பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதன் தோன்றி தோராயமாக 40 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.
4700 ஆண்டுகளுக்கு முன் நகரங்கள் தோன்றின. வேளாண்மை தோன்றி 8000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனின் அறிவியல் பெயர் ஹோமோ சேபியன்ஸ் ஆகும்.
நமது பண்டைய இந்திய வரலாறு பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது.
கற்காலங்களுக்கு பிறகு செம்பு காலம், இரும்பு காலம் என காலங்கள் மாறியது.
பழைய கற்காலம் : கி.மு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் (பேலியோலித்திக்)
புதிய கற்காலம் : கி.மு (அ) பொ.ஆ.மு 10,000 - கி.மு (அ) பொ.ஆ.மு 4000 (நியோலித்திக்(
செம்பு காலம் : கி.மு (அ) பொ.ஆ.மு 3000 - கி.மு (அ) பொ.ஆ.மு 1500
இரும்பு காலம் : கி.மு (அ) பொ.ஆ.மு 1500 - கி.மு (அ) பொ.ஆ.மு 600.
(கி.மு என்பதை பொ.ஆ.மு எனக் குறிப்பிடலாம். பொ.ஆ.மு என்பது பொது ஆண்டுக்கு முன் என்பதாகும்)
சிந்து சமவெளி நாகரிகம்:
சிந்து சமவெளி நாகரிக காலம் உலகிலுள்ள பழைமையான நாகரிகங்களில் ஒன்று. இது செம்பு காலத்தை சேர்ந்தது ஆகும். எனவே இது செம்பு காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
மேலும் சிந்து சமவெளி நாகரிகத்தை ஹரப்பா நாகரிகம் எனவும் அழைக்கலாம். ஹரப்பா நகருக்கு முதன்முதலில் 1826-ஆம் ஆண்டு வருகை தந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சார்லஸ் மேஸன் என்பவர் சிந்து சமவெளி பகுதிகளில் கோட்டைகள் இருப்பதாக குறிப்புகள் எழுதினார்.
அம்ரி என்னும் ஹரப்பா பண்பாடு தொடர்புடைய இடத்திற்கு 1831-ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பர்ன்ஸ் வந்தார் .இவர் பஞ்சாப் மன்னருக்கு ஆங்கிலேய அரசின் 5 குதிரைகளை பரிசாக அளிக்க வந்தவர் என கூறப்படுகிறது. அவர் சிந்து சமவெளி பகுதிகளில் புதையுண்ட சுவர்களையும் படிக்கட்டுகளையும் கண்டார்.
இந்திய தொல்பொருள் துறையின் தந்தை அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் 1856 ஆம் ஆண்டு ஹரப்பா பகுதிகளில் அதாவது ராவி நதிக்கரையில் லாகூர் - முல்தான் இருப்புப் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார். அப்போது கிடைத்த செங்கற்களையும் மற்ற பொருட்களையும் அதன் தொன்மையை அறியாமல் இருப்புப் பாதை அமைக்க பயன்படுத்தினார்.1921 இல் டெல்லியைத் தலைமையகமாக கொண்ட இந்திய தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்த சர் ஜான் மார்ஷல் என்பவரின் முயற்சியால் ஹரப்பா பகுதியில் முதன்முதலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
பரவல்
சிந்து சமவெளி நாகரிகம் மூன்று நாடுகளில் பரவி இருந்தது. அவை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியின் பெயர் ரெட்கிளிப். இந்தியா ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியின் பெயர் டூரண்ட். இந்தியா சீனா எல்லை பகுதியின் பெயர் மக்மோகன்.
இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த மாநிலங்கள் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகும். சிந்து சமவெளி நாகரிக காலத்தை பல அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். சர் ஜான் மார்ஷல் கூற்றுப்படி சிந்துசமவெளி நாகரீக காலம் கிமு 3250 முதல் 2750 வரை ஆகும். இதுவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இந்தியாவை சார்ந்த டி.பி அகர்வால் என்பவர் சிந்துசமவெளி நாகரிக காலத்தை கிமு 2300 முதல் 1750 என வரையறுத்துள்ளார். பேர்சர்வ்ஸ் என்பவர் சிந்துசமவெளி காலத்தை கிமு 2000 முதல் 1500 வரை என வரையறுத்துள்ளார்.
ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ:
ஹரப்பா என்னும் சிந்து மொழி சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருளாகும். ஹரப்பா பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் ராவி நதிக்கரையில் மாண்ட்கோமாரி என்ற பகுதியில் அமைந்துள்ளது. கிபி 1921 இல் தயாராம் சகானி என்பவரால் ஹரப்பா நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஹரப்பா ஆகும். ஹரப்பாவில் ஆறு தானிய களஞ்சியங்கள் அமைந்திருந்தன.
மொஹஞ்சதாரோ என்ற சிந்து மொழிச் சொல்லின் பொருள் இறந்தவர்களின் மேடு அல்லது இறந்தவர்களின் நகரம் என்பது ஆகும். 1922-இல் ஆர். டி பானர்ஜி என்பவரால் மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கரையில் லார்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய நகரம் மொஹஞ்சதாரோ ஆகும்.
ஹரப்பா, மொகஞ்சதாரோ திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களாகும். தெருக்கள் நேராகவும் அகலமாகவும் கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் அமைந்திருந்தன. சிந்து சமவெளி நாகரீகத்தின் இரட்டை தலைநகரங்களாக ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 600 கிலோ மீட்டர் ஆகும்.
நகர கட்டட அமைப்பு :
சிந்து சமவெளி பகுதி சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன.
சிந்துவெளி நாகரீகத்தில், சிக்கல் தன்மை வாய்ந்த, உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கின்ற உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந்நாகரீக மக்களிடையே நிலவியதைக் காட்டுகின்றது. மொஹஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள், முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
மொஹஞ்சதாரோ கட்டிட அமைப்பு
1. தானியக்களஞ்சியம்
2. பெரியகுளம்
பெரியகுளத்தின் வடக்கு தெற்கு பகுதிகளில் படிகள் இருந்தன.
பெரிய குளங்களில் நீர் கசியாமல் இருக்க மெழுகு அல்லது ஜிப்சம் பூசப்பட்ட சுட்ட செங்கற்களால் குளங்கள் கட்டப்பட்டு இருந்தன.
பெரிய குளத்தில் ஆடை மாற்றும் அறை காணப்பட்டது. சமூக கூடமும் மாடிக்கட்டடமும் இருந்தன.
நகரங்களில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன.
குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.
பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள், சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றிலும் சிறந்தவையாகவும் காணப்படன.
சிந்துவெளி நாகரீகக்காலக் கட்டிடக்கலையின் தரம் பற்றி, அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
மொகஞ்சதாரோவின் நகர அமைப்பு பின்வருமாறு :
1. உயரமான கோட்டை பகுதி அல்லது சிட்டாடல் : கோட்டை பகுதியில் ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் வசித்து வந்தனர். மேலும் தானியக்களஞ்சியம் பெரிய குளமும் அங்கு தான் அமைந்திருந்தது.
2. தாழ்வான நகர பகுதி
3. ஊருக்கு வெளியே அமைந்த குடிசைப்பகுதி
சான்றுகள் :
நடனம் ஆடும் நாட்டிய மங்கையின் வெண்கல சிலை கிடைத்துள்ளது மற்றும் தாடியுடன் கூடிய ஆணின் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹரப்பா, மொஹெஞ்சதாரோ மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராகிகர்கி ஆகியவற்றில் காணப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைமைகளாகும்.
ஒரு சுடுமண் பொம்மையில் மதகுரு போல் தோற்றமளிக்கும் உருவம், துணியாலான பூ வேலைப்பாடுகள் கொண்ட மேலாடை அணிந்துள்ளது போன்ற சான்றுகள் கிடைத்துள்ளது.
செங்கற்களால் சுடப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக்களஞ்சியம் ஹரியானா மாநிலத்திலுள்ள ராகிர்கி தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தை சேர்ந்தது ஆகும்.
மொஹஞ்சதாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ராகிகர்கி ஆகும்.
மே 2012 இல் ராகிகர்கி தொல்லியல் களத்தை அழிவின் விளிம்பில் உள்ள ஆசியாவின் 10 தொல்லியல் களங்களில் ஒன்றாக உலகளாவிய பாரம்பரிய நிதியம் அறிவித்துள்ளது.
மே 2012 இல் ராகிகர்கி தொல்லியல் களத்தை அழிவின் விளிம்பில் உள்ள ஆசியாவின் 10 தொல்லியல் களங்களில் ஒன்றாக உலகளாவிய பாரம்பரிய நிதியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மயிலாடுதுறையில் 2007-இல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி ஒன்று கிடைத்துள்ளது.
சிந்து சமவெளி - ஹரப்பா - மொகஞ்சதாரோ பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
சிந்து சமவெளி - ஹரப்பா - மொகஞ்சதாரோ பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.