கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுதியைக் கொண்டதே அண்டம் (Galaxy) ஆகும். பூமி, நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள்,அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி, கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன் குழுக்கள் (galaxy) ஆகியன அனைத்தும் அண்டம் என்றே அழைக்கப்படுகிறது.அவ்வகையில், கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம் (Universe) எனப்படும். அதாவது பேரண்டம் என்பது விண்மீன்கள், கோள்கள் மற்றும் எரிமீன்கள் உள்ளடக்கியது ஆகும்.
புவிமைய மாதிரி (Geocentric Concept)
இப்பேரண்டத்தில் பல விண்மீன் தொகுதிகள் உள்ளன.தற்போது உள்ள வானியல் கருவிகள் கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னர் நம் முன்னோர்களால், சூரியன் சந்திரன் மற்றும் ஒரு சில கோள்கள் மற்றும் ஒரு சில விண்மீன்களை மட்டுமே காணமுடிந்தது.
அதன் அடிப்படையில் அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்திற்கும் பூமி மையமாக உள்ளது என்று அவர்கள் கருதினர். இதற்கு புவிமைய மாதிரி (Geocentric Concept)என்று பெயர்.
இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த கிரேக்க வானியலாளர் 'தாலமி' மற்றும் இந்திய வானியலாளர் ஆரியபட்டர் ஆகிய இவ்விருவர் உட்பட அக்காலத்தில் இருந்த பல வானியலாளர்களும் இந்த மாதிரியை நம்பினர்.

சூரியமைய மாதிரி (Heliocentric Concept)
பின்னர் போலந்து நாட்டை சேர்ந்த வானியலாளர் நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் விண்வெளியை கூர்ந்து நோக்கி சூரிய மாதிரியை வெளியிட்டார். இதன்படி சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியன் அமைந்துள்ளது என நம்பப்பட்டது.
நிக்கோலாஸ் கோப்பர்நிக்கஸ் என்பவரால், ஒரு சூரிய மைய அமைப்பின் கணித மாதிரி கோப்பர்நிக்கன் புரட்சிக்கு வழிவகுத்தது. அடுத்த நூற்றாண்டில், ஜோகன்னஸ் கெப்லர் நீள்வட்ட சுற்றுப்பாதைகளை அறிமுகப்படுத்தினார்.
மேலும் கலிலியோ கலிலி தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளை உலகுக்கு வழங்கினார்.
வில்லியம் ஹெர்ஷல், ஃபிரீட்ரிக் பெசல் மற்றும் பிற வானியலாளர்களின் ஆராய்ச்சிகள் மூலம், சூரியன் பிரபஞ்சத்தின் எந்த மையத்திலும் இல்லை என்பது தெரிய வந்தது.

தொலைநோக்கி கண்டுபிடிப்பு
1608 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் தொலைநோக்கி ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப்பிறகு வானியல் ஆராய்ச்சியில் ஒரு புரட்சி ஏற்பட்டது.
நாளடைவில் தொலைநோக்கிகள் மேம்பாட்டுக்கு பின்னர், நம் சூரியனானது பல கோடி விண்மீன்களை உள்ளடக்கிய பால்வெளி வீதி என்ற விண்மீன் திரளில் உள்ள ஒரு விண்மீனே என்ற புரிதல் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது பால்வெளி வீதியைப் போல பல லட்சக்கணக்கான விண்மீன் திரள்கள், விண்வெளியில் உள்ளன.

அண்டத்தின்கட்டுறுப்புகள்:
உண்மையில் அண்டம் எவ்வளவு பெரியது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் வானியலாளர் தாங்கள் பார்க்க முடிந்ததை வைத்து அண்டம் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் அளவு கொண்டது என கணிக்கின்றனர்.
1 ஒளி ஆண்டு = 9.4607×10^12கிலோமீட்டர். அண்டம் தற்போது விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் அதன் பெரும்பகுதி வெற்றிடமாகவே உள்ளது. அண்டத்திலுள்ள அனைத்து அணுக்களையும் ஒன்று சேர்த்தால் தற்போதுள்ள அண்டத்தில் 4% மட்டுமே வரும். அண்டத்தின் பெரும் பகுதி இருண்ட பொருள் (Dark Matter) மற்றும் இருண்ட ஆற்றலாகவே (Dark Energy) உள்ளன.
அண்டத்தின் வயது:

ஒரு மாபெரும் வெடிப்பிலிருந்து தான் இந்த அண்டம் தோன்றியது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பெரு வெடிப்புக் கொள்கையின் படி (Big Bang theory) அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் அதிக அடர்த்தி கொண்ட ஒரு ஒற்றை பருப்பொருளில் செறிந்திருந்தன.
ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரு வெடிப்பு ஏற்பட்டு, விண்மீன்களின் வடிவில் அனைத்துப் பொருள்களும் அனைத்து திசைகளிலும் வெடித்து சிதறின.
அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் பெரு வெடிப்பின் போது தோன்றிய அடிப்படைத் தன்மைகளான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றால் ஆனவை ஆகும்.
நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை உடலில் உள்ள கார்பன், கால்சியம் மற்றும் இரும்பு, மேலும் கணினிகளில் பயன்படும் சிலிகான் உள்ளிட்ட ஏனைய தனிமங்கள் அனைத்துமே விண்மீன்களின் உள்ளடக்கத்தில் உள்ளன.
விண்மீன்கள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் ஈர்ப்பு விசை தான், இந்த தனிமங்கள் அனைத்தையும் அவற்றின் உள்ளே ஈர்த்து வைத்துள்ளது. இந்த விண்மீன்கள் வெடித்து சிதறும் போது அவற்றின் உள்ளகத்தின் உள்ளே இருக்கும் தனிமங்கள் வெளியிடப்படுகின்றன.

சுமார் 10 முதல் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரு வெடிப்பிற்கு பிறகே விண்மீன் திரள்கள் உருவாயின என்று வானியலாளர்கள் கருதுகின்றனர். பெருவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஈர்ப்பு விசையினால் வாயு மேகங்கள் யாவும் ஈர்க்கப்பட்டு விண்மீன் திரள்களின் கட்டுறுப்புகளை உருவாக்கின.
வாயு, தூசு, கோடிக்கணக்கான விண்மீன்கள் மற்றும் அவற்றில் உள்ள சூரிய மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திரண்டதொரு அமைப்பு விண்மீன்திரள் எனப்படும். அண்டத்தில் சுமார் 100 பில்லியன் விண்மீன் திரள்கள் உள்ளன. அதன் அளவானது, 100 மில்லியன் முதல் 100 டிரில்லியன் வரையிலானது.
பேரண்டத்தின் தோற்றம் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 5 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.