எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , » ஆண்டாள் பற்றிய செய்தி குறிப்புகள்

ஆண்டாள் பற்றிய செய்தி குறிப்புகள்

 

காலம்

7ஆம் நூற்றாண்டு

நூல்கள்

நாச்சியார் திருமொழி, திருப்பாவை

பாடல்களின் எண்ணிக்கை

நாச்சியார் திருமொழி – 143 திருப்பாவை – 30

சிறப்பு பெயர்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

சமயம்

வைணவம்

  • திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்.
  • ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • நந்தவனத்தில் திருத்துழாய்ச் செடிகளிடையே கிடந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்ட தெய்வக் குழந்தை இவள்.
  • கண்ணனையே மணாளனாகக் காதலித்த இவ்வணங்கு அன்பின் திருவுருவானவள்.
  • இவர் பூஞ்சோலையிலுள்ள மலர்களிலெல்லாம் திருமாலைக் கண்டாள். அவற்றைக் “கோவை மணாட்டி” “முல்லை பிராட்டி” என்று செல்லப் பெயரிட்டு அழைத்தாள்.
  • இவள் பாடியவை நாச்சியார் திருமொழியும் (143 பாடல்கள்) திருப்பாவையும் (30 பாடல்கள்).
  • வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்ற திருப்பாவை அடியை வைத்து கணக்கிடும் ஆய்வாளர்கள் ஆண்டாள் காலம் கி.பி. 885 என்று கூறுகின்றனர்.

ஆண்டாள் பாடல் வரிகள் சில

“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
எரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

 

“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழத்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்”

 

 “கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ!
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன், வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே!

 


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template