இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டபோது 22 பாகங்களையும் 8 அட்டவணைகளையும் 395 சரத்துக்களையும் கொண்டிருந்தது. தற்போது 25 பாகங்களையும் 12 அட்டவணைகள் 448 சரத்துக்களையும் கொண்டுள்ளது. 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் 25 பகுதிகளையும், எப்பகுதியில் எத்தனை சரத்துகள் இடப் பெற்றிருக்கின்றன விபரங்களையும் பார்ப்போம் வாங்க...
1. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர் மற்றும் எல்லை (சரத்து 1 - 4).
2. குடியுரிமை (சரத்து 5-11)
3. அடிப்படை உரிமைகள் (சரத்து 12-35)
4. அரசு நெறிமுறைக் கோட்பாடு (சரத்து 36-51)
4a. அடிப்படை கடமைகள் . இது 42வது சீர்திருத்தம் 1976 மூலம் இணைக்கப்பட்டது. (சரத்து 51 A)
5. மத்திய அரசு (சரத்து 52-151)
6. மாநில அரசு (சரத்து 152-237)
7.முதல் பகுதியிலுள்ள மாநிலங்கள் பற்றியது. இது 7வது சட்ட திருத்தம், 1956 -இன்படி நீக்கப்பட்டது.
8. யூனியன் பிரதேசம் (சரத்து 239-242)
9. கிராம பஞ்சாயத்து (சரத்து 243 A - 243 O)
9a. நகர பஞ்சாயத்து (சரத்து 243 P - 243 ZG)
9b. கூட்டுறவு சங்கம் (சரத்து 243 H - 243 ZT)
10. சுப்ரீம் கோர்ட் மற்றும் பழங்குடியினர் பகுதிகள் (சரத்து 244 - 244 A)
11. மத்திய மாநில உறவுகள் (சரத்து 245-263)
12. நிதி சொத்து தொடர்பான ஒப்பந்தங்கள் (சரத்து 264-300 A)
13. இந்திய ஆட்சிப் பரப்புக்கு உள்ளே வணிகம் பெரு வணிகம் மற்றும் போக்குவரத்து (சரத்து 301-307)
14. மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் (சரத்து 308-323)
14a. தீர்பாயங்கள் (சரத்து 323 A - 323 B)
15. தேர்தல் (சரத்து 324 - 329 A)
16. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சிறப்பு சலுகைகள் (சரத்து 330 - 342)
17. ஆட்சி மொழிகள் (சரத்து 343-351)
18. அவசர நிலை பிரகடனம் (சரத்து 352-360)
19.குடியரசுத்தலைவர், ஆளுநர் செயல்களுக்கான பாதுகாப்பு துறைமுகங்கள், விமானநிலையங்கள் தொடர்பானது (சரத்து 361-367)
20. சட்டத்திருத்தம் (சரத்து 368)
21. தற்காலிக இடைக்கால சிறப்பு அதிகாரங்கள் (சரத்து 369-392)
22. அரசியலமைப்பு சட்டத்தின் தொடக்கம், நீக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு (சரத்து 395)
அடுத்த பகுதியில் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் காண்போம்..
அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சரத்துகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.