Ads Area

ஜோதிபா பூலே - சாதி எதிர்ப்பு இயக்கங்கள்

19 ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தி சமூகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க பல இயக்கங்கள் காரணமாக இருந்தாலும் சாதி எதிர்ப்பு இயக்கங்களும் அதில் முக்கிய பங்கு வகித்தது.அதில் முக்கியமான ஒருவர் ஜோதிபா பூலே..


ஜோதிபா பூலே.


இவர் 1827-இல் மகாராஷ்டிராவில் பிறந்தார் . மகாராஷ்டிரத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோதிபா கோவிந்த பூலே.பிராமண எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்ககால தலைவராக இருந்தார்.இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி. ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857 சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.உயர்ந்த ஜாதி ஆதிக்கத்துக்கும் பிராமணிய சக்திகளுக்கும் எதிராக அவர் தனது வாழ்நாள் முழுவதும் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார்.  சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர்.


ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர். ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை 1852 இல் புனேவில் உருவாக்கியுள்ளார். 1873ல் ஜாதிமுறையை எதிர்த்துப் போராட  சத்தியஜோதக் சமாஜ் என்னும் அமைப்பை அதாவது உண்மையை தேடுவோர் சங்கம் எனும் அமைப்பை பிராமணர் அல்லாத மக்களும் சுயமரியாதையோடும் குறிக்கோளுடன் வாழ தூண்டுவதற்காக நிறுவினார் . இவர் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்காக மிகவும் பாடுபட்டார் . மகாராஷ்டிரத்தில் விதவைகள் மறுமண இயக்கத்திற்கு முன்னோடியாக அவர் செயல்பட்டார். பெண் கல்விக்காகவும் பாடுபட்டார். இவருடைய குலாம்கிரி எனும் புத்தகம் சாதி ஏற்றத்தாழ்வுகளை கண்டனம் செய்தது  என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிபா கோவிந்தா பூலே மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து 1851ல் பூனாவில் முதலாவது பெண்கள் பள்ளியை நிறுவினர்.குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில்  புலே முக்கியப் பங்கு வகித்தார்.

Bottom Post Ad

Ads Area