பிறப்பு - திருவஞ்சைக்களம் (கேரள மாநிலம்)
காலம் - கி.பி. 9ஆம் நூற்றாண்டு
சிறப்புப்பெயர் - சேரர்கோன், குலசேகரப் பெருமாள்
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட அடியவர் பன்னிருவர். இவர்கள் “ஆழ்வார்கள்” எனப்பட்டனர். அதாவது “பக்தியில் ஆழந்தவர்கள்” எனப் போற்றப் பெற்றனர்.
இவர்கள் திருமாலைப் போற்றியப் பாடிய பாசுரங்கள் “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” எனத் தொகுக்கப் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தவர் நாதமுனிகள் ஆவார்.
இந்நூல் முதலாயிரம், திருஇயற்பா, பெரிய திருமொழி, திருவாய் மொழி நான்கு பகுதிகளைப் பெற்றுள்ளது.
குலசேகர ஆழ்வார் பாடிய 105 பாக்கள் “பெருமாள் திருமொழி” என வழங்கப் பெறுகிறது.
ஆசிரியர் குறிப்பு
இவரை குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் குலசேகரப் பெருமாள், இவர் கேரள மாநிலத்துத் திருவஞ்சைக் களம் என்னும் ஊரில் அரசர் குடியில் பிறந்தவர்.
இவர் தந்தையார் திடவிரதர். இவரைச் “சேரர்கோன்” எனவும் கூறுவர்.
இவர் திருமாலின் பெருமைகளை உணர்ந்து அடியார் திருப்பணியில் தம்மை ஈடுபத்திக் கொண்டவர்.
இவர் பாடிய பக்திப் பாக்கள் “பெருமாள் திருமொழி” என்னம் பகுதியில் இடம் பெற்றுள்ளன. பாடமாக அமைந்த பாடல் ஐந்தாம் திருமொழியன் முதற் பாடலாகும்.
இப்பாடல் திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள திருமாலின் மீது பாடப் பெற்றதாகும்.
இவரது காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு
Home »
Kulasekara Alwar
,
Podhutamil
,
tnpsc
,
குலசேகர ஆழ்வார்
» குலசேகர ஆழ்வார் பற்றிய செய்தி குறிப்புகள்
குலசேகர ஆழ்வார் பற்றிய செய்தி குறிப்புகள்
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற |
Labels:
Kulasekara Alwar,
Podhutamil,
tnpsc,
குலசேகர ஆழ்வார்