பால்வெளி வீதி
சூரியன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் பால்வெளி வீதி விண்மீன் திரளில் உள்ளன. வானில் ஒரு பால்வண்ணப் பட்டை போன்று காணப்படுவதால் பால்வெளி வீதி (Milky Way Galaxy) என அழைக்கப்படுகிறது. பால்வெளி வீதியில் சுமார் 100 பில்லியன் விண்மீன்கள் உள்ளன.பால்வெளி வீதியின் விட்டம் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.பால்வெளி வீதியின் மையத்தில் இருந்து சுமார் 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரிய மண்டலம் (குடும்பம்) உள்ளது. பால்வெளி வீதி விண்மீன்திரள் சுருள் வடிவைக் கொண்டது.
பால்வெளி வீதியைத் தவிர பல விண்மீன் திரள்களும் உள்ளன. நமக்கு அருகில் உள்ள விண்மீன் திரளின் பெயர் அண்டிரோமீடா விண்மீன் திரள் ஆகும் (Andromeda Galaxy). இதன் தொலைவு 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள். சூரியன், விண்மீன் திரளின் மையத்தைச் சுற்றி வர 250 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
விண்மீன்கள்
விண்மீன் திரள்களின் அடிப்படைக் கட்டுறுப்புகள் விண்மீன்களாகும். வெப்பம், ஒளி, புற ஊதாக் கதிர்கள், X-கதிர்கள் உள்ளிட்ட பல கதிர் வீச்சுகளை விண்மீன்கள் உருவாக்குகின்றன.
அவை வாயு மற்றும் பிளாஸ்மா (அதிக சூடேற்றப்பட்ட பருப்பொருள் நிலை) ஆகியவற்றை அதிகமாக உள்ளடக்கியவை ஆகும். விண்மீன்கள் அனைத்தும் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பியுள்ளன. ஹைட்ரஜன் அணுக்கள் யாவும் இணைந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும் போது மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகின்றது.
அவை வாயு மற்றும் பிளாஸ்மா (அதிக சூடேற்றப்பட்ட பருப்பொருள் நிலை) ஆகியவற்றை அதிகமாக உள்ளடக்கியவை ஆகும். விண்மீன்கள் அனைத்தும் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பியுள்ளன. ஹைட்ரஜன் அணுக்கள் யாவும் இணைந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும் போது மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகின்றது.
ஒரு இருண்ட இரவில் சுமார் 3000 விண்மீன்கள் நமது கண்களால் காணமுடியும். வெப்பமான விண்மீன்கள் வெண்மையாகவோ அல்லது நீளமாகவோ தோன்றும். குளிர்வான விண்மீன்கள் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாகத் தோன்றும்
சூரிய மண்டலம்
சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் வான்பொருள்கள் (கோள்கள்,வால் விண்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள்) அனைத்தும் சேர்ந்ததே சூரிய மண்டலம் ஆகும்
சூரியன், இலத்தீன் மொழியில் ஸோல்(Sol) என்றும், கிரேக்க மொழியில் ஹீலியோஸ் (Helios) என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனின் விட்டம் ஏறத்தாழ 1,392,000 கிலோமீட்டர் (ஒரு மில்லியன் 392 ஆயிரம் கிலோமீட்டர்). பூமியைப்போல 1.3 மில்லியன் மடங்கு பருமன் கொண்டது. பூமியில் இருந்து ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனின் ஈர்ப்பு விசை பூமியை போல் 28 மடங்கு அதிகமாகும். புறப் பரப்பு வெப்பநிலை: 5500° செல்சியஸ் முதல் 6000° செல்சியஸ் வரை உள்ளக வெப்பநிலை: 1.5 மில்லியன்° செல்சியஸ் 75% ஹைட்ரஜனும், 25% ஹீலியமும், 70 தனிமங்களும் காணப்படுகின்றன.
சூரியன் ஒரு அச்சைப்பற்றி தன்னைத் தானே சுற்றுகிறது. சூரியன் ஒரு வாயுக்கோளம் என்பதால், நடுவரைப்பகுதி 25.4 நாள்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதி 36 நாட்களுக்கு ஒருமுறையும் சுழல்கின்றது. பால்வெளி வீதியின் மொத்த சுற்றளவு 1,00,000 ஒளி ஆண்டு தொலைவைக் கடக்க சூரியனுக்கு 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும். வட துருவத்தில் 186 நாட்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது. சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் அனைத்து நிறங்களும் உள்ளன. ஆனால் அவை அனைத்திலும் மஞ்சள் நிறமே அதிக செறிவுடன் காணப்படுகிறது. புவியின் வளிமண்டலத்தின் வழியே சூரிய ஒளி செல்லும் போது நீலம் மற்றும் ஊதா நிறங்கள் அதிகமாகவும், சிவப்பு நிறம் குறைவாகவும் அதிலுள்ள மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகிறகின்றன.
சூரியன் ஒரு அச்சைப்பற்றி தன்னைத் தானே சுற்றுகிறது. சூரியன் ஒரு வாயுக்கோளம் என்பதால், நடுவரைப்பகுதி 25.4 நாள்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதி 36 நாட்களுக்கு ஒருமுறையும் சுழல்கின்றது. பால்வெளி வீதியின் மொத்த சுற்றளவு 1,00,000 ஒளி ஆண்டு தொலைவைக் கடக்க சூரியனுக்கு 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும். வட துருவத்தில் 186 நாட்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது. சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் அனைத்து நிறங்களும் உள்ளன. ஆனால் அவை அனைத்திலும் மஞ்சள் நிறமே அதிக செறிவுடன் காணப்படுகிறது. புவியின் வளிமண்டலத்தின் வழியே சூரிய ஒளி செல்லும் போது நீலம் மற்றும் ஊதா நிறங்கள் அதிகமாகவும், சிவப்பு நிறம் குறைவாகவும் அதிலுள்ள மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகிறகின்றன.
நீள் வட்ட வடிவிலான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. சனிக்கோளிற்கும், யுரேனஸ் கோளிற்கும் இடையே உள்ள தொலைவு, பூமிக்கும் செவ்வாய் கோளிற்கும் இடையே உள்ள தொலைவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் உட்புற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்துள்ளதால் அவை நிலம்சார் கோள்கள் அல்லது பாறைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெளிப்புற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட பிற வாயுக்களால் நிரம்பிய அடர்வுமிகு வளிமண்டலத்தைக் கொண்டுள்ளதால் வாயுப் பெருங்கோள்கள் அல்லது வாயுக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு வெளிப்புற கோள்களுக்கும் வளையங்கள் உள்ளன.
புதன்
புதன்
இது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள். பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிக குளிருடனும் காணப்படும். சுற்றுக்காலம் 87.97 புவிநாட்கள் ஆகும் (சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்) சுழற்சிக்காலம் 58.65 புவி நாட்களாகும் (தன்னைத்தானே சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் சுழற்சிக்காலம் எனப்படும்). எப்போதும் கிழக்கு அல்லது மேற்கு திசையின் கீழ்வானத்தில் மட்டுமே காண இயலும்
வெள்ளி
சூரிய மண்டலத்தில் காணப்படும் கோள்களில் அதிக வெப்ப நிலை கொண்டது. நிலவிற்கு பிறகு, வானத்தில் தெரியும் மிகப் பிரகாசமான வான் பொருள் இதுவே ஆகும்.ஒரு ஆண்டு என்பது 224.7 புவிநாள்களாகும். எதிர்த்திசையில் சுழல்வதால், சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. இக்கோளினை க்ம் வெறும் கண்களால் பார்க்கலாம்.
பூமி
சுற்றுக்காலம் 365.25 நாட்கள். சுழற்சிக்காலம் 23.93 மணி. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால் விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும். பூமியில் 60 கிலோ கிராம் எடை கொண்ட ஒருவர் சூரியனின் மீது 1680 கிலோ கிராம் எடையைக் கொண்டிருப்பார். நிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக துருவ விண்மீன் அமைந்திருப்பதால் நகராமல் ஒரே இடத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. மற்ற அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றுகிறது. புவியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன் தெரிவதில்லை
செவ்வாய்
பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 வினாடி. ஒரு வருடம் என்பது 686.96 புவி நாட்கள்
வியாழன்
புவியை விட 11 மடங்கு பெரியதாகவும், 318 மடங்கு எடை கொண்டதாகவும் இருப்பதால் பெருங்கோள் என அழைக்கப்படுகிறது. ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடி. ஒரு வருடம் என்பது 11.862 புவிவருடங்கள் 3 வளையங்களும்,65 துணைக்கோள்களும் உள்ளன. கானிமீடு என்ற துணைக்கோள் தான் சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரியதாகும்
சனி
இக்கோள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வாயுக்கோள் ஆகும்.சுழற்சிக்காலம் 10.7 மணி. சுற்றுக்காலம் 29.46 புவிஆண்டுகள். 60 துணைக்கோள்கள் உள்ளன (பெரியது - டைட்டன்). புவியை விட 30 மடங்கு அடர்த்தி குறைவாக உள்ளதால் கனமற்றதாக உள்ளது
யுரேனஸ்
இது ஒரு குளிர்மிகு வாயுப்பெருங்கோள் ஆகும். சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள். சுழற்சிக்காலம் 17.2 மணி நேரம். மிகவும் சாய்ந்த சுழல் அச்சைக் கொண்டுள்ளதால் உருண்டோடுவது போல் தோன்றும். அசாதாரண சாய்வின் காரணமாக, கோடைக்காலம் 42 ஆண்டுகளும், குளிர்காலம் 42 ஆண்டுகளுமாக இருக்கும்
நெப்டியூன்
பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். மிகவும் காற்று வீசக்கூடிய கோள். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. 13 துணைக்கோள்கள் உள்ளன (பெரியது - டிரைட்டான்). சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே துணைக்கோள் டிரைட்டான் ஆகும்
சூரிய மண்டலத்தில் உள்ள பிற பொருள்கள்
சிறு கோள்கள்(Asteroids)
செவ்வாயின் சுற்றுப்பாதைக்கும், வியாழனின் சுற்றுப்பாதைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியில், கோள்கள் தோன்றிய போது உருவான லட்சக்கணக்கான பாறைத்துண்டுகள் சுற்றிவருகின்றன. இவையே சிறுகோள்கள் எனப்படும்
மிகப்பெரியது - செரஸ் (விட்டம் 946 கிலோமீட்டர்)
வால் விண்மீன்கள்(Comets)
அதிநீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருளே வால்விண்மீன்கள் எனப்படும். இவை சூரியனை நெருங்கும்போது ஆவியாகி, தலை மற்றும் வால் உருவாகின்றன. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும் வால் விண்மீன் ஹாலி வால்விண்மீன். இது கடைசியாக 1986 - ல் பார்க்கப்பட்டது. மீண்டும் 2062 - ல் தெரியும்
சூரிய மண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக்கிடக்கும் சிறு பாறைத்துண்டுகள் விண்கற்கள் எனப்படும்.அவை வளிமண்டலத்தை நெருங்கும் போது, அதன் ஈர்ப்பு விசையால் கவரப்படுகின்றன. வரும் வழியில், வளிமண்டல உராய்வினால் உருவாகும் வெப்பத்தின் காரணமாக இவை எரிந்து விடுகின்றன. ஒரு சில பெரிய அளவிலான விண்கற்கள் முழுவதுமாக எரியாமல் கற்களாக பூமியில் விழுகின்றன. அவை விண்வீழ்கற்கள் எனப்படும்.
துணைக்கோள்கள்
ஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைச் சுற்றி வரும் பொருள் துணைக்கோள் எனப்படும். நிலவு பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 27.3 நாள்கள். சுற்றுப்பாதையின் ஆரம் 3.85 × 105 கிலோமீட்டர். வினாடிக்கு 250 கிலோ மீட்டர் (மணிக்கு 9 லட்சம் கிலோ மீட்டர்) வேகத்தில் பால்வெளி வீதியைச் சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் காலம் காஸ்மிக் ஆண்டு எனப்படும். இது 225 மில்லியன் புவிஆண்டுகளுக்குச் சமம்.
பால்வெளி வீதியும் சூரிய குடும்பமும் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.