TNPSC | Kannadasan | கண்ணதாசன் | தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | பொதுத்தமிழ் | Podhutamil |

 



பெயர் - கண்ணதாசன்
இயற்பெயர் - முத்தையா
பிறப்பு - ஜூன் 24, 1927
பிறந்த இடம் - சிறுகூடல்பட்டி
புனைப்பெயர் - காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
சமூகப்பங்களிப்பு - கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்

குறிப்பிடத்தக்க விருதுகள்:

சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
(1961) குழந்தைக்காக

சாகித்திய அகாதமி விருது
(1980 சேரமான் காதலி)


வாழ்க்கைக் குறிப்பு:

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.
 
திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். 
 
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். 
 
பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
 
சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல்,  முல்லை ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். 
 
1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 
 
இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.   

எழுதிய நாடகங்கள்

    அனார்கலி
    சிவகங்கைச்சீமை
    ராஜ தண்டனை

உரை நூல்கள்
 
    அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
    ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
    ஆண்டாள் திருப்பாவை
    ஞானரஸமும் காமரஸமும்
    சங்கர பொக்கிஷம்
    சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
    சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
    திருக்குறள் காமத்துப்பால்
    பகவத் கீதை

   காப்பியங்கள்
 
   ஆட்டனத்தி ஆதிமந்தி
    இயேசு காவியம்
    ஐங்குறுங்காப்பியம்
    கல்லக்குடி மகா காவியம்
    கிழவன் சேதுபதி
    பாண்டிமாதேவி
    பெரும்பயணம்
    மலர்கள்
    மாங்கனி
    முற்றுப்பெறாத காவியங்கள்

    சிற்றிலக்கியங்கள்
 
    அம்பிகை அழகுதரிசனம்
    கிருஷ்ண அந்தாதி
    கிருஷ்ண கானம்
    கிருஷ்ண மணிமாலை
    ஸ்ரீகிருஷ்ண கவசம்
    ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
    ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
    தைப்பாவை

கவிதை நாடகம்
 
    கவிதாஞ்சலி
 
மொழிபெயர்ப்பு

    பொன்மழை 
(ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
    பஜகோவிந்தம்

புதினங்கள்
 
    அவளுக்காக ஒரு பாடல்
    அவள் ஒரு இந்துப் பெண்
    அரங்கமும் அந்தரங்கமும்
    அதைவிட ரகசியம்
    ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
    ஆயிரங்கால் மண்டபம்
    ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
    ஊமையன்கோட்டை
    ஒரு கவிஞனின் கதை
    கடல் கொண்ட தென்னாடு
    காமினி காஞ்சனா
    சரசுவின் செளந்தர்ய லஹரி
    சிவப்புக்கல் மூக்குத்தி
    சிங்காரி பார்த்த சென்னை
    சுருதி சேராத ராகங்கள்
    சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
    தெய்வத் திருமணங்கள்
    நடந்த கதை
    பாரிமலைக்கொடி
    பிருந்தாவனம்
    மிசா
    முப்பது நாளும் பவுர்ணமி
    ரத்த புஷ்பங்கள்
    விளக்கு மட்டுமா சிவப்பு
    வேலங்குடித் திருவிழா
    ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்
 
    ஈழத்துராணி
    ஒரு நதியின் கதை
    காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
    பேனா நாட்டியம்
    மனசுக்குத் தூக்கமில்லை,
    செண்பகத்தம்மன் கதை
    தர்மரின் வனவாசம்

    தன்வரலாறு
 
    எனது வசந்த காலங்கள்
    வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
    எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
    மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கதை வசனம் எழுதிய திரைப்படங்கள்:

    நாடோடி மன்னன்
    மதுரை வீரன்
    ராஜா தேசிங்கு
    மகாதேவி|
    மாலையிட்ட மங்கை
    தெனாலி ராமன்
    மன்னாதி மன்னன்
    திருடாதே
    ராணி சம்யுக்தா