Ads Area

TNPSC | மருதகாசி | Maruthakasi| Vendrukaattu | பொதுத்தமிழ் | Podhutamil

 

மருதகாசி

இயற்பெயர் - அய்யம்பெருமாள் மருதகாசி

புனைப்பெயர் - அ.மருதகாசி

காலக்கட்டம் 13 - பிப்ரவரி - 1920 - 29 - நவம்பர் - 1989

பிறந்த இடம் - மேலக்குடிகாடு - தமிழ்நாடு

சினிமா அனுபவம் 1949 - 1989

பணி - பாடலாசிரியர்

பெற்றோர் அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்

பட்டப்பெயர்: திரைக்கவித்திலகம்

 


 

ஆரம்பம்:

மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.

முதல் திரைப்பாடல்:

சேலம் மாடர்ன் தியேட்டர் சார்பில் 1949 இல் தயாரிக்கப்பட்ட மாயாவதி என்ற படத்திற்கு தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.

பணியாற்றிய இசையமைப்பாளர்கள்

ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.

சக பாடலாசிரியர்கள்:

உடுமலை நாராயணகவி, கா.மு.ஷெரீப், சுரதா, தஞ்சை ராமையாதாஸ், கே.டி சந்தானம், கம்பதாசன், ஆத்மநாபன், ,கே.பி.காமாட்சி

சில பாடல்கள்:

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் – மக்களைப் பெற்ற மகராசி

மனுசனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே – தாய்க்குப்பின் தாரம்

“வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!”

“உலவும் தென்றல் காற்றினிலே”  ( மந்திரிகுமாரி)

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… (நீலமலைத் திருடன்)

சமரசம் உலாவும் இடமே... ரம்பையின் காதல்

கடவுள் என்னும் முதலாளி (விவசாயி)

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தம புத்திரன்)

காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)

 

 பாடப்புத்தகத்தில் மருதகாசியின் பாடல்


“ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை !

என்றும்நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
                                                     - (ஏரிமுனை)
                                      
.
பூமியிலே மாரியெல்லாம்  சூரியனாலே -பயிர்

பூப்பதுவும் காய்ப்பதும் மாறி யினாலெ - நாம்

சேமமுற நாள்முழுதும் உழைப்ப தனாலே -இந்தத்

தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே !
                                                                -(ஏர்முனை)

.
நெத்தி வேர்வை சிந்தினோமேமுத்துமுத்தாக -அது

நெல்மணியாய் விளைஞ்சிருக்கே கொத்துக்கொத்தாக

பக்குவமாய்  அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக -அடிச்சிப்

பதருநீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!
                           

                                                             -(ஏர்முனை)

.
வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்குவெட்கமா. தலை

வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா -இது

வளர்த்துவிட்ட  தாய்க்குத்  தரும்ஆசை முத்தமா? -என்

மனைக்கு  வரக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா.!”
                                               - (ஏர்முனை)

 

திரைப்படம்: பிள்ளைக் கனியமுது-1958 

இசை: K. V. மகாதேவன்
பாடியவர்:
T. M. செளந்தரராஜன் 

 


குறிப்பு:

கிடைக்கும் போதேல்லாம் விவாசாயத்தையும் சமூகக் கருத்தையும் தன் பாடல்களில் கொண்டு வந்த முக்கிய பாடலாசியராகத் திகழந்தவர் மருதகாசி ஆவார்.

திரைக்கவித்திலகம் அ.மருதகாசி பாடல்கள் எனும் தலைப்பில் அவரது பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 











 

 

Bottom Post Ad

Ads Area