எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » பெருபாரி வழக்கு - ஒரு பார்வை(Berubari Case) 1960

பெருபாரி வழக்கு - ஒரு பார்வை(Berubari Case) 1960

வழக்கின் பெயர்:

பெருபாரி வழக்கு (முகவுரை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று  இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் கூறியது)

காரணம்:

இந்திய பாகிஸ்தான் நாடுகளின் எல்லைகளை மாற்றம் செய்தமைக்காக தொடுக்கப்பட்டது.


நடந்தது என்ன?

1947-இல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது,இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை இந்தியாவிற்கும், இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை பாகிஸ்தானுக்கும் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

எல்லைகளை அளந்து நிர்ணயம் செய்ய  சிரில் ஜான் இராட்கிளிப் எனும் ஆங்கிலேயர் நியமிக்கப்பட்டார்.இவருக்கு உதவிட இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து 2 நபர்களும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து 2 நபர்களும் நியமிக்கப்பட்டனர்.

மேற்கு வங்காள மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்த பெருபாரி எனும் கிராமத்தை இராட்கிளிப் இந்தியாவிற்கு பிரித்து வழங்கினார்.ஆனால் இதை எல்லைப் பிரிப்பு ஆவணங்களில் குறிப்பிட இராட்கிளிப் தலைமையிலான குழுவினர் மறந்து விட்டனர். 

பின்னர் இச்செய்தி அறிந்த பாகிஸ்தான், பெருபாரி கிராமத்தை பாகிஸ்தான் வரைபடத்தில் சேர்த்துக் கொண்டது. இதனால் பெருபாரி கிராமத்தின் உரிமை குறித்து இந்திய – பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது..



இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கும் – பாகிஸ்தான் பிரதமர் பெரோஷா நூன் க்கும் இடையே 1958-ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.  அதன்படி பெருபாரி கிராமத்தை இந்தியா – பாகிஸ்தான் அரசுகள் பிரித்துக் கொண்டன.


மேற்கு வங்காள மாநில அரசின் அனுமதியை பெறாமலேயே மாநிலத்தில் உள்ள பெருபாரி கிராமத்தின் பகுதிகளை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்கியது. 

 தீர்ப்பின் சாராம்சம்:

பெருபாரி கிராமத்தின் பகுதிகளை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்கியது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்திய அரசுக்கு எதிராக, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது.இந்த வழக்கிற்கு 1960 மார்ச் 14 இல் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

அந்த தீர்ப்பில்,இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 3 (சி)-கீழ் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஒரு மாநிலத்தின் எல்லையைக் குறைப்பதற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும்; ஆனால் இந்திய நாட்டின் பரப்பை குறைக்க அதிகாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.

எனவே அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 3 (சி)-இல் தேவையான திருத்தம் செய்து பெருபாரி கிராமத்தின் பகுதிகளை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்கியதை நியாப்படுத்த முடிவு செய்தது. அதன்படி 1960-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட 9–வது இந்திய அரசியலமைப்புச் திருத்தத் சட்டம், 1960 மூலம், பெருபாரி கிராமத்தின் பகுதியை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்கியது குறித்து எழுந்த கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இனி வருங்காலங்களில் இந்திய அரசு பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் எல்லை நிலப்பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள போடப்படும் ஒப்பந்தங்கள், அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யாமல் மேற்கொள்ளலாம் என்றும் இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் வேண்டும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 

குறிப்பு:

இந்திய அரசியல் அமைப்பின் (2015)100 வது திருத்தச் சட்டத்தின் படி வங்காள தேசத்தின் எல்லையோரத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை இந்தியாவிற்கும்; அதே போல் இந்தியாவின் மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களின் எல்லையில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை வங்காள தேசத்திற்கும் பரஸ்பரம் மாற்றி கொள்ள, இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பெருபாரி வழக்கு பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template