Ads Area

TNPSC - PODHUTAMIL - பிரித்து எழுதுக - பொதுத்தமிழ் -இலக்கணம் -


வணக்கம் நண்பர்களே.. சென்ற பதிவில் தொடரும் தொடர்பும் பாடத்தில் 


1.தொடரால் குறிக்கபெறும் சான்றோர் - பார்க்க
2. அடைமொழியால் அறியப்பெறும் நூல்கள் - பார்க்க

ஆகியவற்றை பார்த்தோம் அல்லவா.. இந்தப்பகுதியில் பிரித்தெழுதுக பற்றிப் பார்ப்போம்..
 
 TNPSC  பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் இலக்கணப்பிரிவில் கேட்கப்படும் வினா பிரித்தெழுதும் வினா ஆகும்.எளிமையான பாடம் இது.ஆனால் இதில் கடினமான சில வார்த்தைகளும் உண்டு, அந்த வார்த்தைகளைப் பிரிக்கப் பழகிக்கொண்டால் இப்பாடம் மிகவும் எளிதுதான்.

பிரித்தெழுதல் என்றால் என்ன?           

கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை  இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளாகப் பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து எழுதும் போது பிரிக்கப்பட்ட இரண்டு சொற்களும் தனித்தனியாக நின்று பொருள் தர வேண்டும்.அதுவே சரியான முறையில் பிரித்தெழுதப்பட்ட வார்த்தைகள் ஆகும்.

பள்ளிப்பருவத்திலேயே இது மிகவும் சுலமான பகுதி.எனவே இதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை.நிறைய வார்த்தைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.அந்த வார்த்தைகளை சரியான முறையில் பிரித்து பழகுங்கள்..

ஒரு சொல்லை இரண்டாகப் பிரிக்கலாம்.. சில சொற்களை மூன்றாகப் பிரிக்கலாம்


எடுத்துக்காட்டு

 
 எளிமையான சொற்கள்:

நன்மொழி     -     நன்மை + மொழி
எனக்கிடர்     -     எனக்கு + இடர்
நல்லறம்     -     நன்மை + அறம்
பைந்தளிர்   -      பசுமை + தளிர்


கடினமான சொற்கள்:


ஆண்டகை - ஆண் +தகை
நீனிலம் - நீள் + நிலம்

வேப்பங்காய் - வேம்பு + காய்
சாந்துணை - சாகும் + துணை


மூன்று சொற்களாகப் பிரித்தல்


நற்செங்கோல் - நன்மை + செம்மை + கோல்
இன்னரும்பொழில் - இனிமை + அருமை + பொழில்
செங்காலன்னம் - செம்மை + கால் + அன்னம்

வினா எப்படி கேட்கப்படும்?

                      சேர்த்தெழுதப்பட்ட ஒரு சொல் கொடுக்கப்பட்டிருக்கும் அதற்கு கீழே நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் அந்தச் சொல் நான்கு வகையாக பிரித்துக் காட்டப்பட்டிருக்கும். அந்த நான்கில் எது சரியான முறையில் பிரித்துக் காட்டப்பட்டிருக்கிறது  என்பதை குறிப்பிட்டுக் காட்ட வேண்டும்.

அசல் வினாத்தாள்:




எந்தப் புத்தகத்தில் படிக்கலாம்?


ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் பிரித்தெழுதுக சேர்த்தெழுதுக வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறலாம்.


பிரித்தெழுதுவதற்கு கடினமானச் சொற்களாகக் கருதப்படுகின்ற பல சொற்களைப் பிரித்து பயிற்சி மேற்கொள்ள பாடநூல்களிலிருந்து தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.அவற்றையெல்லாம் வாசித்து  பயிற்சி பெற இங்கே செல்லவும்.








 

TELEGRAM

YOUTUBE

FACEBOOK

EMAIL


Bottom Post Ad

Ads Area