Ads Area

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

இயக்கத்தின் பெயர்:ஆரிய சமாஜம்
தோற்றுவித்தவர்:தயானந்த சரஸ்வதி

இந்து புத்தெழுச்சி இயக்கங்களில் முக்கியமான ஒன்று ஆரிய சமாஜம்.

இவ்வியக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1875.

பஞ்சாபில் சீர்திருத்த இயக்கங்களுக்கு தலைமை ஏற்று நடத்தியது ஆரிய சமாஜம்.

இதனை நிறுவியவர் தயானந்த சரஸ்வதி.  இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள கத்தியவார் மாகாணத்தில் மூர்வி என்னுமிடத்தில் பாரம்பரியமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.  இவரது இயற்பெயர்  மூல்சங்கர்  ஆகும் .


இவர் சுவாமி விராஜனந்தரின் சீடரும் ஆவார் .

இவரது முக்கிய சீடர்களான லாலாலஜபதிராய் , லாலா ஹன்ஸ் ராஜ் ஆகியோர் ஆரிய சமாஜ கொள்கைகளை பரப்பினர் .

பாலகங்காதர திலகர்  மற்றும் கோபால கிருஷ்ண கோகலே போன்றோர் ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் முழக்கம் வேதங்களுக்கு திரும்புவோம் என்பதாகும் .

இவர் தொடங்கிய இயக்கம் சுத்தி இயக்கம் எனப்படும் . 

இஸ்லாம் மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் இயக்கமே சுத்தி இயக்கம் எனப்படும் .

சுதேசி மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன்முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார் .

1893 இல் இவ்வியக்கம் தூய்மை கோட்பாடு குறித்த கருத்து முரண்பாட்டால் இரண்டாக பிரிந்தது.

தயானந்த சரஸ்வதிக்கு பின் பொறுப்பேற்ற வசீகர ஆளுமை கொண்ட சுவாமி ஸ்ரத்தானந்தா தயானந்த ஆங்கில வேத பள்ளிகளை நடத்தி வந்த குழுவினர் மீது குற்றச்சாட்டு சுமத்தினார்.

அக்குற்றச்சாட்டு என்னவென்றால் தத்துவத்தை புறக்கணித்து மிக அதிகமான அளவில் மேற்கத்திய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது என்பதாகும்.

1900 வது ஆண்டில் முதன்முதலாக பல குருகுலங்களை நிறுவப்பட்டது. இவை வெளித்தோற்றத்தில் பண்டைய இந்து கல்விக்கூட பாணியில் இருந்தன.  வேத கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சுவாமி தயானந்த சரஸ்வதி இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டார். இவர் எழுதிய சத்யார்த் பிரகாஷ் என்னும் நூல் மிகவும் புகழ் பெற்றது.

Bottom Post Ad

Ads Area