எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , » எஸ்.ஆர்.பொம்மை வழக்கு - S.R.Bommai Case

எஸ்.ஆர்.பொம்மை வழக்கு - S.R.Bommai Case

 வழக்கின் பெயர் : எஸ்.ஆர்.பொம்மை வழக்கு

1994  எஸ்.ஆர் பொம்மை வழக்கில்தான் முகவுரை என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி என உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டது.

சம்பந்தபட்டவர்கள்: எஸ்.ஆர் பொம்மை - கர்நாடக ஆளுநர்

காரணம்: எஸ்.ஆர் பொம்மை அவர்களின் முதல்வர்  பதவி பறிக்கப்பட்டு 
                    குடியரசுத்தலைவர் ஆட்சியை அமப்படுத்தியது .

நடந்தது என்ன?


முதலில் சட்டப்பிரிவு 356 பற்றி பார்ப்போம்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் போதோ அல்லது அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் போதோ அல்லது மாநில அரசினால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மாநில அரசினால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இயலாத பட்சத்தில் மத்திய அரசு ஒரு மாநிலத்தை தன் வசம் கொண்டு வரும் அதிகாரத்தை கொடுக்கும் ஒரு சட்டப்பிரிவு 356 ஆகும்.இப்பிரிவைப் பயன்படுத்தி 1959 இல் முதல் முறையாக கேரளத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டது. தொடர்ந்து இதனைப் பயன்படுத்தி பல மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு வருகின்றன.1988 இல் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஜனதா தளம் கட்சியை சார்ந்த எஸ்.ஆர் பொம்மை.ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு, மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

சில நாட்கள் கழித்து கே.ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுனரை சந்தித்து, தனக்கு 19 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு, பொம்மை, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்து விட்டதால், அவரது ஆட்சியை கலைத்து விடலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். 

ஆனால், கே.ஆர். மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள் தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர்.இதனையடுத்து, எஸ்.ஆர். பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால், அதனை கண்டுகொள்ளாமல், 1989 ஏப்ரல் மாதத்தில், பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

வழக்கு:

இதனை எதிர்த்து பொம்மை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து பொம்மை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

1991-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் நிகழ்ந்த கலவரங்களுக்கு காரணமான, இந்துத்வ அமைப்புகளை தடை செய்யாததை காரணம் காட்டி பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசத்தின் அரசுகள் கலைக்கப்பட்டன.இதேபோல், நாகலாந்து, மேகாலயா மாநில அரசுகளும் 1988 மற்றும் 1991 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக கலைக்கப்பட்டது. பொம்மை வழக்கோடு சேர்த்து மேற்கண்ட மாநிலங்கள் தொடுத்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன..

தீர்ப்பு:

1994 ஆம் ஆண்டு இதன் தீர்ப்பு வெளியானது.நீதிபதி குல்தீப்சிங் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசரித்து 5 முக்கியமான சட்ட விளக்கத்துடன் தீர்ப்பு வழங்கியது.

    நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கு உட்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம், அதே வேளையில் அரசியல் உள்நோக்குடன் ஆட்சி கலைக்கப் பட்டிருக்குமெனில் நீதிமன்றங்களுக்கு கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அமல்படுத்த அதிகாரம் உண்டு.

    நிபந்தனைகளுக்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டதே பிரிவு 356 . குடியரசுத் தலைவருக்கு வழங்கப் பட்டிருக்கும் இந்த அதிகாரம் கட்டற்றதல்ல.

    மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும், அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் ஆராயலாம்.

    ஆட்சி கலைப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் துஷ்பிரயோகம் என்று நீதிமன்றங்கள் கருதினால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்தும் உரிமை அவற்றிற்கு உண்டு.

    இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு. 

இந்த தீர்ப்புக்கு பிறகு தேவையில்லாத அரசியல் காரணங்களுக்காக ஆட்சி கலைப்பது குறைந்து போனது குறிப்பிடத்தக்கது.

பொம்மை வழக்கு பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template