எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » அரசியலமைப்பு வரைவுக்குழு மற்றும் பிறகுழுக்கள்

அரசியலமைப்பு வரைவுக்குழு மற்றும் பிறகுழுக்கள்


அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர்  9-ஆம் நாள் நடைபெற்றது.  

சபையின் தற்காலிகத் தலைவராக டாக்டர்.சச்சிதானந்த சின்ஹா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

இந்திய அரசை  உருவாக்குவதற்காக கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்ததை தொடர்ந்து டாக்டர்.ராஜேந்திர பிரசாத் இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், எச்.டி. முகர்ஜி மற்றும் வீ.டி. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

பி.என். ராவ் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.அரசியலமைப்புச் சட்டத்தின் மசோதா வரைவுப் படிவத்தை தயாரித்தவரும் இவர்தான்.டிசம்பர் 13 1946-இல் ஜவகர்லால் நேரு தீர்மானத்தை முன்வைத்தார். இந்த தீர்மானம் 1947, ஜனவரி 22 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது . அரசியலமைப்பை உருவாக்க 23 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் முக்கியமான குழு வரைவுக்குழு ஆகும்.  

29.08.1947 அன்று அரசியலமைப்பை எழுதும் பணிக்காக வரைவுக்குழு ஏற்படுத்தப்பட்டது.  

வரைக்குழு

அம்பேத்கர்
என் கோபாலசுவாமி ஐயங்கார் 
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் 
டாக்டர்.கே.எம். முன்சி
சையது முகமது சாதுல்லா  
பி.எல். மிட்டல் என்கிற என்.மாதவராவ் 
டி.டி.கிருஷ்ணமாச்சாரி  (டி.பி.கைத்தான் மறைவிற்கு பிறகு-1948) 

உள்ளிட்ட 7 உறுப்பினர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்தக்குழுவிற்கு அம்பேத்கர் தலைமை தாங்கினார்.இந்திய அரசமைப்பை உருவாக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் தேவைப்பட்டன. ஒரு திட்டமிட்ட கூட்டங்களில் அரசமைப்பு சட்டத்தை பற்றி கலந்துரையாட 114 நாட்கள் ஆயின.


குழுக்கள் மற்றும் தலைவர்கள்

 
 
அரசியலமைப்பை உருவாக்க 23 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.அவற்றில் முக்கியமான குழுக்களையும் அதன் தலைவர்களையும் காணலாம்.

           வரைவுக் குழு ( Drafting Committee )

            பி. ஆர். அம்பேத்கர்

          ஒன்றிய அதிகார குழு  (Union Power Committee )


           ஜவஹர்லால் நேரு

          மத்திய அரசியலமைப்பு குழு (Union Constitution Committee )


           ஜவஹர்லால் நேரு

          மாகாண அரசியலமைப்பு குழு (   Provincial Constitution Committee )


            வல்லபாய் படேல்
 
    அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் விலக்கப்பட்ட பகுதிகள் பற்றிய ஆலோசனைக் குழு ( Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded Areas )


            வல்லபாய் படேல்

         இந்த குழுவில் பின்வரும் துணைக்குழுக்கள் இருந்தன:


        a.அடிப்படை உரிமைகள் துணைக்குழு
       ( Fundamental Rights Sub-Committee)
 


           ஜே. பி. கிருபாளனி

        b.சிறுபான்மையினர் துணைக்குழு(Minorities Sub-Committee ) 


           ஹரேந்திர கூமர் முகர்ஜி,
        

     c.வடகிழக்கு எல்லைப்புற பழங்குடியினர் பகுதிகள் மற்றும் அசாம்  விலக்கப்பட்ட மற்றும் ஓரளவு விலக்கப்பட்ட பகுதிகள் துணைக்குழு(North-East Frontier Tribal Areas and Assam Excluded & Partially Excluded Areas Sub-Committee )

           கோபிநாத் போர்டோலோய்

        d.விலக்கப்பட்ட மற்றும் ஓரளவு விலக்கப்பட்ட பகுதிகள்(அசாமில் உள்ளவை தவிர) துணைக்குழு (Excluded and Partially Excluded Areas (Other than those in Assam) Sub-Committee )


           ஏ.வி தாக்கர்பாபா
    

            நடைமுறைக் குழுவின் விதிகள்(Rules of Procedure Committee)

            ராஜேந்திர பிரசாத்
    

            மாநிலக் குழு (மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு)  ( States Committee (Committee for Negotiating with States) )

            ஜவஹர்லால் நேரு

            வழிநடத்தல் குழு(Steering Committee )


           ராஜேந்திர பிரசாத்


           தேசிய கொடி தற்காலிகக் குழு (National flag ad hoc committee )


           ராஜேந்திர பிரசாத்

          கொடிக்குழு தலைவர் (National flag committee)

          ஜெ.பி.கிருபளானி

          சீரான கூட்டத்தின் செயல்பாட்டிற்கான குழு (
Committee for the function of the constitution assembley)

          ஜி வி மவ்லாங்கர்

          ஹவுஸ் கமிட்டி (Home committee)


          பி பட்டாபி சீதாராமையா

          மொழிக்குழு (Language Committee)


         மோத்துரி சத்தியநாராயணா

         வணிகக் குழுவின் உத்தரவுகள்(Order of business committee)

         நெறிமுறை குழு தலைவர்  

         கே எம் முன்ஷி 

       

வரைவுக்குழு பற்றியும் பிற குழுக்களைப் பற்றியும் அறிந்துகொண்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template