எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , » TNPSC - PODHUTAMIL - வழூஉச்சொல் மற்றும் வேற்றுமொழிச்சொல் களைதல்

TNPSC - PODHUTAMIL - வழூஉச்சொல் மற்றும் வேற்றுமொழிச்சொல் களைதல்


கடந்த பதிவில் பிழைதிருத்தம் பகுதிகளில் மரபுப்பிழை நீக்குதல் ஆகியவற்றைப் பார்த்தோம்.. இதில்  வழூஉச்சொற்களைத் திருத்தி தமிழ்ச்சொற்களும் வேற்றுமொழிச் சொற்களைக் களைந்து நல்ல தமிழ் சொற்களை கண்டறிவது பற்றி பார்ப்போம்.

வினா எப்படி கேட்கப்படும்?

வழூஉச்சொற்கள் அல்லது  வேற்றுமொழிச் சொற்களைக்கொடுத்து அதற்கு சரியான நல்ல தமிழ்ச்சொல்லைக் கண்டறியச் சொல்லி வினா அமையும்.

உதாரணம்:

பேத்தியும் பேரனும் தாத்தாவைப் பார்க்க வந்தனர்.

பெயரனும் பெயர்த்தியும் தாத்தாவைக் காண வந்தனர்.

 வழூஉச்சொற்களும் தமிழ்ச்சொற்களும்வழூஉச்சொல்               தமிழ்ச்சொல்                    வழூஉச்சொல்     தமிழ்ச்சொல்

உசிர்                       -           உயிர்                                      ஊரளி         -          ஊருளி
ஒருத்தன்             -           ஒருவன்                               கடகால்      -          கடைக்கால்
குடக்கூலி -                     குடிக்கூலி                             முயற்சித்தார் -  முயன்றார்
வண்ணத்திப்பூச்சி -     வண்ணத்துப்பூச்சி             வென்னீர் -            வெந்நீர்
எண்ணை -                      எண்ணெய்                            சிகப்பு -                   சிவப்பு
தாவாரம் -                        தாழ்வாரம்                            புண்ணாக்கு -      பிண்ணாக்கு
அவரக்கா -                      அவரைக்காய்                       வலது பக்கம் -     வலப்பக்கம்
பேரன் -                              பெயரன்                                 பேத்தி -                  பெயர்த்தி
தலகாணி -                       தலையணை                       வேர்வை -            வியர்வை
சீயக்காய் -                       சிகைக்காய்                          சுவற்றில் -            சுவரில்
இரும்பல் -                       இருமல்                                 அருவாமனை-   அரிவாள்மனை
அண்ணாக்கவுரு-         அரைநாண்கயிறு               புஞ்சை -                புன்செய்
புண்ணாக்கு -                  பிண்ணாக்கு                         நாத்தம் -                நாற்றம்
பதனி -                               பதிநீர்                                       அருகாமை -        அருகில்
வெங்கலம் -                    வெண்கலம்                          பேட்டி -                 நேர்காணல்
வெண்ணை -                   வெண்ணெய்                       ஒத்தடம் -             ஒற்றடம்
தேனீர் -                              தேநீர்                                       கவுறு -                  கயிறு
பயிறு -                               பயறு                                        பாவக்காய் -        பாகற்காய்
ரொம்ப -                             நிரம்ப                                      கோடாலி -          கோடாரி
கடப்பாறை -                    கடப்பாரை                            ஆம்பளை -          ஆண்பிள்ளை
ஈர்கோலி -                        ஈர்கொல்லி                          பொம்பளை-        பெண்பிள்ளை
---------------------------------------------------------------------------------------------------------------

வேற்றுமொழிச்சொல் - தமிழ்ச்சொல் 

பஜனை - கூட்டுவழிபாடு                                     வைத்தியர் - மருத்துவர்
ஜனம் - மக்கள்                                                          கர்வம் - செருக்கு
வாபஸ் - திரும்பபெறுதல்                                   தபால் - அஞ்சல்
கிஸ்தி - வரி                                                               அலமாரி - நெடும்பேழை
முண்டாசு - தலைப்பாகை                                   சிம்மாசனம் - அரியணை
அகங்காரம் - ஆணவம்                                          பஜார் - கடைத்தெரு
சாதம் - சோறு                                                            சபை - அவை
நாஷ்டா - சிற்றுண்டி                                              ஆசீர்வாதம் - வாழ்த்து
நமஸ்காரம் - வணக்கம்                                        லாபம் - ஈவு
இஷ்டம் - விருப்பம்                                                 வக்கீல் - வழக்குரைஞர்
தராசு - துலாக்கோல்                                               ஹாஸ்டல் - விடுதி
சர்க்கார் - அரசு                                                           கேப்பை - கேழ்வரகு
ஐதீகம் - சடங்கு                                                         வேதம் - மறை
ஜானவாசம் - மாப்பிளை அழைப்பு                   அபிஷேகம் - திருமுழுக்கு
யாத்திரை - புனிதப் பயணம்                                ஆயுள் - வாழ்நாள்
தீர்த்தம் - புனித நீர்                                                    ஜனநாயகம் - குடியாட்சி
நதி - ஆறு                                                                     சந்தா - கட்டணம்
பிரதிநிதி - சார்பாளர்                                                பத்திரம் - ஆவணம்
மத்தியாணம் - நண்பகல்                                       சிபாரிசு - பரிந்துரை
பரீட்சை - தேர்வு                                                       பிரார்த்தனை - தொழுகை
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் - நடுவண் அரசு
தாலுகா ஆபிஸ் - வட்டாட்சியர் அலுவலகம்வழூஉச்சொல்  மற்றும் வேற்றுமொழிச்சொல் களைதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
                                                                                                                               
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template