எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » TNPSC - அரேபியர்களின் படையெடுப்பு - Invasion of Arabians

TNPSC - அரேபியர்களின் படையெடுப்பு - Invasion of Arabians

வணக்கம் நண்பர்களே! இதன் முந்தைய பகுதியில் வட இந்திய அரசுகள் - ராஜபுத்திரர்கள் பாடத்தைப் பார்த்தோம் அல்லவா!.. (பார்க்காதவர்கள் பார்க்க)


இஸ்லாம் தோற்றம்

        இஸ்லாம் மதத்தின் தோற்றமும், வளர்ச்சியும் உலக வரலாற்றில் ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தவர் முகமது நபி (கி.பி.570- 632) ஆவார். இஸ்லாம் சமயம் முதன்முதலாக பாலைவன நாடுகளில் வளரத் தொடங்கியது. அரேபியர்கள்தான் முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்கள். இஸ்லாமியர்களை வலிமை மிக்க அரசியல் இயக்கமாக ஆசியாவில் நிலை நிறுத்திவர்கள்,  அரேபியர்களே ஆவர். 

        அரேபியர்களைத் தொடர்ந்து பாரசீகர்கள் இஸ்லாம் மதத்தை வலிமையுடன் வளரச் செய்தார்கள். துருக்கியர்கள் இஸ்லாமிய மதத்தை மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் பரவ செய்து, உலக மதங்களில் ஒரு முக்கிய மதமாக வளர செய்துள்ளனர்.

இந்தியாவுக்கும் அரேபியாவுக்குமான தொடர்பு

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, கடல்வழி வணிகத்தில் அரேபியர் ஈடுபட்டிருந்தனர். இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரைகளுடன்  கடல்வழி வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிந்தியாவின் மேற்கு (மலபார்), கிழக்கு (சோழமண்டல) கடற்கரையில் குடியேறினர். மலபார் பெண்களை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியமர்ந்த அரேபியர், "மாப்பிள்ளை" என்று அழைக்கப்பட்டனர். 

 சிந்து மீது அரபு படையெடுப்பு

காரணம்:

செல்வ வளம் கொழிக்கும் சிந்து பகுதியின் துறைமுகங்கள் அரேபியர்களை கவர்ந்தது. எனவே சிந்து பகுதியில் அரேபியநிர்வாகத்தை நிலைநாட்ட முடிவு செய்தார்கள். கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தத் தவறிய சிந்து அரசர்கள் மீது கோபமடைந்து அதனையே உடனடிக் காரணமாக கொண்டு சிந்து பகுதியின் மீது படையெடுத்தனர்.

ஈராக்கின் அரபு ஆளுநர் அல்ஹஜாஜ்- பின் - யூசுஃப், கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி, சிந்து அரசர்களை எதிர்த்து,  தரை வழி கடல் வழி என இரு தனித்தனி படைப்பிரிவுகளை அனுப்பினார். ஆனால் இரண்டு படைப்பிரிவுகளும் தோற்றன. அவற்றின் தளபதிகளும் கொல்லப்பட்டனர். 

முகமது - பின் - காசிம்

கி.பி. 711 ஆம் ஆண்டு ஈராக்கின் அரபு ஆளுநரான அல்ஹஜாஜ், கலிபா  வாலித் அனுமதியுடன் 6000 சிரியா நாட்டுக் குதிரைகள், 6000 ஒட்டகங்கள், 3000 பாக்டீரிய நாட்டு ஒட்டகங்கள், 2000 காலாட் படை, பாறைகளை எரியும் இயந்திரம் ஐந்து ஆக சுமார் 25000 வீரர்களைக் கொண்ட ஒரு முழுமையான ராணுவத்தை 17 வயது நிரம்பிய தனது மருமகன் முகமது - பின் -  காசிம் தலைமையில் அனுப்பினார்.

காசிமின் படை, பிராமணபாத் வந்து சேர்ந்தபோது சிந்து பகுதியில் தாகிர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.. பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியை தாகிரின் முன்னோர்கள் பௌத்த அரச வம்சத்திடமிருந்து கைப்பற்றி ஆட்சி நடத்தி வந்தனர். ராணுவம் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் பிராமணர்களே இருந்தனர். இதனால் அந்நகரம் பிராமணாபாத் எனப்பட்டது.

சிந்துவின் மன்னர் தாகிர் படையுடன் முகமது பின் காசிமின் படை போரிட அப்போரில் போரில் காசிம் படையே வென்றது. மேலும் முல்தான் நகரமும் கைப்பற்றப்பட்டது. காசிம், முல்தானில் நிறைய செல்வ வளங்களை பெற்றமையால் முல்தானை தங்கநகரம் என அழைத்தார்.

வீர பெண்மணிகளின் தற்காப்பு 

சிந்துவின் மன்னர் தாகிர் தோற்றதால், ரேவார் கோட்டைக்குள் இருந்த அவரது மனைவி ராணிபாய் மற்றும் அரண்மனை பெண்களும் தற்காப்பு போரில் இறங்கினார். அது தோல்வியடையவே ஜவ்ஹர் என்ற வழக்கப்படி, எதிரியிடம் அகப்படாமல் இருக்க, தீயை மூட்டி அதில் குதித்து உயிர் துறந்தனர்.

நிர்வாகம் அமைப்பு

முகமது பின் காசிம், சிந்துவையும், முல்தானையும் நிர்வகிக்கும் பொருட்டு அவற்றை மாவட்டங்கள் எனப்படும் இக்தார்களாக பிரித்தார். இக்தார்களின் தலைவர்களாக தமது படை அதிகாரிகளை நியமித்தார். நிர்வாகத்தில் இந்து அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர் இவர்கள் இக்தாரின்  உட்பிரிவுகளை நிர்வாகம் செய்தனர். முஸ்லிம் அல்லாதோர் மீது ஜிசியா வரியானது கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டது. 

முகமது பின் காசிமின் முடிவு 

கலீபா வாலித் என்பவருக்கு பின் சுலைமான் கலீபா என்பவர் பதவிக்கு வந்தார். இவர் ஈராக்கின் ஆளுநரான அல்ஹஜாஜின் எதிரியாவார். எனவே இவர், அல்ஹஜாஜின் மருமகனான முகமது பின் காசிமை பதவியிலிருந்து நீக்கி, கைது செய்து மெசபடோமியாவிக்கு அனுப்பினார். அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சிந்து, முல்தான் பகுதி 150 ஆண்டுகளுக்கு மேலாக கலீபா ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் கலிபாவின் ஆட்சி மெல்ல மெல்ல மறைந்தது.

அரேபிய படையெடுப்பின் விளைவுகள்

அரேபியர்கள் சிந்துவை  வென்றதன் மூலமாக பிற்காலத்தில் இஸ்லாமியர் இந்தியா வருவதற்கு வித்திட்டனர் எனலாம். இந்தியர்களிடமிருந்து, நிர்வாக முறை, வானவியல், இசை, ஓவியம், மருத்துவம், கட்டிடக்கலை ஆகியவற்றை கற்றுக் கொண்டனர். இந்திய தத்துவங்கள், இந்திய எண்கள், வானவியயல் கலை ஆகியன அரேபியர் மூலமாக ஐரோப்பா வரை பரவியது.

அரேபிய படையெடுப்பின் தாக்கங்கள்

பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மசித்தாந்தம் என்ற சமஸ்கிருத நூலானது அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அரேபிய நூல்களில் இந்திய அறிவியலாளர்களான  பஹலா, மானகா, சிந்துபாத் கியோர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாக்தாத்நகரின் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக  தாணா என்ற இந்தியர் நியமிக்கப்பட்டிருந்தார். கலீபா ஹாரூன் - அல் - ரஷித் என்பவருக்கு இருந்த ஆபத்தான நோயை மானகா என்பவர் குணப்படுத்தினார்..

அரேபியரின் சிந்து படையெடுப்பு ஆனது ஒரு விளைவுகளற்ற வெற்றியாகவே குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது நாட்டின் எல்லைப் பகுதியை மட்டுமே தொட்டதோடு காசிமின் படையெடுப்பிற்கு பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் பல்வேறு முற்றுகைகள் இன்றி அமைதியாக இருந்தது..

அரேபியர்களின் படையெடுப்பு பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template