எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , » ராமகிருஷ்ண இயக்கம் - விவேகானந்தர்

ராமகிருஷ்ண இயக்கம் - விவேகானந்தர்

ராமகிருஷ்ண இயக்கம் :


ராமகிருஷ்ண பரமஹம்சர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகழ்பெற்று விளங்கினார் . இவர் கல்கத்தாவிற்கு அருகேயுள்ள தட்சிணேஸ்வரம் என்னும் ஊரைச்சேர்ந்த காளி கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தார்.  இவர் கடவுள் காளியின் தீவிர பக்தர் ஆக திகழ்ந்தார். கடவுளின் திருவிளையாடல்கள் முடிவு அற்றவை என அறிவித்தார் . வீடுபேருக்கு இட்டுச்செல்லும் ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார் . வாழ்கின்ற அனைத்து உயிர்களும் கடவுளே என்ற அடிப்படையைக் கொண்டவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
  
இராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மையான சாதனையே பிரம்ம சமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் முன்வைத்த பகுத்தறிவு கருத்துக்களின்மீது  அதிருப்தி பெற்ற கல்வியறிவு உள்ள இளைஞர்களை தன்பால் ஈர்த்தது தான்.   1886 இல் ராமகிருஷ்ண பரமஹம்சர்  இயற்கை எய்தினார் பிறகு இவரது சீடர்கள் தங்கள் மதம் சார்ந்த சமூகமாக அமைத்துக்கொண்டு ராமகிருஷ்ணரின் கோட்பாடுகளை பரப்ப ஆரம்பித்தனர் . இதில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர் . கிறிஸ்தவ சமயப் பரப்பு நிறுவனங்களின் கட்டமைப்பு பின்பற்றி ராமகிருஷ்ண இயக்கத்தை விவேகானந்தர் நிறுவினார் . விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா  ஆகும். 1897 மே 1 அன்று விவேகானந்தரால் துவங்கப்பட்டது . கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள பேலூர்  என்னுமிடத்தில் ராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்டது.  இவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர்  ஆவார். 1893ல் சிகாகோவில் உலக சமய மாநாடு நடைபெற்றது . அதில் சுவாமி விவேகானந்தர் தனது உரையை சகோதர சகோதரிகளே என்று ஆரம்பித்தார் . இது அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.  துரத்தல் மற்றும் சேவை இரண்டுமே நவீன இந்தியாவின் இரண்டு கொள்கைகளாக இருக்கவேண்டும் என்றார் விவேகானந்தர் . ஜீவாவே சிவா என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் பணியே கடவுள் பணி எனக் கூறி தொண்டாற்றினார் .

     கல்விப்பணி , உடல்நலம் , கிராம நலன் , இளைஞர் நலம்,  மருத்துவமனைகள் ,அறக்கட்டளை , கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களை நிறுவி தொண்டாற்றி வருகிறது.  மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவன பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் போட்டோவோல்டிக் லைடிங் சிஸ்டம் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக ராமகிருஷ்ண இயக்கம் விளங்கியது. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார குழுவின் (யுனெஸ்கோவின்) தலைமை இயக்குனர் பெடரிக்கோ மேயர் 1993 ஆம் ஆண்டில் சொற்பொழிவாற்றும் போது 1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கம் 1945-இல் ஏற்படுத்தப்பட்ட யுனெஸ்கோவின் அமைப்பைப் போன்றே இருப்பதால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    1998-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதிப்பரிசு ராமகிருஷ்ண இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.  ராமகிருஷ்ண இயக்கம் பல கிளைகளைக் கொண்டுள்ளது.  அதில் ஒன்று தான் கொல்கத்தாவில் உள்ள நரேந்திரப்பூர் இயக்கம் .  1957-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பார்வையற்ற மாணவர்களின் அகாடமி இவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதார மறுவாழ்விற்காக பாடுபட்டு வருகிறது.  மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக மிகச்சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக 2010-ஆம் ஆண்டு, உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 அன்று  இந்தியாவின் மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேசிய விருது நரேந்திரப்பூர் இராமகிருஷ்ண இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template