ஆறுமுக நாவலர் (1822 – 1879)
பெயர்: ஆறுமுக நாவலர்
ஊர்: நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை
பிறந்த தேதி: 18.12.1822
நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும், சேனாதிராச முதலியாரிடம் உயர்கல்வியும் பயின்றார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.
தமிழ், சைவம் இரண்டும் செழிக்க அயராது உழைத்தவர்.
தமிழ்ப் பணி
- ஆறுமுக நாவலர் ஏட்டுச்சுவடிகளைக் கண்டறிந்து நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் பாடுபட்டார். தமிழ் நூல்களை முதன்முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தார்.
- தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார்.
- திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற்காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
- ஆறுமுக நாவலர் வித்தியாலனுபாலன ராஜேந்திரசாலை எனும் பெயரில் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவி பாலர்பாடம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவசமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தி உரை, திருசெந்தினிரோட்டக யமகவந்தாதி உரை, திருமுருகாற்றுப்படை உரை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டு உள்ளார்.
- ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
மொழிபெயர்ப்பு
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபராயிருந்த ‘பீட்டர் பேர்சிவல்’ எனும் பாதிரியாருடன் இணைந்து கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
கௌரவம்
- நல்லூரில் நாவலர் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
- இலங்கை அரசு 1971 அக்டோபர் 29-இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.