எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » TNPSC - பாமினி சுல்தானகம் | Bahmani Sultanate | Indian medieval History | இடைக்கால இந்திய வரலாறு

TNPSC - பாமினி சுல்தானகம் | Bahmani Sultanate | Indian medieval History | இடைக்கால இந்திய வரலாறு


பாமினி.அரசு (கி.பி.1347-1526)


கிருஷ்ணா , துங்க பத்ரா நதிகளுக்கிடையிலான வளமா ன ரெய்ச்சூர் பகுதியைக் கைப்பற்றுவதில் பாமினி, விஜயநகர அரசுகளிடையே ஏற்பட்ட போட்டி பாமினி அரசின் தொடக்க கால வரலாற்றைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் இரு நூற்றாண்டுகளுக்கு நீடித்த அம்சமாக இருந்தது
 

ஹசன்கங்கு பாமினி 

(அலாவுதீன் கசன் பாமன்ஷா) 

தில்லி சுல்தானத்தினை, முகம்மது பின் துக்ளக் ஆண்ட காலத்தில், புரட்சி செய்தவரான நசிருதின் இசுமாயில் ஷா, தக்காணத்தின் ஆளுநராக இருந்த சாபர் கானின் புரட்சிக்கு ஆதரவாக இருந்தார்.அதன்பின்னர் சாபர்கானுக்கு, அலாவுதின் பாமன் சாஎன்ற பட்டப்பெயரினைக் கொடுத்து, பாமினிச் சுல்தானத்தை நிறுவ பேருதவிப் புரிந்தார். அலாவுதின் பாமனும், துக்ளக்கின் ஆட்சிப் பகுதியான தக்காணத்தில் தொடர்ந்து புரட்சி செய்து, பாமினி சுல்தானத்தை, 1347 ஆம் ஆண்டு நிறுவினார்

சுமூகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றிய இவர் தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ் எனப்பட்டன. பிரிக்கப்பட்டட நான்கு பகுதிகளுக்கும் ஒவ்வொரு ஆளுநர் நியமிக்கப்பட்டார். அவர்களே அப்பகுதியின் படைகளையும் வழிநடத்தினர். குல்பர்கா, தெளலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்களாகும். 

மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரி வசூல் போன்றவற்றிற்கு முழுப்பொறுப்பாவர். வலிமையான அரசர்களின் கீழ் நன்கு செயல்பட்ட இம்முறை, திறமை குன்றிய அரசர்களின் காலத்தில் ஆபத்தாக மாறியது. 11 ஆண்டுகள் பாமன்ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சிசெய்தார். வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியவற்றிடமிருந்து வருடம்தோறும் கப்பம் பெற அவர் மேற்கொண்ட முயற்சி பல போர்களுக்கு இட்டுச் சென்றது. அனைத்திலும் அவர் வெற்றி பெற்றார். இவர் தான் பெற்ற வெற்றிகளை நினைவுகூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்றுபொறித்துக்கொண்டார்.

வடகிழக்கில் மாகூர் முதல் தெற்கே தெலுங்கானா வரையில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார். 

வாரங்கலை ஆண்ட இந்து மன்னரை வென்று, கொல்காப்பூர், கோவா, மாண்டு, மாளவம் ஆகிய இடங்களைக் கைப்பற்றினார். 

இதனால் இவரது பேரரசு, அரபிக்கடல் முதல் வங்கக்கடல் வரையும், தக்காணத்தின் பெரும் பகுதியாகக் கிருஷ்ணா நதிவரையிலும் அமைந்தது. இவரது தலைநகரம் குல்பர்கா ஆகும்.

முதலாம் முகமது ஷா (கி.பி.1358-1377)

இவர் சிறந்த போர் வீரரும், நிர்வாகியுமாவார். 

விஜயநகர மன்னர் முதலாம் புக்கரையும், வாரங்கலின் கபயா நாயக்கர்களையும் போரில் தோற்கடித்தவராவார்.

இரண்டாம் முகமது ஷா (கி.பி.1378-1397)

இவர் அமைதியை விரும்பினார். அண்டை நாடுகளுடன் நட்பை வளர்த்தார். பல மசூதிகளையும், மதரஸா என்ற கல்விக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டினார். 

பெரோஸ் ஷா பாமினி (கி.பி.1397-1422)


இரண்டாம் முகமது ஷா இறப்புக்குப் பிறகு பெரோஸ்ஷா பாமினி ஆட்சிக்கு வந்தார். 

சிறந்த போர் வீரராக விளங்கிய இவர் விஜயநகர மன்னர் முதலாம் தேவராயரை வென்றார். 

தமது நிர்வாகத்தில் இந்துக்களுக்கும் இடமளித்தார். தமது ஆட்சியின் இறுதியில், விஜயநகர அரசர்களினால் தோற்கடிக்கப்பட்டு, நாட்டின் வட, தென் பகுதிகளை இழந்தார்.

அகமது ஷா (கி.பி.1422-1435) 

இவர் பெரோஸ்ஷா பாமினியை அடுத்து பட்டமேற்றார். இவர் கொடுங்கோலராகவும், இரக்கமற்றவராகவும்இருந்தார். இவர் வாரங்கல் பகுதியை வென்றதால் தமது தலைநகரை குல்பர்கா விலிருந்து பீடா இருக்கு இருக்கும் மாற்றினார்.

மூன்றாம் முகமது ஷா (கி.பி. 1463-1482)


கி.பி.1463இல் மூன்றாம் முகமது ஷா பட்டமேற்ற போது அவருக்கு வயது ஒன்பது. எனவே அவருக்கு முகமது கவான் பாதுகாவலராக இருந்து ஆட்சி செய்தார். 

நிர்வாக ஆற்றல் கொண்ட முகமது கவானின் வழிகாட்டுதலால் பாமினி அரசு மிக வலிமை மிக்க நாடானது. முகமது கவானால், கொங்குநாடு, சங்கமேஸ்வர், ஒரிஸ்ஸா, விஜயநகர் ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 

இக்காலத்தில் பாமினி அரசின் எல்லையாக இரு கடல்களும், தபதி, துங்கபத்ரா நதிகளும் இருந்தன. 

பாமினி அரசு சிதறுதல்

கி.பி.1482 இல் முகமது ஷா இறந்தார். அவருக்குப் பின்பு பதவிக்கு வந்த வாரிசுகள் வலிமையற்று இருந்தனர். அதனால் பாமினி அரசு ஐந்து சிறு நாடுகளாகச் சிதறுண்டது. அவை பீஜப்பூர், அகமதுநகர், பீரார், பீடார்,கோல்கொண்டா ஆகியனவாகும்.

பாமினி அரசின் நிர்வாகம்

நிலமானிய முறையில் அமைந்தது. நாடு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அவை தராஃபுகள் எனப்பட்டன. தராஃப் ஒவ்வொன்றையும் தராஃப்தார் அல்லது அமீர் நிர்வகித்தார். ஆளுநர்கள் போர்க்காலங்களில் மன்னருக்குப் படைவீரர்களையும், போர் தளவாடங்களையும் அனுப்பி உதவினர். ஆளுநர்கள் வலிமை பெற்றவர்களாக இருந்தார்கள்.

பாமினி அரசின் கொடைகள் 

பாமினி அரசர்கள் கல்விக்காகச் சிறப்பு கவனம் செலுத்தினர். குறிப்பாக அரபு, பாரசீக மொழிகளைக் கற்க ஊக்கமளித்தனர். உருது மொழி வளர்ச்சியுற்றது. எண்ணற்ற மசூதிகள், மதரஸாக்கள், நூலகங்கள் கட்டப்பட்டன. முகமது கவான் கட்டிய மதரஸா மற்றும் சுல்தான்களால் கட்டப்பட்ட குல்பர்கா ஜூம்மா மசூதி, கோல்கொண்டா கோட்டை, பீஜப்பூரில் உள்ள கோல்கும் பாஸ் கட்டடம் ஆகியன அவர்களின் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

பாமினி அரசின் வீழ்ச்சி 

பாமினி அரசின் வீழ்ச்சிக்குப் பலகாரணங்கள் உண்டு. விஜயநகர போர்கள், அரசர்களுடன் தொடர்ச்சியாகப் மூன்றாம் முகமதுஷாவுக்குப் பின்னர் திறமையற்ற அரசர்களின் ஆட்சி, அயல்நாட்டுப் பிரபுக்களின் கலகங்கள் போன்றவை பாமினிஅரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template