Ads Area

TNPSC | வாணிதாசன் பற்றிய செய்திகள் | தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

 வாணிதாசன்

இயற்பெயர்

அரங்கசாமி (எ) எத்திராசாலு

பெற்றோர்

திருக்காமு – துளசியம்மாள்

காலம்

22.07.1915 – 07-08-1974

பட்டப்பெயர்

கவிஞரேறு, பாவலர் மணி

சிறப்பு பெயர்

வேர்ட்ஸ் வொர்த்

புனைப்பெயர்

ரமி



சிறப்பு  : ரஷியம்,ஆங்கிலம் போன்ற மொழிகளில் இவரது பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்.

"தமிழச்சி", "கொடிமுல்லை" ஆகிய சிறு காப்பியங்களையும், 'தொடுவானம்', 'எழிலொவியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார். எனினும் 'வாணிதாசன் கவிதைகள்' என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் ஆகிய சிறப்புப் பெயர்களையும் 'ரமி' என்னும் புனைப்பெயரும் கொண்டவர். 

இவர் பிரெஞ்சு மொழியிலூம் புலமை பெற்றவர். 'தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கியுள்ளார்.

பாரதிதாசன் அடியொட்டிப் பாடிய கவிஞர்களை அக்காலத்தே வெளிவந்த 'பொன்னி' இதழ், 'பாரதிதாசன் பரம்பரை' என்னும் தலைப்பிட்டு அறிமுகப்படுத்தியது. பாரதிதாசன் பரம்பரையினருள் வாணிதாசன் குறிப்பிடத்தக்கவர்.

வாணிதாசனின் கவிதை வளத்தையும் உள்ளத்தையும் அறிந்தே திரு. வி. க. 'திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்', என்றார். மயிலை சிவமுத்து, 'தமிழ்நாட்டுத் தாகூர்' வாணிதாசனார் என்று புகழ்ந்தார்.

படைப்புகள்:

      தமிழச்சி
      கொடி முல்லை   
      எழில் விருத்தம்
     தொடுவானம்   
     எழிலோவியம்
     குழந்தை இலக்கியம்
     சிரித்த நுணா
     இரவு வரவில்லை
     இன்ப இலக்கியம்
     இனிக்கும் பாட்டு
     தீர்த்த யாத்திரை
     பாட்டரங்கப் பாடல்கள்
     பாட்டு பிறக்குமடா
     பெரிய இடத்துச் செய்தி
      பொங்கற்பரிசு
    



Bottom Post Ad

Ads Area