சென்ற பாடம் - கில்ஜி வம்சம் - வாசிக்க இங்கே அழுத்தவும்.
கில்ஜி வம்சத்தின் திறமையற்ற இவர்களது ஆட்சியினால் கில்ஜி மரபு கி.பி. 1320 முடிவுக்கு வந்தது. தொடர்ச்சியாக பஞ்சாபின் ஆளுநர் காசி மாலிக் உயர்குடியினர் உதவியுடன் கியாசுதீன் துக்ளக் என்ற பெயரில் டெல்லியைக் கைப்பற்றி துக்ளக் வம்சத்தை தோற்றுவித்தார்.
துக்ளக் மரபு
கியாசுதீன் துக்ளக் (கி.பி.1320–1325)
கியாசுதீன் துக்ளக் எனப்படும் காசி மாலிக் தனது கடுமையான முயற்சிகளின் மூலம் ஆட்சிக்கு வந்தார். மிகவும் எளிமையான தொடக்கத்தில் இருந்து தனது திறமையின் காரணமாக உயர்ந்து கி.பி. 1320 இல் துக்ளக் ஆட்சி முறையை ஏற்படுத்தினார்
உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள்
கியாசுதீன் தனது ஆட்சிப் பகுதியில் அமைதியை நிலை நாட்டினார். வேளாண்மை, பாசன வசதி, நீதித்துறை, காவல்துறை, அஞ்சல்துறை, ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். இவரது பேரரசுடன், வாரங்கல், ஒரிசாவின் உத்கல் ஆகியன இணைக்கப்பட்டன. வட இந்தியப் பகுதியை தாக்கிய மங்கோலியர்களை அடக்கி மங்கோலியப் படை தலைவர்களை சிறையில் அடைத்தார்.
ஆட்சியின் முடிவு
கி.பி. 1325ல் வங்கப் பகுதியை வென்றார். அவ்வெற்றியை கொண்டாட அமைக்கப்பட்ட மேடை சரிந்து கியாசுதீன் இறந்து போனார். அவரை அடுத்து இளவரசர் ஜூனாகான் ஆட்சிக்கு வந்தார்.
முகமது பின் துக்ளக் (கி.பி.1325–1361)
கி.பி. 1325ல் இளவரசர் ஜூனாகான் முகமது பின் துக்ளக் என்ற பட்டப் பெயருடன் அரசரானார். இந்தியாவில் அரசியல் மற்றும் நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று பாடுபட்டார். கிபி 1327ல் வாரங்கல் பகுதியை கைப்பற்றினார்.
முகம்மது துக்ளக் தத்துவம், கணிதம், வானவியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாது மருத்துவத்திலும் தத்துவ வாதம் செய்வதிலும் திறன் கொண்டிருந்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். பாரசீகம், அரபு, துருக்கி மற்றும் சமஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
மொரோக்கோ நாட்டு பயணியான இப்னு பதூதா இவரது ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு வந்து இவரது ஆட்சி பற்றிய குறிப்புகளை பதிவு செய்துள்ளார். துக்ளக் தனது நிருவாகத்தில் பல் புதுமைகளைப் புகுத்தினாலும் அவை தோல்வியடைந்தன.
உள்நாட்டுக் கொள்கை
காலியாக கிடந்த அரசு கருவுலத்தை நிரப்பும் பொருட்டு தோ ஆப் பகுதியின் நிலவரியை அதிகரித்தார். திடீரென உயர்த்தப்பட்ட பெரும் வரியைச் செலுத்த வழியில்லாத விவசாயிகள் காடுகளுக்கு ஓடி தஞ்சமடைந்தனர். விவசாயம் தடைபட்டதால் நாட்டில் பஞ்சம் தலை தூக்கியது. துக்ளக் தனது தனது தவறை உணர்ந்து விவசாயிகளை அழைத்து கடன்களை வழங்கினார். புதிய வாய்க்கால்களை வெட்டி தந்தார். ஆனாலும் இவை தாமதப் பட்ட செயலாகவே அமைந்தது.
இந்திய எல்லைக்கருகில் இருந்த மங்கோலியர்கள் தொடர்ந்து படையெடுத்தனர். தலைநகரை காப்பாற்றுவதற்காக நாட்டின் மைய பகுதிக்கு தலைநகரை மாற்ற வேண்டும் என நினைத்தார். உடனடியாக டெல்லியிலிருந்து தேவகிரிக்கு தலைநகரை மாற்ற உத்தரவிட்டார். மக்களும் அரசு அலுவலர்களும் தேவகிரி நோக்கி பயணமாகினர். திடீரென புறப்பட்டதில் பெரும் துயருக்கு ஆளாகினர். இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாட்டினை உணர்ந்த மன்னர், மக்களை மீண்டும் டெல்லிக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டார்.நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணினார் துக்ளக். அதனால் செப்பு நாணயங்களை அறிமுகம் செய்தார். ஆனால் அரசு சார்பாக அதற்கான தனிப்பட்ட நாணயச் சாலை இல்லாததால் மக்களை நாணயங்களை அளவிட தொடங்கினார்கள். இதனால் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. எனவே சுல்தான் செப்பு நாணய முறையை நிறுத்தினார்.
துக்ளக் டிரான்ஸ் ஆக்ஸியானா, கொரேசான், ஈராக் ஆகிய இடங்களை கைப்பற்ற நினைத்தார். எனவே தமது படை பலத்தைப் பெருக்க புதிதாக 3 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்த்துக்கொண்டார். அச்செயல் சாத்தியம் இல்லாமல் போகவே தனது புதிய படைப்பிரிவுகளை கலைத்தார். மங்கோலிய படையெடுப்பால் தமது நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கக்கூடும் எனக்கருதிய துக்ளக் மங்கோலிய தலைவன் தமஷிரின் என்பாரிடம் நட்பு பாராட்டி அவருக்குப் பெரும் பரிசு பொருட்களை அனுப்பி தனது நாட்டை மங்கோலிய படையெடுப்பில் இருந்து காப்பாற்றினார். இத்தகைய செயல்கள் ஆனது நிதி நிலையை மேலும் சீர்குலைத்தது.
மதிப்பீடு
முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்துமே சிறந்த வகைகளாகும். ஆனால் சூழ்நிலையை அறிந்து அவைகள் நடைமுறைப்படுத்தவில்லை. எனவேதான் அவரது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அவரது அவசரமான கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்தப்பட்ட இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்கு காரணம் ஆயின.
பிரோஸ் துக்ளக் (கி.பி. 1351–1388)
கியாசுதீன் துக்ளக் கின் இளைய சகோதரனின் மகன் பி ரோஸ் பிளவர் ஆவார். இவர் கி.பி. 1351 ஆட்சியில் அமர்ந்தார்.
நிர்வாக சீர்திருத்தங்கள்
மக்களுக்குப் பயன்தரும் பல சீர்திருத்தங்களை பிரோஸ் துக்ளக் உருவாக்கினார். முகமது பின் துக்ளக்கினால் வழங்கப்பட்ட தக்காவி என விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். வருவாய்த் துறை அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்தினார். சட்டத்திற்குப் புறம்பான தேவையற்ற வரிகள் இவர் தனது மக்களிடம் இருந்து நான்கு விதமான வரிகளை வசூலித்தார். அவை:
கரோஜ் – விளைச்சலில் ⅒ பங்கு
கம்ஸ் – போர்களில் கைப்பற்றிய பொருட்களில் ⅕ பங்கு
ஜெஸியா – தலைவரி
ஜகாத் – குறிப்பிட்ட இஸ்லாமிய மத சடங்குகளை செய்வதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவை ஆகும்.
இவர் பொது பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பல பாசன வாய்க்கால்களை வெட்டினார். 5 அணைகள், 150 கிணறுகள், 100 பாலங்கள், ஆகியவைகள் கட்டப்பட்டன. பிரோசாபாத், பெதாபாத், ஜான்பூர், ஹிஸ்ஸார் உட்பட்ட பல நகரங்களை உருவாக்கி னார்.
குரானின் அடிப்படையிலான சட்டங்களை நடைமுறைப் படுத்தினார். பிராமணர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. சித்திரவதை செய்தல் உடல் உறுப்புகளை வெட்டுதல் ஆகிய கொடிய தண்டனைகளை ஒழித்தார்.
வேலைவாய்ப்பு அமைப்பு, திருமண, அமைப்பு, (திவானி கிராமத்) மருத்துவமனைகள் (தார்–உல்–பா) போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
அயலுறவுக் கொள்கை
கி.பி. 1353 மற்றும் 1359 ஆம் ஆண்டுகளில் பிரோஸ் ஜெய் நகரை வென்றதோடு பூரியில் ஜெகன்நாதர் கோயிலை அழித்தார். நாகர் கோட், கட்டார் ஆகிய பகுதிகளின் அரசர்களை வென்று அவர்களை திறை செலுத்த செய்தார்.
மதிப்பீடு
பிரோஸ் தனது சீர்திருத்தங்களின் வழியாக நாட்டை வளமடையச் செய்தார். பதூஹத்–இ–பெரோஷாஹி என்னும் சுய வரலாற்று நூலை எழுதினார். ஜியாவுதீன் பரணி என்ற அறிஞரை ஆதரித்தார். இவரது காலத்தில் மருத்துவம், அறிவியல், கலைகள், போன்றவற்றில் எண்ணற்ற சமஸ்கிருத நூல்கள் பாரசீக மொழி மொழிமாற்றம் செய்யப்பட்டது. குத்துப்– பெரோஸ்– ஷாஹி என்ற இயற்பியல் தொடர்பான நூலும் எழுதப்பட்டது.
பிற்கால துக்ளக் மரபினர்
பிரோஷ் துக்ளக்கை அடுத்து இரண்டாம் கியாசுதீன் துக்ளக் ஷா, அபூபக்கர் ஷா, நாசிர்– உத்–தீன்–முகமது துக்ளக் ஆகியோர் ஆட்சி செய்தனர். எனினும் இவர்கள் திறமையற்ற ஆட்சியாளர்களாகவே இருந்தனர். பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டின் பல பகுதிகள் பிரிந்து சுதந்திரமாயின. டெல்லி, பஞ்சாப், ஆகியன மட்டுமே துக்லக் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இந்தியாவில் கி.பி. 1414 வரையில துக்ளக்குகளின் ஆட்சி நீடித்தது. இக்காலகட்டத்தில் தான் தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது.
தைமூர் படையெடுப்பு (கி.பி. 1398)
சமர்கண்ட் பகுதியை தைமூர் என்பவர் ஆட்சி செய்தார். இவர் இந்திய நாட்டு செல்வ செழிப்பை அறிந்ததால் இந்தியா மீது படை எடுக்க முடிவெடுத்தார். நசீர் முகமது துக்ளக் என்பவர், ஆட்சியின் போது அவருடன் போரிட முனைந்து சிந்து நதியைக் கடந்து டெல்லியை நோக்கி வந்தார். எனவே நசீர் முகமத் அவரது தளபதி மல்லு இக்பால் ஆகியோர் தைமூறை எதிர்த்து போரிட்டனர். முடிவில் தைமூரே வென்றார். கி.பி.1398 ல் டெல்லி தைமூர் ஆல் கைப்பற்றப்பட்டது. வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு டெல்லி மக்களை கொன்று குவித்தார். அதோடு அவர்களது உடமைகளையும் கொள்ளை அடித்தார். தைமூரின் படையெடுப்பு துக்ளக் மரபின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.
துக்ளக் வம்சம் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE