எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » TNPSC | சையது வம்சம் மற்றும் லோடி வம்சம் | Sayyid and Lodi Dynasty | டெல்லி சுல்தான் | இடைக்கால இந்திய வரலாறு | Medieval indian History |

TNPSC | சையது வம்சம் மற்றும் லோடி வம்சம் | Sayyid and Lodi Dynasty | டெல்லி சுல்தான் | இடைக்கால இந்திய வரலாறு | Medieval indian History |

 
முந்தைய வம்சமான துக்ளக் வம்சத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
 
சையது மரபு (கி.பி. 1414–1451)


கிஸிர்கான்
     
துக்ளக் மரபின் வீழ்ச்சிக்குப் பின்னர் சையது மரபினர் டெல்லியை ஆளத் தொடங்கினார்கள். தைமூர் படையெடுப்பால் டெல்லி பகுதியில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி கொண்ட முல்தானின் ஆளுநர் கிஸிர்கான் (கி.பி. 1414-1421) டெல்லியின் ஆட்சியை கைப்பற்றி கி.பி. 1414 இல் சையது மரபினை தொடங்கினார். இவர் அரச பதவிக்குரிய பட்டப் பெயர்களை சூட்டிக் கொள்ளவில்லை.

     பஞ்சாப், சூரத்தில் ஒரு பகுதி ஆகியவற்றை இவர் வென்றாலும் ஜான்பூர், மாளவம், குஜராத், காண்டேஷ்,  வங்காளம், தக்காணம் ஆகிய பகுதிகளை இழந்தார். கி.பி. 1421 இல் கிஸிர்கான் இறந்துவிடுகிறார்.
 
 
முபாரக் ஷா (கி.பி. 1421–1434)  

கிஸிர்கான் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் முபாரக் ஷா மன்னரானார். இவர் கோவில்களையும் மற்றும் தோ ஆப் பகுதியின் உள்ளூர் தலைவர்கள் செய்த கலக்கத்தையும் அடக்கினார். இவர் டெல்லி நீதிமன்றத்தில் இந்துமத உயர்குடியினரை நியமித்தது குறிப்பிடத்தக்கது. யமுனை நதிக்கரையில் 'முபாரக் பாத்' என்னும் நகரை நிர்மாணித்தார். இந்நிலையில் கி.பி. 1434 இல் முபாரக் கொல்லப்பட்டார்.

முகமது ஷா (கி.பி. 1434–1445)
    
முபாரக் மரணத்தை அடுத்து அவரது சகோதரனின் மகனான  முகமது ஷா மன்னர் ஆனார். லாகூர் ஆளுநர் பஹ்லுல் லோடி உதவியுடன் மாளவத்தின் மீது படையெடுத்து அதனை வென்றார். இவற்றிற்குக் காரணமான பஹ்லுல் லோடிக்கு 'கானி கானா' என்ற பட்டத்தைச் சூட்டினர். கி.பி. 1445 ல் முகமது ஷா இயற்கையெய்தினார்.

அலாவுதீன் ஷா (கி.பி. 1445–1457)
 
     முகமது ஷாவை அடுத்து  மன்னரானார். இவர் திறமையற்றுச் செயல்பட்டதால், லாகூர் இன் ஆளுநர் பஹ்லுல் லோடி கி.பி. 1457 ஆம் ஆண்டு டெல்லியின் ஆட்சியைக் கைப்பற்றினார். அதோடு அலாவுதீன் ஷா வுக்கு கட்டாய ஓய்வு அளித்தார். அலாவுதீன் ஷா கி.பி. 1478 இல் மரணமடைந்தார். கி.பி. 1457 இல் சையது வம்சம் முடிவுக்கு வந்தது.
 
லோடி மரபு
 
பாஹ்லால் லோடி 
 
       பாஹ்லால் லோடி (கி.பி. 1451–1489) டெல்லியை ஆண்ட சுல்தான்களில் லோடி மரபே இறுதியாக ஆட்சி செய்தது. இம்மரபைத் தொடங்கி வைத்தவர் பாஹ்லால் லோடி ஆவார்.

     பாஹ்லால் லோடி அரியணையில் அமரவில்லை. உயர் குடியினரின் ஆதரவை பெறுவதற்காகவே உயர்குடியினரோடு கம்பளத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.


     விவேகம் நிறைந்த மன்னரான பாஹ்லால் லோடி தனக்கென்று சில வரையறைகளை வகுத்துக்கொண்டார். தம் நாட்டு உயர்குடிகுழுவினரின் மனநிறைவினை அறிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்குவார். இவர் போரின் மூலம் மேவார், சம்தல், சகிட், எட்வா,  குவாலியர் ஆகிய பகுதிகளை வென்றார்.  பாஹ்லால் லோடி கி.பி. 1489 இல் மரணமடைந்தார்.

சிக்கந்தர் ஷா (கி.பி. 1489–1517)
 
     பஹ்லால் லோடியை அடுத்து அவரது மகன் சிக்கந்தர் ஷாஹி பதவி ஏற்றார். சிக்கந்தர் ஷா என்ற பட்டப் பெயருடன் ஆளத் தொடங்கினார். இவர் தமது பேரரசை பஞ்சாப் முதல் பீகார் வரை விரிவடையச் செய்தார். ஆக்ரா நகரை கட்டினார். இவர்களது காலத்தில் ஆக்ரா நகர் முக்கியத்துவம் பெற்று, நிர்வாகம் மற்றும் பண்பாடு மையமாகத் திகழ்ந்தது.


 சிறந்த ஒற்றர் படையை உருவாக்கினார். வேளாண்மையும், தொழிற்துறையும், முன்னேற்றம் அடைந்தனர். இவர் காலத்தில் கணிதம், வானவியல், யோகா, மருத்துவம், உள்ளிட்ட பல சமஸ்கிருத நூல்கள் பாரசீக மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டன. ஷெனாய் இசையை இவர் மிகவும் விரும்பினார். லஹ்ஜட்–இ–சிக்கந்தர் ஷாஹி என்ற இசைத்தொகுப்பு இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.


     சிக்கந்தர் ஷா ஒரு தீவிர இஸ்லாமிய பற்றுடையவர். எனவே இந்துக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். லோடி மரபின் சிறந்த அரசராக இவர் கி.பி. 1517 இல் மரணமடைந்தார்.
 
இப்ராஹிம் லோடி (கி.பி. 1517–1526)


லோடி மரபின் முடிவு


     சிக்கந்தர் லோடி அடுத்து இப்ராஹிம் லோடி பட்டமேற்றார். இவர் சகிப்புத்தன்மையற்றவராகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவராகவும் விளங்கினார். உயர்குடியினரை அவமானப்படுத்தியதோடு ஒரு சிலரை கொடுமையாக கொலையும் செய்தார். பஞ்சாம் ஆளுநரான தெளலத்கான் லோடியின் மகன் தில்வர்கான் லோடியை இவர் கொடுமைப்படுத்தியதால்,  தெளலத்கான் லோடி காபூல் மன்னர் பாபரின் உதவிக்கு அழைத்தார். பாபர் தனது பெரும் படையுடன் இந்தியாவிற்கு வந்தார். கி.பி. 1526 இல் நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை வென்றார். இந்த வெற்றியானது டெல்லியில் சுல்தான்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முகலாயர் ஆட்சியை தொடங்கி வைத்தது

சையது வம்சம் மற்றும் லோடி வம்சம்  பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template