திருக்குறள்
இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையால் எழுதப்பட்ட நூல் ஆகும். இந்தூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்று மூன்று பால்களை கொண்டிருக்கிறது. இந்நூலின் காலம் கி.மு.300 முதல் கி.பி.5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் கி.பி.450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.
நூல் கட்டமைப்பு:
அதிகாரம் 133
மொத்த பாடல்கள் 1330.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
அறத்துப்பால் 38 அதிகாரங்களை உடையது
பாயிர இயல் 4
இல்லறவியல் 20
துறவியல் 13
ஊழியல் 1
பொருட்பால் 70 அதிகாரங்களை உடையது
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
அரசியல் 25
அங்கவியல் 32
குடியியல் 13
காமத்துப்பால் 25 அதிகாரங்களை உடையது
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
களவியல் - 70
கற்பியல் 18
38 + 70 + 25 = 133 அதிகாரங்கள்
திருக்குறளில் 10 அதிகாரங்கள் உடைமை என்ற சொல்லில் அமைந்துள்ளன
1. அன்புடைமை
2. அடக்கமுடைமை
3. ஒழுக்கமுடைமை
4. பொறையுடைமை
5. அருளுடைமை
6. அறிவுடைமை
7. ஊக்கமுடைமை
8. ஆள்வினையுடைமை
9. பண்புடைமை
10. நாணுடைமை
வேறு பெயர்கள்
மூன்று பால்களைகளைக் கொண்டதால் முப்பால் என்று சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு..
உத்திரவேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன், திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
இயற்றியவர்
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
வேறு பெயர்கள்:
வள்ளுவநாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன், மாதாநுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவன் என்ற வேறு பெயர்களும் திருவள்ளுவருக்கு உண்டு.
பதிப்பித்தவர்கள்:
திருக்குறளை முதல் முதலாகப் பதிப்பித்தவர் மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்.
பதிப்பித்த ஆண்டு 1812.
பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாகத் திருக்குறளைப் பதிப்பித்தவர் இராமாநுஜ கவிராயர்.
பதிப்பித்த ஆண்டு 1840.
திருக்குறளின் சிறப்புகள்:
1 3/4 அடிஅளவைப் பெற்ற குறள்களின் தொகுப்பே திருக்குறள்
திருக்குறளில் இடம்பெற்றுள்ள மரங்கள் பனை, மூங்கில்
திருக்குறளில் இடம்பெற்றுள்ள விதை குன்றி மணி. திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து - ஔ
நடப்பு ஆண்டோடு 31 ஐ கூட்டினால் கிடைப்பது திருவள்ளுவர் ஆண்டு
திருக்குறளில் இடம்பெற்ற இரு மலர்கள் அனிச்சம், குவளை. திருக்குறளில் இடம்பெற்ற ஒரே பழம் நெருஞ்சி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் உருவான ஒரே நூல் திருக்குறள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக அறங்களைச் சொல்லும் நூல் திருக்குறள்
திருக்குறளில் ஏழு என்ற எண்ணுப் பெயர் எட்டு குறள்களில் காணப்படுகிறது திருக்குறளில் கோடி என்ற சொல் 7 இடங்களில் காணப்படுகிறது.
திருக்குறளில் 70 கோடி என்ற சொல் 1 முறை காணப்படுகிறது. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் 9
தமிழின் உயிர் என்று போற்றப்படும் நூல் திருவள்ளுவரின் உருவத்தை
முதன்முதலாக ஓவியமாக வரைத்தவர் வேணுகோபால சர்மா. இந்த ஓவியத்தில்
திருவள்ளுவர் அமர்ந்த நிலையில் ஒரு கையில் ஏடும்,மறுகையில் எழுத்தாணியைக்
கொண்டு தாடியுடன் இருக்கின்றார்.
அகரத்தில் தொடங்கி 'ன'கரத்தில் முடியும் நூல்
திருக்குளின் சிறப்பை எடுத்துக்கூறும் நூல் திருவள்ளுவமாலை
சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா போன்றனவும் குறளின் சிறப்பையே கூறுகின்றன.
உரைகள்
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் என்ற பத்துப்பேரும் முதலில் உரை கண்டவர்கள் ஆவர்.
மணக்குடவர், பரிமேலழகர், பரிதி, பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய ஐவரின் உரை மட்டுமே கிடைத்துள்ளது.
பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது ஆகும்.
இராமானுஜக் கவிராயர், திரு.வி.க., நாமக்கல் ராமலிங்கனார், சரவண பெருமாள் ஐயர், தண்டபாணி தேசிகர், அரசஞ் சண்முகனார், புலவர் குழந்தை, பாரதிதாசன், மு.வரதராசனார், நாவலர் நெடுஞ்செழியன், போன்றோர் பிற்காலத்தே உரை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
திருக்குறள் உரைவளம் - தண்டபாணி தேசிகர்
திருக்குறள் உரைக்களஞ்சியம் - தண்டபாணிதேசிகர்
திருக்குறள் நுண்பொருள் மாலை - காரி ரத்தினக்கவிராயர்
திருவள்ளுவ மாலை - பலர் பாடியது
திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு - கி.வா. ஜகந்நாதன்
வள்ளுவம் வ.சுப.மாணிக்கம்
வாழும் வள்ளுவம் - வ.செ.குழந்தைசாமி
வள்ளுவர் கண்ட நாடும் காமமும் தெ.பொ.மீ.
திருக்குறள் மணிவிளக்க உரை (பெரு விளக்க நூல்)
க. அப்பாதுரையார்
திருக்குறள் நடையியல் – இ. சுந்தரமூர்த்தி
சொல்வலை வேட்டுவர் - இ. சுந்தரமூர்த்தி
திருக்குறளுக்கு உரை எழுதிய முக்கியமானவர்கள்
மணக்குடவர்
காலிங்கர்
பரிதியார்
பரிப்பெருமாள்
பரிமேலழகர்
காரி இரத்தினக் கவிராயர்
சுகாத்தியர்
வ. உ.சிதம்பரனார்
திரு.வி. கலியாணசுந்தரனார்
கி.ஆ.பெ.விசுவநாதம்
மு.வரதராசன்
இரா.சாரங்கபாணி
தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
வ.சுப. மாணிக்கம்
குன்றக்குடி அடிகளார்
தமிழண்ணல்
சாலமன் பாப்பையா
ஆரூர் தாஸ்
அ.மா.சாமி
க.ப.அறவாணன்
மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
மு.கருணாநிதி
மொழிபெயர்ப்பு
தெலுங்கு - வைத்யநாத பிள்ளை
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர்
கே.எம்.பாலசுப்பிரமணியம்
இந்தி - பி.டி. ஜெயின்
வடமொழி - அப்பா தீட்சதர்
ஆங்கிலம் - ஜி.யு. போப்
பிரெஞ்சு - ஏரியல்
லத்தீன் - வீரமா முனிவர்
ஜெர்மன் - கிரால்
திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய புகழுரைகள்:
- தமிழ்மாதின் இனிய உயிர்நிலை என்று போற்றப்படும் நூல் திருக்குறள்.
- “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு" என்று பாரதியார் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ளார்
- “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்றும் இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” என்றும் புகழ்ந்தவர் பாரதிதாசன்.
- மேலும், தெள்ளுதமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்" "அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும் உணர்வாகும்" என்றும் "வெல்லாததில்லை திருவள்ளுவனவாய் விளைத்தவற்றுள்" என்று, புகழாரம் சூட்டுகிறார் பாரதிதாசன்
- "வள்ளுவர்செய் திருக்குறளை, மறவறநன் குணர்ந்தோர்கள்" - மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியால் குறிக்கப்படும் நூல்கள் - நாலடியார், திருக்குறள்
- பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் - நால் - நாலடியார், இரண்டு திருக்குறள்
- அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டிக் குறுகத் தரித்த குறள், என்பது ஔவையார் வாக்கு.
- தமிழரின் வாழ்வியல் இலக்கணம் என போற்றப்படும் நூல் திருக்குறள்.
- "திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்ற ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது - கி.ஆ.பெ. விஸ்வநாதம்.
- திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் நூல் திருவள்ளுவமாலை (53 புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன)
- சொல்லழகும் பொருளழகும் ஒருங்கே ஒளிரும் திருக்குறளை வாழ்க்கைக்கு விளக்கமாகக் கொள்வதே சாலப் பொருத்தம் - சீத்தலைச் சாத்தனார் (திருவள்ளுவமாலை)
- வாழ்வியல் நெறிகளை மனித நாகரீகம் பிறநாடுகளில் தோன்றும் முன்னரே வகுத்துக்காட்டிய நூல் திருக்குறள்
- இறைக்கோட்பாட்டின் பொது நெறியை கூறும் நூல் திருக்குறள், நீதி நூல்களில் காலத்தால் முற்பட்டதும் பொருட் சிறப்பால் உயர்ந்ததுமாக திகழ்வது திருக்குறளே. சங்க காலத்து ஒழுக்க முறைகள் சிலவற்றைக் கடிந்து நன்னெறிகளைப் போதிப்பதும் திருக்குறளே .
திருக்குறள் பற்றிய தேர்வுக்குத் தேவையான முக்கியத் தகவல்கள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE