Ads Area

பொருளாதாரம் என்றால் என்ன? அதன் வரையறைகள் ஒரு பார்வை..

பொருளியல் என்றால் என்ன?

பொருளியல் என்ற சொல் ஆய்க்கனோமிக்ஸ் என்னும் பழமையான கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது ஆய்க்கோஸ் என்றால் இல்லங்கள் மற்றும் நேமோஸ் சென்றால் நிர்வாகம், வழக்கம் அல்லது விதி என்று பொருள்படும். 

பொருளியல் என்றால் இல்லங்களின் நிர்வாகம் என்று பொருள்படும். ஆரம்பத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட இந்த இயல் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருளியல் என்று ஆல்பிரட் மார்ஷல் அவர்களால் மாற்றம் செய்யப்பட்டது.

பொருளியலின் 4  வரையறைகள்:

1.தொன்மை காலத்தை உணர்த்தும் ஆடம் ஸ்மித் அவர்களின் செல்வ இலக்கணம்

2.புதியதொன்மை காலத்தை உணர்த்தும் ஆல்பிரட் மார்ஷல்அவர்களின் நல இலக்கணம் 

3.புதிய யுகத்தை உணர்த்தும் லயனல் ராபின்ஸ் அவர்களின் பற்றாக்குறை இலக்கணம் 

4.நவீன யுகத்தை உணர்த்தும் சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணம்

ஆடம் ஸ்மித் (செல்வ இலக்கணம்)

ஆடம் ஸ்மித் 1776 ஆம் ஆண்டு வெளியிட்ட "நாடுகளின் செல்வத்தின் இயல்பும் காரணங்களும் பற்றிய ஒரு ஆய்வு" என்ற தனது நூலில் பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய ஒரு அறிவியல் என்று வரையறுத்துள்ளார். 

அவர் ஒரு நாட்டின் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் அதிகரிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். 

அவரை பொறுத்தவரை சமூகத்திலுள்ள தனிமனிதர்கள் தங்கள் சுய லாபத்தை முன்னேற்றம் இருப்பதாக கருதுகிறார். 

தனிமனிதர்கள் அவ்வாறு செயல்படும் போது அவர்களை திரைக்குப் பின்னாலிருந்து ஒரு உந்து சக்தி வழிநடத்துகிறது.

ஒவ்வொரு மனிதனும் சுய ஆர்வத்தால் தூண்டப்படுவதாக ஸ்மித் கூறுகிறார். ஒவ்வொரு நபரும் தனது சுயநலனுக்காக உழைக்கிறான். 

உற்பத்தியின் அளவு அதிகரிக்க வேலை பகுப்பு முறையை (டிவிஷன் ஆஃப் லேபர்) அறிமுகப்படுத்துவதை ஆதரிக்கிறார். 

சமுதாய மற்றும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக சிறந்த பொருட்கள் கிடைக்க உதவுகின்றன. 

அதாவது அளிப்பு ஆற்றல் மிகுந்து காணப் பட்டால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கிறது.

மதம் மற்றும் ஆன்மீக மதிப்பீடுகள் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் ஆடம் ஸ்மித் தனது வரையறையை வழங்கியுள்ளார் எனவே ரஸ்கின் மற்றும் கார்லைல் போன்றோர் நீதிக்கு புறம்பான சுயநலத்தை கற்றுத் தருவதாக பொருளியல் வர்ணிக்கப்படுவது அறிவியல் என கூறியுள்ளனர்

 வேலைப் பகுப்பு முறை

வேலைப் பகுப்பு முறையை விளக்க ஆடம் ஸ்மித் தரும் உதாரணம் குண்டூசி தயாரிப்பு. குண்டூசி தயாரிப்பில் 18 பிரிவுகள் உள்ளன. வேலைபகுப்பு முறையில் ஒரு தொழிலாளி 4800 குண்டூசிகளைத் தயார் செய்யமுடியும்.(10 பேர் 48000 குண்டூசிகள், ஒரு ஆள் 4800 குண்டூசிகள்). அதுவே வேலைபகுப்பு இன்றி செய்தால் ஒரு தொழிலாளி ஒருநாளைக்கு ஒரு குண்டூசிதான் தயாரிக்க முடியும்.

ஆல்பிரட் மார்ஷல் (நல இலக்கணம்)

நல இலக்கணம் ஆல்பிரட் மார்ஷல் 1890 ஆண்டு வெளியிட்ட தன்னுடைய "பொருளியல் கோட்பாடுகள்" என்ற நூலில் பொருளியலை கீழ்வருமாறு வரையறுத்துள்ளார். அரசியல் பொருளியல் அல்லது பொருளியல் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கையை படிப்பதும் பொருள் சார்ந்த அதன் பொருட்டு தனி மனிதன் மட்டும் சமுதாயத்தின் செயல்பாட்டை குறித்து ஆராய்வது ஆகும். பொருளியல் ஒருபுறம் செல்வத்தைப் பற்றியும் முக்கியமாக மறுபுறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது என்கிறார்.

லயனல் ராபின்ஸ்(பற்றாக்குறை இலக்கணம் )

லயனல் ராபின்ஸ் "பொருளியல் அறிவியலின் தன்மையும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை" என்ற தமது நூலை 1932ஆம் ஆண்டு வெளியிட்டார் அவரைப் பொறுத்தவரையில் பொருள் என்பது விருப்பங்களும் கிடைப்பருமை உள்ள மாற்று வழிகளில் கிடைக்கக்கூடிய வளங்களும் அது தொடர்புடைய மனித நடவடிக்கைகளை பற்றி படிக்கும் ஒரு அறிவியல் பொருளியல் ஆகும் என்று குறிப்பிடுகிறார்

சாமுவேல்சன்(வளர்ச்சி இலக்கணம்)

அந்தோணி சாமுவேல்சன் பொருளியல் என்பது மனித சமுதாயமும் பணத்தை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலும் மாற்று வழிகளில் பயன்படுத்த பற்றாக்குறையான வளங்களைப் கொண்டு பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்து அவற்றை தற்காலத்திலும் எதிர்காலத்திலும் மக்களிடையேயும் சமுதாய குழுக்களுக்கிடையே உதவிக்காக எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தெரிவு செய்யும் ஒரு இயலே பொருளியல் என வரையறை செய்கிறார்


பொருளியல் என்றால் என்ன? அதன் வரையறைகள் ஒரு பார்வை... பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும். 

Bottom Post Ad

Ads Area