எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , » சம்பந்தர் பற்றிய செய்தி குறிப்புகள்

சம்பந்தர் பற்றிய செய்தி குறிப்புகள்

சம்பந்தர்

 

பெற்றோர்

சிவபாத இருதயர் – பகவதியார்

சிறப்பு பெயர்

ஆளுடையபிள்ளை, காழிவள்ளல், திராவிட சிசு

பாடல்களின் எண்ணிக்கை

1600 பதிகங்கள்

  • சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சோழ நாட்டில்சீர்காழி என்னும் ஊரில் அந்தணர் மரபில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகவாய்த் தோன்றினார்.
  • இவர் “ஆளுடையபிள்ளை” என்றும் “காழிவள்ளல்” என்றும் அழைக்கப் பெறுவர்.
  • இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தரானார்.
  • தமிழ்நாட்டின் பல தலங்களுக்கும் சென்ற இவர் இறுதியில் திருப்பெருமண நல்லூரில் தன் பதினாறாவது வயதில் மணக்கோலத்துடன் இறைவனுடன் கலந்தார்
  • சைவ சமயம் இந்நாட்டில் மீண்டும் தழைக்கப் பாடுபட்டவர்
  • “வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” வந்த இவர் “வேத வேள்விளை நிந்தனை செய்துழல்பவர்களை” வாதில் வென்றார்
  • பெரியபுராணம் “பிள்ளைபாதி; புராணம் பாதி” என்று இவருடைய வரலாற்றிற்கே சீரிய இடம் தருகிறது
  • நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டினைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குக் கொணர்ந்தார்.
  • கூன்பாண்டியன் என்றழைக்கப்படும் அப்பாண்டியரின் மனைவி மங்கையர்கரசியாரும், அமைச்சர் குலச்சிறை யாரும் சிறந்த சிவபக்தர்கள். இந்நிகழ்ச்சியால் அரசியல் செல்வாக்குச் சைவ சமயத்திற்குக் கிட்டிற்று; சமயமும் வளர்ந்தது.
  • ஆதிசங்கரர் இவரைத் “திராவிட சிசு” என்பர்.
  • “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்ற புகழ்ந்தவர் சுந்தரர்
  • “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றியவர்” என்று புழந்தவர் சேக்கிழார்
  • 7 கோள்களைப் பற்றி பாடியவர்.
  • இவர் இயற்றிய 384 பதிகங்களில் இயற்கை வருணனையும் தத்துவக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.

 


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template