எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » TNPSC - PODHUTAMIL - சந்திப்பிழை நீக்கி எழுதுதல் - பொதுத்தமிழ் - இலக்கணம் -

TNPSC - PODHUTAMIL - சந்திப்பிழை நீக்கி எழுதுதல் - பொதுத்தமிழ் - இலக்கணம் -

வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் பொருந்தாச்சொல்லைக் கண்டறிதல்  பற்றி பார்த்தோம்.(பார்க்காதவர்கள் பார்க்க)

இந்தப்பகுதியில் சந்திப்பிழை நீக்கி எழுதுதல் பற்றி பார்க்கலாம் வாங்க..

பிழை நீக்கி எழுதுதல்

கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் அல்லது வாக்கியத்தில் உள்ள பிழைகளைக் களைந்து எழுதுதல்

ஐந்து வகையான பிழைகளைப் பற்றி பார்க்கலாம்..

1. சந்திப்பிழை திருத்தி எழுதுதல்
2. மரபுப்பிழை நீக்கி எழுதுதல்
3. வழூஉச் சொல் நீக்கி எழுதுதல்
4. வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்
5. ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்1.சந்திப்பிழை நீக்கி எழுதுதல்

இரண்டு வார்த்தைகளை சேர்த்து எழுதும்பொழுது  எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால்,எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம்.

வல்லினம் மிகும் இடங்கள்

1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
(எ.கா)அந்தத் தோட்டம்
             இந்தக் கிணறு
             எந்தத் தொழில்
             அப்படிச் செய்தான்
             இப்படிக் கூறினான்
             எப்படிப் பார்ப்போம்
-------------------------------------------------------------------------------------------------------------
2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகும்.

(எ.கா)பொருளைத் தேடினான்
             புத்தகத்தைப் படித்தான்
             ஊருக்குச் சென்றான்
            தோழனுக்குக் கொடு
------------------------------------------------------------------------------------------------------------
3. ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.

(எ.கா)படிப்பதாகச் சொன்னார்
            போய்ச் சேர்ந்தான்
--------------------------------------------------------------------------------------------------------------
4. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

(எ.கா)சாலப் பேசினான்
             தவச் சிறிது
------------------------------------------------------------------------------------------------------------
5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.

(எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி
------------------------------------------------------------------------------------------------------------
6. ஒரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின் மிகும்.
(எ.கா)தைப்பாவை
            தீச்சுடர்
------------------------------------------------------------------------------------------------------------
7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.
(எ.கா)ஓடாப்புலி, வளையாச் சொல்
----------------------------------------------------------------------------------------------------------
8. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
(எ.கா)பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
------------------------------------------------------------------------------------------------------------
9. முற்றியலுகர சொற்களின் பின் வல்லினம் மிகும்
(எ.கா)திருக்குறள், பொதுச்சொத்து
-----------------------------------------------------------------------------------------------------------
10. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
(எ.கா)மழைக்காலம், பனித்துளி
------------------------------------------------------------------------------------------------------------
வல்லினம் மிகா இடங்கள்

1. வினைத்தொகையில் வில்லினம் மிகாது
(எ.கா)விரிசுடர், பாய்புலி
-------------------------------------------------------------------------------------------------------------
2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
(எ.கா)காய்கனி, தாய்தந்தை
------------------------------------------------------------------------------------------------------------
3. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது
(எ.கா)தமிழ் கற்றார், கதை சொன்னார்.
------------------------------------------------------------------------------------------------------------
4. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது
(எ.கா)கற்க கசடற, வாழ்க தமிழ்
-------------------------------------------------------------------------------------------------------------
5. விளித்தொடரில் வலி மிகாது
(எ.கா)கண்ணா பாடு, அண்ணா பாடு
------------------------------------------------------------------------------------------------------------
6. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களுக்குப்பின் வலி மிகாது...
(எ.கா)அத்தனை பழங்கள், இத்தனை பழங்கள், எத்தனை கால்கள்
----------------------------------------------------------------------------------------------------------
7. இரட்டைக் கிளவியிலும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது.
(எ.கா)கலகல, பாம்பு பாம்பு
------------------------------------------------------------------------------------------------------------
8. அவை இவை எனும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
(எ.கா)அவை சென்றன, இவை செய்தன
------------------------------------------------------------------------------------------------------------
9. அது இது எனும் எட்டுச் சொற்களின் பின் வலி மிகாது
(எ.கா)அது பிறந்தது, இது கடித்தது
------------------------------------------------------------------------------------------------------------
10. எது, அது எனும் வினைச்சொற்களின் பின் வலி மிகாது
(எ.கா)எது பறந்தது, யாது தந்தார்
-----------------------------------------------------------------------------------------------------------
 அடுத்தப் பகுதியில் மரபுப் பிழை நீக்குவதைப் பற்றி காண்போம்..
----------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

 இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.

(எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி

 உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன?

     ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அவற்றை விளக்கும் பயனும் மறைந்து வருவது உடனும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

(எ.கா)

      நீர்க்குடம்

      அதாவது நீரை உடைய குடம்.இதில் 'ஐ' என்னும் 2 ம் வே.உருபும் 'உடைய' என அதை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

நீர்க்குடம்                                          -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்         
                                                                உடன் தொக்க தொகை
மட்பானை                                        -மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
                                                                உடன் தொக்க தொகை
கூலிவேலை                                   -நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
                                                                உடன் தொக்க தொகை
தொட்டித் தண்ணீர்                       -ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்
                                                                உடன் தொக்க தொகை
வீட்டுப்பூனை                                 -ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
                                                                உடன் தொக்க தொகை

        ஆறாம் வேற்றுமைத் தொகையில் பயன் தரும் சொல் மறைந்து வருவதில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
--------------------------------------------------------------------------------------------------------------
பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

Template Design by Creating Website Published by Mas Template