TNPSC - அரசியலமைப்பு அட்டவணைகள் - 12

 

1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது 8 அட்டவணைகள் இருந்ததன.  பிறகு சட்டதிருத்தங்கள் மூலமாக 4 அட்டவணைகள் சேர்க்கப்பட்டு, தற்போது 12 அட்டவணைகள் உள்ளன.  


முதல் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1951 மூலமாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.  பத்தாவது அட்டவணை  52-வது சட்டத்திருத்தம் 1985 மூலம் சேர்க்கப்பட்டது.  1992-இல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12-வது  அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.

அட்டவணை-1


மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள்

முதல் அட்டவணை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் எல்லைகளைப் பற்றி கூறுகிறது. 

அட்டவணை-2

சம்பளம் & படிகள் 

இரண்டாவது அட்டவணை குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர், துணை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர், மாநிலங்களவை துணைத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் ஆகியோரின் சம்பளம், படிகள் மற்றும் சலுகை போன்றவற்றை பற்றி விவரிக்கிறது. 

 அட்டவணை-3

பதவிப்பிரமாணம்



மூன்றாவது அட்டவணை மத்திய அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராஜாங்க மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் பதவிப்பிரமாணம், உறுதிமொழிகள் ஆகியவற்றை பற்றி விவரிக்கிறது.  

 அட்டவணை-4

ராஜ்யசபா இட ஒதுக்கீடு

நான்காவது அட்டவணையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் இடங்கள் பங்களிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இதை பற்றி கூறும் சரத்து 4(1) மற்றும் 80(2) ஆகும். 

 அட்டவணை-5

எஸ்.சி - எஸ்.டி பகுதிகளின் நிர்வாகம்

ஐந்தாவது அட்டவணையில் அசாம், மேகாலயா, திரிபுரா ,மிசோரம் ஆகிய மாநிலங்களை தவிர பட்டியல் இனங்களையும், பழங்குடி பரப்பிடங்களையும் நிர்வாகம் செய்வது குறித்து கூறப்பட்டுள்ளது(எஸ்சி எஸ்டி பகுதிகளில் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடுகள்)

அட்டவணை-6

எஸ்.டி பகுதி நிர்வாகம்

ஆறாவது அட்டவணை வடகிழக்கு மாநிலங்களில் எஸ்டி பகுதிகளில் நிர்வாகம் (அசாம்,  மேகாலயா,  மிசோரம், திரிபுரா) செய்வது குறித்து விளக்குகிறது. 

 அட்டவணை-7

அதிகாரப்பகிர்வு

ஏழாவது அட்டவணை மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு பற்றி கூறுகிறது.

ஏழாவது அட்டவணையில் 3 பட்டியல்கள் உள்ளன.  

மத்திய பட்டியலில் 100 துறைகள் உள்ளன.இதில் ராணுவம், தபால், வங்கி, தகவல் தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகள் இதில் அடங்கியுள்ளன. 

மாநில பட்டியலில்  61 துறைகள் உள்ளன.இதில் உள்ளாட்சி நிர்வாகம்,சட்டம் & ஒழுங்கு,வேளாண்மை உள்ளிட்ட துறைகள் உள்ளன.

பொது பட்டியலில் 52 துறைகள் உள்ளன.மத்திய மாநில இரு அரசுகளுக்கும் பொதுவான துறைகள் தான் பொதுப்பட்டியலில் இருக்கும். இதில் இரு அர்சுகளும் சட்ட இயற்றலாம். இதில் முக்கியமான ஒன்று செய்தித்தாள்..கல்வி, காடுகள், எரிசக்தி, மின்சாரம் உள்ளிட்ட துறைகள் இதில் இருக்கின்றன.

 அட்டவணை-8

மொழிகள்  பற்றி கூறுவது
 எட்டாவது அட்டவணை மொழிகள் பற்றி கூறுகிறது.இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்பட்டாலும் 22 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் ஆகும்,

எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.  எட்டாவது அட்டவணையில் 21 ஆவது திருத்தம் 1967 மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.     

71-வது சட்டத்திருத்தம் 1992 மூலம் கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன.   92-வது சட்டத்திருத்தம், 2003 மூலமாக போடோ(அசாம்), டோஹ்ரி (காஷ்மீர்),  மைதிலி (பீகார்) மற்றும் சந்தாலி (வடகிழக்கு இந்தியா) ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன.   

 அட்டவணை-9

சட்டங்கள் & விதிகள்

9-வது அட்டவணை ஜமீந்தாரி,நிலசீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வகை சட்டங்கள் மற்றும் விதிகள் பற்றி கூறுகிறது.

அட்டவணை-10

கட்சித்தாவல் தடைச்சட்டம்

பத்தாவது அட்டவணை கட்சித்தாவல் தடைச்சட்டம் பற்றி கூறுகிறது.  

கட்சித்தாவல் தடைச்சட்டம் 52-வது சட்டத் திருத்தம் 1985 மூலம் கொண்டுவரப்பட்டது.  கட்சித்தாவல் சட்டம்  உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து குறிப்பிடுகிறது.  தகுதியின்மை செய்யும் அதிகாரம் சபாநாயகரிடம் உள்ளது.  

 அட்டவணை-11

பஞ்சாயத்து ராஜ் 

11-வது அட்டவணை பஞ்சாயத்து ராஜ் பற்றி கூறுகிறது.   இதில் 29 துறைகள்  உள்ளன.  பஞ்சாயத்து ராஜ் 73 வது சட்டத்திருத்தம் 1992 மூலம் கொண்டுவரப்பட்டது.  இது நடைமுறைக்கு வந்த நாள்  24.04.1993. இந்நாளே பஞ்சாயத்துராஜ் தினம் என கொண்டாடப்படுகிறது. 

இந்தியாவில் முதன்முதலாக பஞ்சாயத்து முறை அமலுக்கு வந்த மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.  

 அட்டவணை -12

நகராட்சி அமைப்புகள்

 
12வது அட்டவணை நகராட்சி அமைப்புகள் பற்றி கூறுகிறது.  நகராட்சி அமைப்புகள்  74 வது சட்டத்திருத்தம் 1992 மூலம் கொண்டுவரப்பட்டது. இதில்  18 துறைகள் உள்ளது. இது நடைமுறைக்கு வந்த நாள்  01.08.1993.  இது பற்றி கூறும் சரத்து 243 டபிள்யூ ஆகும்.
 



அரசியலமைப்பு அட்டவணைகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.