TNPSC - PODHUTAMIL - ஒருமை பன்மை கண்டறிதல் - இலக்கணம்





ஒருமை பன்மை என்றால் என்ன?


ஒன்றை மட்டும் குறிப்பது ஒருமை. பலவற்றை குறிப்பது பன்மை..


உதாரணங்கள்:


ஒருமை

பன்மை

வீடு

வீடுகள்

அரசன்

அரசர்கள்

பாடல்

பாடல்கள்

காடு

காடுகள்

குரங்கு

குரங்குகள்


இது அடிப்படையான ஒன்று.. இதென்னங்க சின்னபசங்களுக்கு சொல்ற மாதிரி இருக்குன்னு நினைக்க வேண்டாம்.. இதுதான்  அடிப்படை.. 

தேர்வர்கள் ஒருமை பன்மை வாக்கியங்களில் தவறு செய்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பகுதியில் கேள்விகள் கேட்கப்படுகின்றன..


எந்த மாதிரி வினாக்கள் கேட்கப்படும்?


சரியானவற்றை கண்டுபிடி?


அ)ஆடுகள் மேய்ந்தன
ஆ)ஆடுகள் மேய்ந்தது
ஆ)ஆடு மேய்ந்தன
இ)ஆடுகள் மேய்ந்தனர்

இவ்வாறாக வினா இருக்கும்.. நன்றாக ஒருமை பன்மை தெரிந்தவர்கள் சரியான விடையை கண்ணிமைக்கும் நேரத்தில் குறித்து விடுவீர்கள்.. இதில் குழப்பமுள்ளவர்கள்.. சொல்லிப்பார்த்து சொல்லிப்பார்த்து விடையளிப்பீர்கள்..

சரி.. இதில் எது சரி? எதெல்லாம் தவறு?

எப்படி கண்டு பிடிக்கலாம்?

முதலில் பால் வகைகளை அறிந்திருப்பது அவசியம்

பால் ஐந்து வகைப்படும் 

  • ஆண்பால் 
  • பெண்பால் 
  • பலர்பால் 
  • ஒன்றன்பால் 
  • பலவின்பால் 
இதில் ஆண்பால், பெண்பால், பலர்பால் இந்த மூன்றும் உயர்திணை பால்களாகவும் ஒன்றன்பால், பலவின் பால் என இரண்டும் அஃறிணை பால்களாகவும் வகைபடுத்தப்பட்டுள்ளன.

உயர்திணை என்றால் என்ன?

உயர்ந்த குலம், சிறந்த ஒழுக்கம், பகுத்தறிவு ஆகியவைகளை கொண்டவர்கள் உயர்திணை எனப்படுவார்கள்.. 

உதாரணம்: மக்கள் 

அஃறிணை என்றால் என்ன?

உயர்வு இல்லாத ஒழுக்கம் கொண்டவைகள் அஃறிணை எனப்படும். அதாவது உயர்தனி அல்லாத ஏனைய உயிருள்ளவை உயிரற்றவை எனப்படும். 

உதாரணம்: நாய், மேசை, நாற்காலி

சரியான வாக்கியங்கள் எவை?

  • ஆண்பால் - முருகன் விளையாடினான்.
  • பெண்பால் - மணிமேகலை பாடினாள்.
  • பலர்பால் - ஆண்களும் பெண்களும் நடனமாடினார்கள்
  • ஒன்றன்பால் - மாடு புல்லை மேய்கிறது 
                                         பேருந்து வேகமாக வருகிறது
  •  பலவின்பால் -  மான்கள் துள்ளிக் குதிக்கின்றன
                                           புத்தகங்கள் அறிவை ஊட்டுகின்றன


மேற்கண்ட வாக்கியங்களில் எங்கு 'னான்' வரவேண்டும், எங்கு 'னாள்' வரவேண்டும், எங்கு 'னார்கள்' வரவேண்டும், எங்கு 'கிறது' வரவேண்டும், எங்கு 'கின்றன' வரவேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டால் ஒருமை பன்மைகளை தெரிவாகத் தெரிந்து எப்படி வினா கேட்டாலும் சரியான பதிலை வட்டமிடலாம்..

 அசல் வினா:


ஓரெழுத்து ஒருமொழி கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE.