Ads Area

அப்பர் பற்றிய செய்தி குறிப்புகள்

 

இயற்பெயர்

மருள் நீக்கியார் ,

பட்டப்பெயர்

தாண்டக வேந்தர்

சமயம்

சைவம்

சிறப்பு பெயர்கள்

மருள்நீக்கியார், தருமசேனர் நாவுக்கரசர், அப்பர்

  • சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர்.
  • இவரது இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும்.
  • இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தமக்கையார் திலகவதியாரால் வளர்க்கப்பட்டார்.
  •  சமண சமயத்தில் தருமசேனர் அழைக்கப்பட்டார்.
  • திலகவதியாரின் வேண்டுகோளின் படி சிவபெருமான் அவருக்கு சூலைநோய் தந்து ஆட்கொண்டார்.
  • திருவீரட்டானத் திருக்கோயிலில் திருநாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
  • “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என மனமுருகிப்பாடி இறைவன் அருளைப் பெற்றார்.
  • திருநாவுக்கரசரை முதலில் வழிபட்டவர் அப்பூதி அடிகள்
  • மகேந்திர பல்லவனால் துன்புறுத்தப்பட்ட நாவுக்கரசர் அனைத்தையும் இறைவன் அருளால் வெற்றி கொண்டார். மன்னனையும் சைவ சமயத்தில் ஈடுபட வைத்தார்.

இவரது பாடல்

 

“மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே”

 

  • எண்பத்தோர் ஆண்டுகள் வாழ்ந்த இப்பெரியோர் தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைத்தவர் ஆவார். சமணமும் பெளத்தமும் செல்வாக்குப் பெற்றுத் திகழந்ததால் அச்சமயஞ் சார்ந்த பிறமொழிகள் மேலோங்கி நின்றன. தமிழர் பழக்க வழக்கம், பண்பாட யாவும் மறக்கடிக்கப்பட்டன. இந்நிலையில் திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் ஊர் ஊராகச் சென்று இசைப்பாடல்கள் பாடி மக்களைத் திரட்டி மீண்டும் பழைய தமிழ்ப் பண்பாட்டிற்குத் திரும்பச் செய்தன.
  • திருநாவுக்கரசர் உழவாரப்படையைக் கொண்டு பாழடைந்த கோயில்களை துப்புரவுச் செய்து செப்பனிட்டார்.
  • “என் கடன்பணி செய்து கிடப்பதே” என்பதைச் செயல்படுத்தியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
  • தாண்டகம் என்ற பா அமைப்பினை தம் பாடல்களில் திறப்பட ஆண்டு தாண்டக வேந்தர் என்னும் பட்டத்தை பெற்றார்.
  • இவற்றில் மேற்போக்கான பொருள் ஒன்றாகவும் உட்பொருள் ஒன்றாகவும் இருக்கவும். திருமூலரே முதற்சித்தர் எனப் போற்றப்படுகிறார். இவ்வாறு மருள்நீக்கியார் தருமசேனராகி நாவுக்கரசர் என அழைக்கப்பட்டு, அப்பர் என அன்போடு அழைக்கப்பட்டு தாண்டக வேந்தராக விளங்கினார்.

 


Bottom Post Ad

Ads Area