எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , » கேசவாநந்த பாரதி வழக்கு - Kesavananda Bharati case

கேசவாநந்த பாரதி வழக்கு - Kesavananda Bharati case

கேசவாநந்த பாரதி வழக்கு.. கேள்வி பற்றி இருக்கிறீர்களா? அரசியலமைப்பின் முகவுரை படித்திருந்தால் இந்த வழக்கின் பெயர் உங்களுக்கு ஞாபகம் வரும்.ஞாபகம் வந்துடுச்சா?

1960 ஆம் ஆண்டு பெருபாரி வழக்கில் முகவுரை என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதி மன்றம் 1973 ஆம் கேசவாநந்த பாரதி வழக்கில் முகவுரை என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதிதான் என தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.. 


வழக்கின் பெயர்: கேசவாநந்த பாரதி வழக்கு

சம்பந்தப்பட்டவர்கள்: கேசவானந்த பாரதி-கேரளா மாநில அரசு

காரணம் -  மடத்திற்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தியது தொடர்பாக

நடந்தது என்ன?

கேரளாவைச் சேர்ந்த கேசவாநந்த பாரதி அவர்களின் எதனீர் மடத்தின் விளைநிலங்கள் கேரள அரசின் நில சீர்திருத்தச் சட்டத்தின் அடிப்படையில்  அரசு கையகப்படுத்தியது.


இதனை எதிர்த்து மடாதிபதி கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

அந்த 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு நாடாளுமன்றத்தின் அதிகார வரையறை குறித்து விசாரணை செய்து தீர்ப்பளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஏப்ரல் 1973 அன்று 13 நீதிபதிகளும் தீர்ப்புகளை வழங்கினார்கள்..


இதில் 6 நீதிபதிகள்,அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக எந்தவித சட்டத்தை இயற்றவோ நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என்று 13 நீதிபதிகளில் 6 நீதிபதிகள் தீர்ப்பு சொல்ல, மீதமுள்ள 7 நீதிபதிகள் இதற்கு எதிராகவும் அதாவது அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக எந்தவித சட்டத்தை இயற்றவோ நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தீர்ப்பு வழங்கினர்.

பெரும்பான்மையின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் இவற்றை மீறி எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் இயற்ற முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.நாடாளுமன்றம் சொத்து உரிமைகளை வரையறுக்கப்பட்ட அளவிற்குதான் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கேசவானந்த தீர்ப்பு வரையறை செய்தது.


மேலும் நாடாளுமன்றமோ, சட்ட மன்றமோ, தமக்கு வரையறுத்துக் கொடுத்துள்ள உரிமைகளை மீறிச் செயல்படும்போது, அவற்றின் அச்செயல் குறித்து முறையீடு செய்ய நீதி மன்றங்களை அணுகலாம் என்பது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று அதிக நாட்கள் விசாரித்த வழக்கு கேசவானந்த பாரதி வழக்கு ஆகும்.மேலும் இந்த வழக்கு குறித்த புரிதலை கொண்டுவருவதற்காக கோலாக் நாத் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கேசவாநந்த பாரதி வழக்கு பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template