எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » குடியுரிமை - அரசியலமைப்பு பகுதி-2 (சரத்து 5 முதல் 11 வரை)

குடியுரிமை - அரசியலமைப்பு பகுதி-2 (சரத்து 5 முதல் 11 வரை)


குடியுரிமை (Citizenship) : பகுதி 2 (சரத்து 5-11)

சிட்டிசன் எனும் சொல் சிவிஸ் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.   இதன் பொருள் "ஒரு நகரத்தில் வசிப்பவர்" என்பதாகும்.  

இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.  இந்திய அரசியலமைப்பின் பகுதி 2-இல் சட்டப்பிரிவு 5 - 11 வரை குடியுரிமை பற்றி விளக்குகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு 1955-இல் இயற்றப்பட்ட குடியுரிமை சட்டம்,  குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது.  இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தால்  1986, 1992, 2003, 2005, 2015 மற்றும் 2019 ஆகிய வருடங்களில் திருத்தப்பட்டுள்ளது.  முதலில் குடியுரிமை சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது.  ஆனால் 2003ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி  இவ்வுரிமை நீக்கப்பட்டது.


மேலும் 2003-இல் எல்.எம்.சிங்வி தலைமையில் அமைந்த குழுவின் பரிந்துரைப்படி குடியுரிமை திருத்தப்பட்டு 16 நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிந்துரைத்தது.  2011 முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்தியக் குடியுரிமையை ஐந்து வழிகளில் பெறலாம்,  மூன்று வழிகளில் இழக்கலாம்.

குடியுரிமை பெரும் வழிகள்

1. பிறப்புரிமை : 1950, ஜனவரி 26 அன்று அல்லது அதற்கு பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்களாக கருதப்படுவர். 

2. மரபு அல்லது வம்சாவளி : 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அல்லது அதற்கு பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை (அவர் பிறந்தபோது) இந்திய குடிமகனாக இருக்கும்பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர் வம்சாவளி மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும்.

3.பதிவின்  செய்வதன் மூலம் :  அயல்நாட்டினர் தொடர்ந்து நிரந்தரமாக ஏழு ஆண்டுகள் பதிவு செய்து  5 ஆண்டுகள் நிரந்தரமாக வசிக்க வேண்டும்.  இதன் மூலம் குடியுரிமையை பெறலாம்.

4. இயல்புரிமை :  ஒரு வெளிநாட்டவர் இந்திய அரசிற்கு இயல்பு உரிமை கோரி விண்ணப்பிப்பதன் மூலம் அவர் இந்திய குடியுரிமை பெறலாம்.  

5.பிரதேச நாடுகள் இணைவதன் மூலம் : பிற நாடுகள் அல்லது பகுதிகள் இந்தியாவுடன் இணையும்போது இந்திய அரசு அவ்வாறு இணையும் நாடுகளின் மக்கள் குடிமக்களாக கருதி அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம்.

குடியுரிமை இழக்கும் வழிகள் : 

1.துறத்தல் :  ஒரு குடிமகன் தாமாக முன்வந்து தனது குடியுரிமையை இழத்தல். 

2.முடிவு செய்தல் : வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறும் போது தாமாகவே இந்திய குடியுரிமை முடிவுக்கு வந்து விடுதல். 

3.இழத்தல் : இயல்பு உரிமையின் மூலம் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகன் மோசடி செய்து குடியுரிமை பெற்றவர் தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் அல்லது உண்மைகளை மறைத்து அவர் அல்லது எதிரி நாட்டுடன் வாணிபம் செய்தவர் அல்லது இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர் என்பதை மத்திய அரசு கண்டறிந்து அவர் குற்றம் புரிந்தவர் என்று உறுதிப்படுத்தும்பட்சத்தில் மத்திய அரசு அவரது குடியுரிமையை இழக்க செய்யும். 

சரத்து 5 26.01.1950 முதல் இந்தியாவில் பிறந்தவர் இந்திய குடிமகன் என்று குறிப்பிடப்படுகிறது. 

சரத்து 6 : பாகிஸ்தானிலிருந்து இந்திய நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்களுக்கான குடியுரிமை.    

சரத்து 7 : இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு குடிபெயர்ந்தவர்களுக்கான குடியுரிமை 
        
சரத்து 8 : வம்சாவழி மூலம் குடிமை பெறுதல் 

சரத்து 9 : இந்திய குடியுரிமை இழத்தல் 

சரத்து 10 :நாடாளுமன்றம் ஒருவரது குடியுரிமையை நீக்கி சட்டம் இயற்றலாம் 

சரத்து 11 : குடியுரிமை ஒழுங்கு படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அதிகாரம் பெற்றது பாராளுமன்றம் ஆகும்

அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சரத்துகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

TNPSC | விஜயநகர பேரரசு | Vijayanagara Empire | Indian medieval History | இடைக்கால இந்திய வரலாறு

விஜயநகர, பாமினி அரசுகளின் எழுச்சி   முகமது பின் துக்ளக் ஆட்சிக்குப் பிறகு டெல்லி சுல்தானிய வீழ்ச்சியினால் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலு...

Popular Posts

1

2

3

 
Template Design by Creating Website Published by Mas Template