அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி
டி.என்.பி.எஸ்.சி பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் பகுதி - அ இலக்கணப்பகுதியில் இடம் பெற்றிருக்கக்கூடிய அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி என்பது பற்றியும் அப்பகுதியிலிருந்து எவ்வாறு வினாக்கள் கேட்கப்படும் என்பதையும் பார்ப்போம்..
அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் என்றால் என்ன?
நான்கு சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றை அகராதிப்படி வரிசைப் படுத்தி அமைப்பதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் ஆகும்.
நிலை -1
முதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.
நிலை-2
முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்..
நிலை-3
உயிர் மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்..
குறிப்பு:
எக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது..
மாதிரி வினாக்கள்:
நிலை-1
எளிமை,ஊக்கம்,இனிமை,ஆயிரம்
விடை:
ஆயிரம்,இனிமை,ஊக்கம்,எளிமை
நிலை-2
தத்தை,தண்ணீர்,தந்தம்,தங்கை
விடை:
தங்கை,தண்ணீர்,தத்தை,தந்தம்
நிலை-3
கோமாளி,காலை,கலை,கொக்கு
விடை:
கலை,காலை,கொக்கு,கோமாளி
இதில் சில கேள்விகள் எளிதாகவும் சில கேள்விகள் சற்று கடினமானதாகவும் இருக்கும். இதற்கு எளிதாக சரியான விடைகளை எழுத வேண்டும் என்று நினைக்கும் தோழர்கள்,இது போல நிறைய வினாக்களுக்கு விடை எழுதி பழகிக் கொள்ளுங்கள்..
தேர்வில் எப்படி வினா கேட்கப்படும்?
கடந்த ஆண்டு குரூப் 4 ல் கேட்கப்பட்ட வினா இது..
தேர்வில் எப்படி வினா கேட்கப்படும்?
கடந்த ஆண்டு குரூப் 4 ல் கேட்கப்பட்ட வினா இது..
எங்கு படிக்கலாம்?
ஏற்கனவே படித்த, தெரிந்த சொற்களை அகர வரிசைப்படுத்திப் பழகினாலே போதும் இதற்கு தனியாக நேரமெடுத்து படிக்க தேவையில்லை.
ஏற்கனவே படித்த, தெரிந்த சொற்களை அகர வரிசைப்படுத்திப் பழகினாலே போதும் இதற்கு தனியாக நேரமெடுத்து படிக்க தேவையில்லை.
குறிப்பு:
அகர வரிசை பிழையின்றி சீர்படுத்த 'அ' முதல் 'ன்' வரையிலான தமிழ் அரிச்சுவடியை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..