1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் குறித்த விவாதங்கள் நடைபெறத் தொடங்கின. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தியாவில் முதல் பொருளாதார திட்டம் 1934 இல் எம்.விஸ்வேஸ்வரய்யா என்பவரால் தொடங்கப்பட்டது.
இவர் எழுதிய நூல் இந்தியாவிற்கான திட்டமிடப்பட்ட பொருளாதாரம் ஆகும். இதன் மூலமே இந்தியாவின் முதல் பொருளாதார திட்டம் தொடங்கப்பட்டது.
1938 ல் தேசிய திட்டக் குழு உருவாக்கப்பட்டது. சுபாஷ் சந்திரபோஸ் வழிகாட்டுதலோடு ஜவகர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்ட குழு தோல்வியில் முடிந்தது. ஏனெனில் 1939 இல் இரண்டாம் உலகப் போரில் இந்திய வீரர்களை பயன்படுத்தியதால் காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது. எனவே தோல்வியில் முடிந்தது.
1944 இல் பம்பாயில் 8 முன்னணி அதிபர்களால் பம்பாய் திட்டம் தொடங்கப்பட்டது.
1944 இல் ஸ்ரீமன் நாராயணன் அகர்வால் மூலம் காந்திய திட்டம் தொடங்கப்பட்டது.
1944 - 1945 காலத்தில் எம்.என். ராய் என்பவரால் மக்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
1950இல் ஜேபி நாராயணன் என்பவரால் சர்வோதயா திட்டம் வழங்கப்பட்டது.
திட்டக்குழு
திட்டக்குழு 1950 மார்ச் 15 இல் உருவானது. இது அரசியல் சாராத அமைப்பு ஆகும். திட்டக்குழு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது. இது மத்திய கேபினட் மந்திரிகளின் ஒப்புதலோடு ஏற்படுத்தப்பட்டது ஆகும்.
தலைவர்:
இதன் தலைவர் பிரதமர்.
துணைத்தலைவர்:
துணைத்தலைவர் பிரதமரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரும் ஆவார்.
திட்டக்குழுவின் துணைத் தலைவர் கேபினட் மந்திரிகளின் அதிகாரத்தை பெறுவார். அதாவது கேபினட் மந்திரிகளுக்கு இணையானவர் ஆவார்.
உறுப்பினர்கள்:
திட்டக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆகும்.
நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், சட்ட அமைச்சர் மற்றும் 4 முழுநேர உறுப்பினர்கள்
இவர்களின் பதவிக்காலம் வரையறுக்கப்படவில்லை.
பணி:
நாட்டின் பொருளாதாரம் , மூலதனம், மனித வளம் ஆகியவற்றை மதிப்பிடும் அமைப்பாக இது உள்ளது. மத்திய அரசின் ஆலோசனை அமைப்பாகவும் விளங்குகிறது.
முதல் மற்றும் கடைசி தலைவர்கள்
இதன் முதல் தலைவர் நேரு ஆவார்.
முதல் துணைத்தலைவர் குல்சாரிலால் நந்தா ஆவார்.
திட்டக்குழுவின் கடைசி தலைவர் நரேந்திரசிங்மோடி
திட்டக்குழுவின் கடைசி துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆவார்.
தேசிய வளர்ச்சிக் குழு:
இடு ஒரு சட்டபூர்வ அமைப்பு
1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிரதமர் தலைமையில் இயங்கும்.
உறுப்பினர்கள்:
மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள்
இதன் நோக்கம்:ஐந்தாண்டுத்திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம் அளித்தல்
ஐந்தாண்டுத் திட்டங்கள்:
இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் ஐந்தாண்டுத்திட்டங்கள்.
ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் தேசிய வருமானத்தை அதிகரித்தல், வறுமை ஒழிப்பு, வறுமை ஏற்றத்தாழ்வை குறைத்தல், கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை ஆகும்.
ஐந்தாண்டு திட்டங்கள் சோவியத் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்டதாகும்.
முதல் ஐந்தாண்டு திட்டம் (1951 - 1956)
இது Harrod–Domar மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
இதன் முதன்மை நோக்கம்:
வேளாண்மை
நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து
இலக்கு:2.9 சதவீதம்
அடைந்தது:3.6 சதவீதம்
வெற்றி அடைந்த திட்டம்
தேசிய மேம்பாட்டு கழகம் 1952-ல் உருவாக்கப்பட்டதாகும். இது முதல் ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது இதன் தலைவர் பிரதமராவார். உறுப்பினர்கள் மந்திரிகள், அனைத்து மாநில முதல்வர் மற்றும் நிதி அமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை ஆளுநர்கள் ஆவார்கள்.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956- 1961)
இத்திட்டம் Feldman–Mahalanobis மஹலநோபிஸ் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
இவர் இந்தியப் புள்ளியியலின் தந்தை ஆவார்.
முதன்மை நோக்கம்:
நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவது ஆகும்.
கனரக தொழிற்சாலைகள் நிறுவுதல்
இலக்கு:4.5 %
அ௶ஐந்தது: 4.1%
* ரூர்கேலா-பிலாய்- துர்காபூர் உள்ளிட்ட இரும்பு ஆலைகள் நிறுவப்பட்டன.
மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (1961- 1966)
பேராசிரியர் எஸ்.சக்கரவர்த்தி மற்றும் சாதிக், டாக்டர் காட்கில் ஆகியோரது திட்டம் என்றும் அழைக்கப்பட்டது.
முதன்மை நோக்கம்:
சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் - அடிப்படை தொழிற்சாலைகள உருவாக்குதல் - தொழிலாளர்களின் பலத்தை உயர்வாக பயன்படுத்துவது.
அதிகப்படியான வெளிநாட்டு உதவி கிடைத்தது.
பொக்காரோ இரும்பு ஆலை உருவாக்கப்பட்டது.
சீன -இந்திய இந்திய-பாகிஸ்தான் போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6 சதவீதத்தை அடைய இயலவில்லை.
திட்ட விடுமுறை காலம் (1966- 1969)
காரணம்:
இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் ஐந்தாண்டு திட்டத்தின் தோல்வி
நோக்கம்:
இக்கால கட்டத்தில் ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை துறைகள் மற்றும் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
நான்காம் ஐந்தாண்டு திட்டம் (1969- 1974)
முக்கிய நோக்கம்:
நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதல் ஆகும். (குறிப்பாக பிந்தங்கிய மக்களின் வளர்ச்சி)
இலக்கு:5.7 சதவீதம்
அடைந்தது:3.3 சதவீதம்
ஆரம்பத்தில் இத்திட்டம் வளர்ச்சியை நோக்கி பயணித்தாலும் பருவ மாற்றத்தால் இத்திட்டம் அதன் இலக்கினை அடையாமல் தோல்வி அடைந்தது .
ராஜஸ்தானில் பொக்ரான் அணுகுண்டு சோதனை, வங்கிகள் தேசியமயமாதல் ஆகியவை இத்திட்ட காலத்தில் நடைபெற்றது.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்( 1974- 1979 )
இத்திட்டத்திற்கான முன் வரைவு தார் அவர்களால் தயாரிக்கப்பட்டது.
நோக்கம்:
வேளாண்மை தொழில்தறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது .
இலக்கு: 4.4 %
அடைந்தது: 4.8.%
20 அம்ச திட்டத்தை பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்தார்.
இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு( ஓர் ஆண்டு முன்பே) கைவிடப்பட்டது.
சுழல் திட்டம்:
சுழல் திட்டம் 1978- 79 ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.
இது ஜப்பான் திட்டம் என்றழைக்கப்பட்டது. சிறுதொழில், குடிசைத் தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம்( 1980- 1985 )
நோக்கம்:
வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும் .
வறுமை ஒழிப்பு( GARIBI HATAO)என்பதே இதன் லட்சியம் ஆகும்.
இது முதலீட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு: 5.2 சதவீதம் அடைந்தது: 5.7% வளர்ச்சி
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கு தனியாக வங்கிகள் தொடங்கப்பட்டன.
சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டன.
ஏழாம் ஐந்தாண்டு திட்டம்( 1985- 1990)
நோக்கம்:
தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
முதன்முறையாக பொதுத்துறைக்கு மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
இலக்கு:
5.0 சதவீதம் ஆனால் 6.0 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டது.
ஆண்டு திட்டங்கள் மைய அரசில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை.
ஓராண்டு திட்டங்கள்:
1990 91 மற்றும் 1991 -92 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஓரண்டு திட்டங்கள் மூலம் இந்திய பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை அடைந்தது.
எட்டாம் ஐந்தாண்டு திட்டம்(1992 -1997)
ஜான் டபுள்யூ.மில்லர் மாதிரியைக் கொண்டது.
நோக்கம்:
வேலைவாய்ப்பு கல்வி சமூகநலம் போன்ற மனித வள மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.6% ஆனால் 6.8 சதவீதம் ஆண்டு வளர்ச்சி ஏற்பட்டது .
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் (1997- 2002)
நோக்கம்:
சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது .
இத்திட்டகால வளர்ச்சி இலக்கான 7 சதவீதம் வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்திய பொருளாதாரம் 5.6% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.
காரணம்:கார்கில் போர்,குஜராஜ் பூகம்பம்,ஒர்ஸா வில் ஏற்பட்ட புயல்
பத்தாம் ஐந்தாண்டு திட்டம்( 2002- 2007 )
நோக்கம்:
அடுத்த பத்தாண்டில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 1.5% ஆக்க குறைக்கும் குறிக்கோளை கொண்டிருந்தது. ஆரம்பக் கல்வி வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துதல்.
இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0% ஆனால் 7.2 சதவீதம் மட்டுமே ஏற்பட்டது .
பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டம்( 2007 -2012)
சி.ரங்கராஜன் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
முக்கிய நோக்கம்: விரைவான மற்றும் அனைத்து துறைகளிலும் அதிக வளர்ச்சி ஏற்படுத்துவது. மேலும் கல்வியறிவை அதிகப்படுத்துதல், தனிநபர் வருவாயை அதிகப்படுத்துதல்.
இதன் வளர்ச்சி இலக்கு 8.1 சதவீதம் ஆனால் எட்டப்பட்டது 7.9 மட்டுமே.
பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (2012 -2017 )
இதன் முதன்மை நோக்கம் விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே ஆகும்.
இதன் வளர்ச்சி இலக்கு 8 சதவீதமாகும் .
சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன எனக் கொள்ளலாம் .பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு அதிகபட்ச பொருளாதார பலன்களை பெறலாம் என்று இத்திட்டங்கள் வழிகாட்டியுள்ளன.
இந்திய அரசு ஐந்தாண்டு திட்டங்கள் முறையே சோவியத் ரஷ்யாவிடம் இருந்து எடுத்துக் கொண்ட ஒரு திட்டம்..
நிதி ஆயோக்திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு 2015ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இது நீடித்த நிலையான வளர்ச்சியை ஒருங்கிணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் செய்யும். நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையமாகும் .
இதன் தற்போதைய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி
துணைத்தலைவர்: ராஜீவ்குமார்.