எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , » அரசியலமைப்பின் முகவுரை - Preamble of Constitution

அரசியலமைப்பின் முகவுரை - Preamble of Constitution

அரசியலமைப்பின் முகவுரை:


முகவுரை  என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதை குறிக்கிறது. 

முகவுரை அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் லட்சியங்களை உள்ளடக்கியது ஆகும்.  

இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தை கொண்டது. இது பெருமதிப்புடன் அரசியலமைப்பின் திறவுகோல் என குறிப்பிடப்படுகிறது.

 1947-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது. 

முதலில் முகவுரையில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான கலைச்சொற்களைப் பற்றி பார்க்கலாம்.

இறையாண்மை (Sovereign)


யாருக்கும் கட்டுப்படாமால் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடாத வண்ணம் பாதுகாக்கும் கவசம் 

சமதர்மம்(Socialist)


நாடு,மொழி,மதம்,இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு அனைவருக்கும் ஒரே தர்மம்

மதச்சார்பின்மை(Secular) 


புத்த, ஜைன, சீக்கிய, இந்து ,முஸ்லீம் ,கிறித்தவர் என்று பல மதத்தவர்களுக்கு சொந்தமான நாடு இது என்பதை விளக்கும் சொல் மதச்சார்பின்மை.

மக்களாட்சி (Democratic)


மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியே மக்களாட்சி என்பது அடிப்படை கோட்பாடு..

நீதி (Justice) 


சமூக,பொருளாதார மற்றும் அரசியல் நீதி


உரிமை (Liberty) 


அடிப்படை உரிமை, சுதந்திரம், சுய சிந்தனை வெளிப்பாடு

சமத்துவம் (Equality)


அனைவரும் இந்தியர், அனைவரும் சமமானவர் என்பதை உணர்த்துவதாக சகோதரத்துவம் (Fraternity) 

சக மனித மாண்பிற்கும் நாட்டின் ஒற்றுமைக்குமான பலமான பாலம்..

1976-ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி முகவுரை திருத்தப்பட்டது. அதன்படி, சமதர்மம், சமயசார்பின்மை, ஒருமைப்பாடு என்ற மூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டது.

1789-ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின்போது சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாக இருந்தன.  எனவே இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

1789-ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி மதச்சார்பின்மையை வலியுறுத்தியது.  1791-ஆம் ஆண்டு  பிரெஞ்சு அரசியலமைப்பு சட்டம் பிரான்ஸ் அரசை மதசார்பற்ற அரசாக மாற்றியது. 

முதன்முதலில் அரசாங்கத்தின் மூலம் மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தியவர் பஞ்சாப்  பகுதியைச் சார்ந்த மகாராஜா ரஞ்சித் சிங் ஆவார்.

இந்திய தேசிய காங்கிரஸ் 1888-ஆம் ஆண்டு மதசார்பின்மையை அறிமுகப்படுத்தியது. மகாத்மா காந்தி துருக்கி சுல்தானுக்கு ஆதரவாக கிலாபத் இயக்கம் ஆரம்பித்தபோது மதசார்பின்மை கருத்து பிரபலமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  "இந்திய மக்களாகிய நாம்"  என்ற சொற்களுடன்தான் இந்திய அரசமைப்பின் முகவுரை தொடங்குகிறது.  

இந்தியா ஒரு இறையாண்மை மிக்க சமதர்ம, சமய சார்பற்ற, ஜனநாயக, குடியரசு நாடாக உள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. 

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும் பாதுகாப்பு வழங்குவதே முகவுரையின் நோக்கமாகும். 

இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திரமாக சிந்தித்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், நம்பிக்கை, சமய வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமாக செயல்பட இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது.  

அரசியலமைப்பு வரலாற்றில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியா என்பது குறித்த பல சிக்கல்கள் எழுந்தன.முகவுரை தொடர்பாக பல வழக்குகளில் இரு வகையான கருத்துகள் கூறப்படுகின்றன..

1960 பெருபாரி வழக்கில் முகவுரை என்பது இந்திய அரசியல் அமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று கூறப்பட்டது.

1973 கேசவானந்த பாரதி வழக்கில் முகவுரை  இந்திய அரசின் ஒரு பகுதி என்று கூறப்பட்டது.

1994  எஸ்.ஆர் பொம்மை வழக்கில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி எனப்பட்டது.

1995 எல்.ஐ.சி வழக்கில் அரசியலமைப்பின் ஒரு பகுதியே முகவுரை என கூறியது. 

முகவுரையை திருத்தலாம் ஆனால் முகவுரையில் கூறப்பட்டுள்ள அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்த முடியாது. 

முகவுரை அரசியலமைப்பின் திறவுகோல் எனக் கூறியவர் எர்னஸ்ட் பர்கர். முகவுரை அரசியலமைப்பின் அடையாள அட்டை என கூறியவர் பல்கிவாலா ஆவார். அரசியலமைப்பின் ஜாதகமே முகவுரை என்றவர் கே.எம்.முன்சி.  நமது நீண்ட நாள் கனவை முகவுரை பிரதிபலிக்கிறது என்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஆவார்.

இந்தப்பகுதியை நன்றாக படித்துவிட்டீர்களா? அப்படியானால் இதிலிருந்து மட்டும் கேட்கப்பட்டிருக்கும் 10 வினாக்களுக்கு விடையளியுங்கள் பார்ப்போம்.இங்கே க்ளிக் செய்து  Exam Centre செல்லுங்கள்..
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template