Ads Area

பார்சி சீர்திருத்த இயக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அதாவது பார்சி சீர்திருத்த இயக்கம் 1851-இல்  நவரோஜி புர்துஞ்சி, சொராப்ஜி சாப்புர்ஜி பெங்காலி ஆகியோரால் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் ஆகும். பெண் கல்வியை அவா்கள் ஆதரித்தனர். தங்கள் பார்சி சமூகத்தில் நிலவிய திருமண சடங்குகளில் சீர்திருத்தம் கொண்டு வர அவர்கள் விரும்பினர். சமய கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஈரானிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் குடிபெயர்ந்து வந்தவர்களே ஜொராஸ்டிரியர்களே பார்சிகள் எனப்படுவர். 1851 இல் பர்துன்ஜி நௌரோஜி என்பவர் ரஹ்னுமாய் மஜ்தயாஸ் சபா எனும் அமைப்பை ஏற்படுத்தினார் .  இவ்வமைப்பு பாசிகளின் சீர்திருத்த சங்கம் எனப்பட்டது . ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) என்பதே அதன் தாரக மந்திரமாக இருந்தது.  ஜகத் மித்ரா என்ற இதழை நவ்ரோஜி நடத்தி வந்தார். இத்தகைய சீர்திருத்த முயற்சிகளால் பார்சி சமுதாயம் பெரும் முன்னேற்றம் கண்டது.


இந்த அமைப்பின் தலைவர்கள் திருமணம் , இறந்து போதல் ஆகிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் விரிவான சடங்குகளை விமர்சனம் செய்தனர் . குழந்தை திருமணம்,  ஜோதிடத்தை பயன்படுத்துதல் ஆகிய இரண்டையும் எதிர்த்தனர் . பம்பாய் பார்சி  சமூகத்தை சேர்ந்த பெர்ரம்ஜி மல்பாரி என்பவர் குழந்தை திருமண பழக்கத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என இயக்கம் நடத்தினார்.   இச்சமூகம் பெரோசா மேத்தா , தீன்சா வாக்சா  போன்ற சிறந்த தலைவர்களை உருவாக்கியுள்ளது.  இவர்கள் தொடக்ககால காங்கிரசில் முக்கிய  பங்காற்றியுள்ளனர்

 20-ம் நுாற்றாண்டின் இடைக்காலத்தில் பார்சிகளில் பெரும்பாலானோர் முக்கிய பொறுப்புகளை ஏற்று இந்தியாவின் வளா்ச்சிக்கு சிறப்பான தொண்டினை ஆற்றினர்.

Bottom Post Ad

Ads Area