Ads Area

TNPSC | குடியரசுத்துணை தலைவர் |Vice President of India | இந்திய அரசியலமைப்பு | Indian Constitution |


அமெரிக்க அரசமைப்பினைப்  போன்று இந்திய அரசமைப்பும் துணை குடியரசு தலைவர் பதவியை (இந்திய அரசமைப்பு பிரிவு 63 வழங்குகிறது.  
 
இந்தியாவின் துணை குடியரசுத்தலைவர் பதவி நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகும்.  

தேர்தல் 

ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். சட்டப்பிரிவு 66(1) இன் படி இந்திய குடியரசுத் துணை தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

தகுதிகள் 

இந்திய குடியரசுத் துணை தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் கீழ்காணும் தகுதிகளை கொண்டவராக இருத்தல் வேண்டும்.

1.  இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்
 
2. 35 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்
 
3. மாநிலங்களவை உறுப்பினராவதற்கு தகுதி வாய்ந்தவராக           
    இருக்க வேண்டும்.
 
4. மத்திய அரசியலோ மாநில அரசிலும் அல்லது உள்ளாட்சி  அமைப்புகளிலும் ஊதியம் பெரும் பதவியில் இருத்தல் கூடாது.

பதவிக்கான வரையறைகள் 

குடியரசுத் துணைத் தலைவர் ஐந்து வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். 
 
குடியரசுத் தலைவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன் மூலம் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அவர் தனது பதவியில் இருந்து தாமாகவே பதவி விலகலாம்.  
 
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அறுதிப் பெரும்பான்மை ஆதரவோடு அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் அப்பதவியில் இருந்த அவரை நீக்க முடியும். 
 
ஆனால் அத்தகைய தீர்மானத்திற்கு 14 நாட்கள் முன்னறிவிப்பு அவசியமாகும்.

பொறுப்புகளும் பணிகளும் 

குடியரசுத் துணை தலைவர் அப்பதவியினால் மாநிலங்கள் அவையின் அலுவல் வழி தலைவராகிறார் (இந்திய அரசமைப்பின் 64வது உறுப்பு)
 
அவர் மாநிலங்களவை கூட்டங்களை நடத்துகிறார்.  மக்களவையில் சபாநாயகர் போன்றே இவருக்கும் மாநிலங்களவையில் அதிகாரம் உள்ளது.
 
மாநிலங்களவை தலைவர் என்ற நிலையில் மட்டுமே இவர் ஊதியம் பெறுகிறார். ஏனெனில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு என எந்த ஊதியமும் இல்லை. 
 
குடியரசுத் தலைவரின் இறப்பு அல்லது பதவி நீக்கம் ஆகியவற்றின் காரணமாக காலியிடம் ஏற்பட்டால் அல்லது வேறு ஒரு குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை குடியரசுத் துணைத் தலைவரே அந்த பதவியை கூடுதலாக வகிப்பர்.  
 
இந்த காலம் ஆறு மாதங்களுக்கு மட்டும் ஆனதாகும். 
 
இந்திய குடியரசு தலைவராக செயல்படும்போது குடியரசு துணைத் தலைவரின் ஊதியம் மற்றும் இதர படிகள் நாடாளுமன்றம் முடிவுகளின்படி பெறுகிறார்.   

அதே நேரத்தில் அவர் மாநிலங்கள் அவையின் தலைவராக செயல்பட முடியாது.  மாநிலங்களவையில் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.
 
மிகப்பெரிய பிரச்சினை போது அதன் நடவடிக்கைகளை அவர் ஒத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவும் செய்கிறார். பல்வேறு குழுக்களுக்கு அதனுடைய செயல்பாடுகள் தொடர்பாக அவர் வழிமுறைகளை வழங்குகிறார்.

குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பதவிகள் ஒரேசமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின் பணிகளை செயல் ஆற்றுவார். 
 
1969 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம் இதயத்துல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முடிவு வாக்கு

மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100 படி துணை குடியரசு தலைவர் வாக்கு அளிக்கலாம். 
 
இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையை குறிக்கிறது. 
 
ஆகையால் அவர் இந்த விருப்புரிமை அதிகாரத்தை சட்ட மசோதாவிற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்கும் அதிகாரம் பெற்றவர் ஆவார். 
 
அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.
 
துணை குடியரசுத்தலைவர் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க   TOUCH HERE
 

Bottom Post Ad

Ads Area