் வகைகள் | Types of Economics |

TNPSC | பொருளாதாரத்தின் வகைகள் | Types of Economics |

vendrukaattu.com

 
---------------------------------------------------------------------------------------------------

பொருளாதாரம் கீக்கண்டவாறு பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1.நுண்ணியல் பொருளாதாரம்

2.பேரியல் பொருளாதாரம்

 3.பன்னாட்டுப் பொருளாதாரம் 

4.பொது நிதிப் பொருளாதாரம்

5.வளர்ச்சிப் பொருளாதாரம்

6.சுகாதாரப் பொருளாதாரம்

7.சுற்றுச்சூழல் பொருளாதாரம் 


1.நுண்ணியல்பொருளாதாரம்

தனிப்பட்ட மனிதர்கள், இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் அல்லது தொழில்களின் பொருளாதார நடவடிக்கைகளை நுண்ணியல் பொருளாதாரம் எடுத்துரைக்கிறது. பல்வேறான சந்தை சூழலில் தொழில் நிறுவனங்கள், வாங்குபவர்கள் விற்பவர்கள் இணைந்து எவ்வாறு விலையைத் தீர்மானிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை நுண்ணியல் பொருளியல் விவரிக்கிறது

நுண்ணியல் பொருளியல் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியுள்ளது.


(i). மதிப்பீட்டுக் கோட்பாடுகள் (பண்டங்கள் மற்றும் காரணிகளின் விலைத் தீர்மானம்)


(ii). பொருளாதார நலக் கோட்பாடு

 

2.பேரியல் பொருளாதாரம்

பேரியல் பொருளாதாரம் நுண்ணியல் பொருளியலில் இருந்து சற்று மாறுபட்டது. இது ஒட்டு மொத்த பொருளாதார நடவடிக்கைகளை விளக்குகிறது. 

நாட்டு உற்பத்தி, பண வீக்கம், வேலையின்மை மற்றும் வரி போன்ற பல ஒட்டு மொத்தங்களைப் பற்றி விவரிக்கிறது

J.M.கீன்சின், “வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுக்கோட்பாடு” என்ற நூல் தற்கால பேரியல் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது.


நுண்ணியல் பொருளாதாரம்

பேரியல் பொருளாதாரம்

தனிப்பட்ட பொருளாதார முகவர்களான உற்பத்தியாளர், நுகர்வோர் எடுக்கும் பொருளாதார முடிவுகளை விளக்குவது நுண்ணியல் பொருளியல் பிரிவு.

 

இந்த பிரிவு முழுப்பொருளாதாரத்தின் முழுத்தொகுதியையும் ஆராயும் பகுதிகள்கொண்டது.

 (.ம்) மொத்த உற்பத்தி, தேசியவருவாய், மொத்த சேமிப்பு மற்றும் முதலீடுஆகியன.

பொருளாதாரத்தின் சிறு பகுதிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

இப்பிரிவு தனியொரு பண்டம் மற்றும் காரணியின் விலை எவ்வித முறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது.

இது பொருளாதாரத்தின் பொது விலை நிலையோடு தொடர்புடையது.

இது விலைக்கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.

இது வருவாய் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.

தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரது உத்தம அளவு குறிக்கோளுடன் தொடர்பு உடையது.

இது வளர்ச்சி முறையின் உத்தம அளவுடன் தொடர்புடையது.


3.பன்னாட்டுப் பொருளாதாரம்


நவீன உலகில் எந்த ஒரு நாடும் தனிப்பட்ட நிலையில் வளர்ச்சி அடைய இயலாது என்று கருதப்படுகிறது. 

வெளிநாட்டு மூலதனம், முதலீடு (வெளிநாட்டு நேரடி முதலீடு) மற்றும் பன்னாட்டு வாணிபத்தின் மூலம் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளோடு தொடர்பு கொண்டுள்ளன. இவற்றை பன்னாட்டுப் பொருளாதாரம் விளக்குகிறது.

4.பொது நிதிப் பொருளாதாரம்


பொதுநிதி என்பது வருமானம் அல்லது வருவாயை அதிகரிக்க பொது அதிகார அமைப்புகள் ஒன்றோடொன்று இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையை விளக்குகிறது. 

பொதுச் செலவு, பொது வருவாய், பொதுக் கடன் மற்றும் நிதி நிர்வாகம் போன்றவை பொதுநிதியின் எல்லைகளாகும்.

5.வளர்ச்சிப் பொருளாதாரம்

தலா வருமானம், மனித மேம்பாட்டு குறியீடு, மகிழ்ச்சி குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், பின் தங்கிய நாடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. 

வளர்ச்சிப் பொருளாதாரமானது வளர்ந்த நாடுகளின் இயல்புகள், வளர்ச்சிக்கானத் தடைகள், வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் பொருளாதாரம் சாரா காரணிகள், பல்வேறு வளர்ச்சி மாதிரிகள் மற்றும் வளர்ச்சிக்கான உத்திகள் போன்றவற்றை விளக்குகிறது.


6.சுகாதாரப் பொருளாதாரம்


சுகாதாரப் பொருளாதாரம் என்பது செயல்முறை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும். 

இது சுகாதாரக் குறியீடுகள், நோய் தடுப்பு மற்றும் நோய் நீக்கும் நடவடிக்கைகள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி, கிராமப்புற சுகாதாரப் பணி, மருந்து விலை கட்டுப்பாடு, பிரசவத்திற்கு பின்னரான தொடர்பான பாதுகாப்பு, மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதாரம், சுகாதாரத்திற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.


7.சுற்றுச் சூழல் பொருளாதாரம்


இயற்கை வளங்களின் இருப்பை சுரண்டுதல் மற்றும் சுற்றுக்சூழல் மாசு ஆகியன விரைவான பொருளாதார முன்னேற்றத்தின் விளைவான தீய விளைவுகளாகும். எனவே பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள உறவை ஆராயும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தைப் படிப்பதும் அவசியமாகும். சுற்றுச்சூழல் பொருளியலில் சூழலியல் (Ecology), பொருளியல், சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றிற்ககு இடையேயான தொடர்புடைய பிரச்சினைகளைப் பற்றி விளக்குகிறது.

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template