வழக்கின் பெயர்:கோலக்நாத் வழக்கு
சம்பந்தப்பட்டவர்கள்:கோலக்நாத் குடும்பம்-பஞ்சாப் மாநில அரசு
காரணம் - தனியரின் நிலத்தை அரசு கையகப்படுத்தியது தொடர்பாக
நடந்தது என்ன?
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரத்தில் வாழ்ந்த கோலக்நாத் மற்றும் ஹென்றி வில்லியம் ஆகிய சகோதரர்களுக்கு சொந்தமானது 500 ஏக்கர் பண்ணை நிலம்.இந்த நிலத்தில் 30 ஏக்கர் நிலத்தை அந்தக் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள 470 ஏக்கர் நிலத்தை பஞ்சாப் அரசு நிலசீர்திருத்தச் சட்டத்தின்படி 1953 ம் ஆண்டு கையகப்படுத்திக்கொண்டது.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ந்து போன கோலக்நாத் குடும்பத்தினர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கு மேல் முறையீட்டிற்காக 1960 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் சென்றது.
இதில், கோலக்நாத் குடும்பத்தினர் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 32-ஐ மேற்கோளைக் காட்டி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், அதனையும் மீறி கொண்டுவந்த சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தால் அதுவும் செல்லுபடியாகாது என்றும், பஞ்சாப் அரசு நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் தனது விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு அதிகாரம் இல்லை என்றும், மீண்டும் தனது 500 ஏக்கர் பஞ்சாப் அரசு தனக்கு திருப்பி வழங்க வேண்டியும், பஞ்சாப் அரசின் இச்சட்டத்தை நீக்கவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

தீர்ப்பு - 1967
இந்த வழக்கினை விசாரிக்க 11 நீதிபதிகளைக் கொண்ட அமர்வை உச்சநீதி மன்றம் நியமனம் செய்தது.இதில் பெரும்பான்மையான நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு வழங்கிய சொத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை, சட்டம் மூலம் பறிப்பதற்கு குறைப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அதிரடியாக 1967-ஆம் ஆண்டு தீர்ப்பினை வழங்கினர்.
இந்த தீர்ப்பிற்கு பிறகு, 1971 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 24-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 368 ஆகியவற்றில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
இந்தத் திருத்தங்கள் வாயிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் திருத்துவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது.
மேலும் 1972-ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 31-இல் கொண்டு வரப்பட்ட 25-ஆவது திருத்தத்தின் மூலம் தனியார் நிலத்தையோ, அசையாத சொத்துகளையோ பொது நலனுக்காக அரசு கையகப்படுத்தும் போது இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது.
கோலக்நாத் வழக்கு பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.