Ads Area

நாராயண குரு - அய்யன்காளி

நாராயண குரு

இவர் 1854 இல் கேரளாவில் பிறந்தார் . மலையாளம் , சமஸ்கிருதம்,  தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார். சிறந்த இந்து ஆன்மிகவாதியும் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு சாதிக்கட்டுப்பாடுகளை சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம் என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் முனைந்தவர்.




ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்கும் உயர் சாதி மக்கள் வாழும் தெருக்களில் செல்வதற்கும் பொது நீர்நிலைகளிலும் அல்லது கிணறுகளிலும் நீர் எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.   ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தை 1903 -ஆம் ஆண்டு தொடங்கினார் . இவ்வியக்கம் தான் சேர்ந்த ஈழவ மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பிற ஒடுக்கப்பட்ட கேரள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடங்கப்பட்டது ஆகும். அருவி புரம் என்ற ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டி அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.

அய்யன்காளி

1863 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திலுள்ள  வெங்கனூரில் பிறந்தார் . இப்பகுதி திருவிதாங்கூர் அரசரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.  ஒடுக்கப்பட்ட சாதியினர் பொதுசாலைகளில் காளை பூட்டப்பட்ட வண்டியில்  பயணம் செய்ய தடை இருந்தது.  அதற்கு சவால் விடும் வகையில் காளைகள் பூட்டப்பட்ட வண்டியில் அவர் பயணம் செய்து காட்டினார்.  ஸ்ரீநாராயணகுருவால் ஊக்கம் பெற்ற அய்யன்காளி 1907இல் சாது ஜன பரிபாலன சங்கம் எனும் அமைப்பை நிறுவினார் . இவ்வமைப்பு ஏழை மக்கள் பாதுகாப்பு சட்டம் (அசோசியேஷன் ஆஃப் தி பவர் )எனவும் அழைக்கப்பட்டது.   கீழ் சாதியாக கருதி ஒடுக்கப்பட்ட புலையர் சமூக மக்களின் கல்விக்காக இவ்வமைப்பு இயக்கம் நடத்தி நிதி திரட்டியுள்ளது. 

Bottom Post Ad

Ads Area