எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » TNPSC | Thiru.Vi.Ka | திரு.வி.கலியாண சுந்தரனார் |Podhutamil |

TNPSC | Thiru.Vi.Ka | திரு.வி.கலியாண சுந்தரனார் |Podhutamil |

 

TNPSC | Thiru.Vi.Ka | திரு.வி.கலியாண சுந்தரனார் |Podhutamil |

ஆசிரியர் குறிப்பு:

 

திரு.வி.க

(திருவாரூர் விருத்தாச்சலனார் மகனார் கலியாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க)

பெற்றோர்     :விருத்தாச்சலனார்-சின்னம்மையார்

பிறந்த ஊர்    :காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். இப்போது    இவ்வூர் தண்டலம் என்றழைக்கப்படுகிறது. சென்னை போரூருக்கு மேற்கே குன்றத்தூருக்கு அருகில் உள்ளது.

அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் இராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். 

அதன் பின்னர், 1894-இல் வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. 

1904-ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்ததுவெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரவேற்பிள்ளை  காலமானபிறகு கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவ நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.


1906-ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். 


பின்னர் 1909- வெஸ்லி பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.


பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். 

அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.


தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார். 

எழுதிய நூல்கள்

வாழ்க்கை வரலாறுகள்

    யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம்
    மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
    பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
    நாயன்மார் வரலாறு
    முடியா? காதலா? சீர்திருத்தமா?
    உள்ளொளி

    உரை நூல்கள்


    பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும்
  பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும்
    காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை
    திருக்குறள் - விரிவுரை (பாயிரம்)
    திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்)

அரசியல் நூல்கள்

    தேசபக்தாமிர்தம்
    என் கடன் பணி செய்து கிடப்பதே
    தமிழ்நாட்டுச் செல்வம்
    தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு
    சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து
    இந்தியாவும் விடுதலையும்
    தமிழ்க்கலை

சமய நூல்கள்

 
    சைவசமய சாரம்
    நாயன்மார் திறம்
    தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
    சைவத்தின் சமசரசம்
    முருகன் அல்லது அழகு
    கடவுட் காட்சியும் தாயுமானவரும்
    இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
    தமிழ் நூல்களில் பௌத்தம்
    சைவத் திறவு
    நினைப்பவர் மனம்
    இமயமலை (அல்லது) தியானம்
    சமரச சன்மார்க்க போதமும் திறவும்
    சமரச தீபம்
    சித்தமார்க்கம்
    ஆலமும் அமுதமும்

பாடல்கள்

    முருகன் அருள் வேட்டல்
    திருமால் அருள் வேட்டல்
    பொதுமை வேட்டல்
    கிறிஸ்துவின் அருள் வேட்டல்
    புதுமை வேட்டல்
    சிவனருள் வேட்டல்
    கிறிஸ்து மொழிக்குறள் -
    இருளில் ஒளி
    இருமையும் ஒருமையும்
    அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி
    பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும்
    சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல்
    முதுமை உளறல்
    வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல்
    இன்பவாழ்வு

பயண இலக்கிய நூல்கள்

    இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்)

மறைவு:

செப்படம்பர் 17, 1953 ஆம் ஆண்டு தன்னுடைய 70 வது வயதில் மறைந்தார்.

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template