ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப் பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது.
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
1600 ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகத்திற்காக இந்தியாவில் நுழைந்தது.
கூடாரத்திற்குள் நுழைந்த ஒட்டகம் போல படிப்படியாக வர்த்தகத்தோடு தன்னையும் வளர்த்துக் கொண்டது.
17ஆம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் உறுதியாக காலூன்றியது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் தனது வர்த்தகத்தை ஏற்படுத்தியது அதைச்சுற்றி ஆங்கிலேயர்கள் குடியேறினர். 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி போருக்குபின்னர், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்திடம் சரண் அடைந்தார்.இந்திய துணைக் கண்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி காலூன்றியது.1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.
1773ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின், தலைமை ஆளுனர், வாரன் ஹேஸ்டிங்ஸ் நேரடி நிர்வாகத்தில், கல்கத்தா நகரை தலைமையகமாகக் செயல்பட்டது.கிழக்கிந்திய கம்பெனி பல பங்குதாரர்களைக் கொண்ட, லாப நோக்கத்துடன் செயல்படும், தனியார் கூட்டு வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிர்வாகக் குழு மற்றும் தலைமையகம் லண்டனில் அமைந்திருந்தது. கிழக்கிந்திய கம்பெனி தனக்கென காவல் படை, இராணுவப் படை மற்றும் நீதிமன்றங்களைக் கொண்டது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்திட, பிட் இந்தியா சட்டம்,பிரிட்டன் அரசு நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மூன்று கர்நாடகப் போர்கள், நான்கு மைசூர் போர்கள் ஆகியவற்றின் விளைவாக ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
ஆங்கிலேயர் கைப்பற்றிய பகுதிகளில் இருந்த மன்னர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் மேலும் தங்கள் ஆட்சிப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜமீன்தார்கள் பாளையக்காரர்கள் ஆகியோரால் இத்தகைய கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
வரலாற்று ஆசிரியர்கள் இதை ஆரம்பநிலை எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.உடைமைகள் பறிக்கப்பட்ட விவசாயிகள் பழங்குடிகள் ஆகியோரின் எழுச்சியும் இத்தகைய கிளர்ச்சிகளை ஒட்டி தோன்றின.
வேளாண்மை நில வருவாய் மற்றும் நிதி நிர்வாகத்திலும் ஆங்கிலேயரின் செயல்பாடுகள் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களை வெறுப்படையச் செய்தது எனவே மன அழுத்தத்திலும் மன கொதிப்பிலும் இருந்த இந்திய ஆட்சியாளர்கள் களத்தில் இறங்கிய போது அவர்களுக்கு விவசாயிகள் கைவினைஞர்கள் ஆகியோரின் ஆதரவும் இயல்பாகவே கிடைத்தது.
மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு
ஹைதர் அலியின் எழுச்சி
மைசூர் விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையிலே ஒரு சிறு அரசாக இருந்தது.
1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்ததற்கு பிறகு உடையார் வம்சத்தினர் சுதந்திரமான ஆட்சியாளர் ஆயினர்.
1578 ராஜா உடையார் அரியணை ஏறினார்.
1610 இல் தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்து உடையார் வம்சத்தினர் ஆட்சி 1760 வரை தொடர்ந்தது.
1710 ல் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹைதர்அலி அதிகாரத்தை கைப்பற்றும் வரை உடையார்களின் ஆட்சி நீடித்தது.
ஹைதர் அலியின் தந்தை ஃபதே முகமது கோலார் பகுதியின் கோட்டை காவல் படை தளபதியாக இருந்தார். அவரது இறப்புக்குப் பின் ஹைதர் அலி தன் தலைமை பண்புகள் மூலம் படையின் உயர் பதவிகளை விரைவாக அடைந்தார்.
1755 ஆம் ஆண்டிற்குள் அவர் நூறு குதிரை படை வீரர்களையும் 2000 காலாட்படை வீரர்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பை பெற்றிருந்தார். மைசூரில் ராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கினார்.மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை மீட்டெடுத்தார்.இதற்காக அவர் பதே ஹைதர் பகதூர் (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றார்.
1760 இல் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தார். ஆனால் அவர் தனது சொந்த மண்ணில் மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார் அதற்கு பிறகு அவரே நடைமுறையில் மைசூரின் உண்மையான ஆட்சியாளர் ஆனார்.
1770 ல் மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டி கொல்லப்பட்டதற்கு ஹைதரலிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உருவானது. இந்த நிகழ்வுக்குப் பிறகு உடையார் வம்ச அரசர்கள் பெயரளவிலான ஆட்சியாளர்களாக ஆயினர். ஹைதர் அலியே உண்மையான அரசு அதிகாரத்திற்கு உரியவரானார்.
ஹைதர் அலியும் ஆங்கிலேயரும்:
ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி உரிமைகளை பெற்ற (வங்காளம் பீகார் ஒரிசா ஆகியவற்றில் முகலாய அரசுக்கு பதிலாக வரி வசூலிக்கும் உரிமை) பிறகு தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளை கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டி இருந்தது.
ஹைதர் அலியும் ஆங்கிலேயரும்:
ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி உரிமைகளை பெற்ற (வங்காளம் பீகார் ஒரிசா ஆகியவற்றில் முகலாய அரசுக்கு பதிலாக வரி வசூலிக்கும் உரிமை) பிறகு தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளை கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டி இருந்தது.
கம்பெனி போதுமான வலிமையுடன் இல்லாததால் இந்திய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து வந்தது. எனினும் கம்பெனி கர்நாடக அரசியல் விவகாரங்களினால் ஈர்க்கப்பட்டது.நவாப் பதவிக்காக தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்களே இதற்கு காரணமாகும்.
ஆங்கிலேய வணிகர்கள் இதை இந்திய அரசியலில் நேரடியாகத் தலையிடுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக கருதினார்கள் ஆனால் அவர்களின் முயற்சிக்கு ஹைதர் அலி, ஹைதராபாத் நிஜாம் ஆகிய சக்திகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன.இது ஆங்கிலேயருக்கு பின்னடவைத் தந்தன.
ஆங்கிலேயருக்கு எதிரான ஆரம்பகால கிளர்ச்சி பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
ஆங்கிலேயருக்கு எதிரான ஆரம்பகால கிளர்ச்சி பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.