எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , » TNPSC | மௌரிய பேரரசு | Maurya Empire| பண்டைய இந்திய வரலாறு | Old Indian History |

TNPSC | மௌரிய பேரரசு | Maurya Empire| பண்டைய இந்திய வரலாறு | Old Indian History |


மௌரிய
பேரரசு  
 
கிரேக்க வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய சமகாலத்து பதிவுகளில் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது தட்சசீலத்தில் வாழ்ந்த ஒரு இளைஞர் தான் சந்திரகுப்தர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.  
 
கிரேக்க வரலாற்று ஆய்வாளர்கள் அவரது பெயரை சண்டர்கோட்டஸ் என்றும் சண்டரகோப்டஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இவை பிற்காலத்தில் சந்திரகுப்தர் என்ற சொல்லாகத் திரிந்தது. அலெக்சாண்டரிமிருந்து பெறப்பெற்ற உந்துதலால் சந்திரகுப்தர் நந்தர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர்களை விரட்டினார். மக்கள் செல்வாக்கு இல்லாத அரசனை எதிர்த்து கிளர்ச்சி செய்யுமாறு மக்களை தூண்டி அல்லது மக்கள் செல்வாக்கு இல்லாத அரசை தூக்கி எறிய மக்களின் ஆதரவைப் பெற்று இதை சாதித்தார் சந்திரகுப்தர்.  
 
கிமு 321 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசை அமைத்து அதன் முதல் பேரரசர் ஆனார் சந்திர குப்தர். பேரரசை குஜராத் வரை விரிவு படுத்தி இருந்தார் என்று ஜூனாகத்  பாறை எழுத்துக்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. உள்ளூர் வரலாறுகளில் படி அவரது மற்றொரு சாதனை  அலெக்சாண்டர் விட்டுச்சென்ற கிரேக்க தளபதிகளுடன் போரிட்டு அவர்களை வென்றது என கூறலாம்.
 
அவரது ஆட்சியில் மற்றொரு முக்கியமான நிகழ்வு அவர் அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவரான செல்யூகஸ் நிகேடருடன் நடத்திய போர் ஆகும். அலெக்சாண்டரின் மரணத்திற்கு பிறகு செல்யூகஸ் பஞ்சாப் வரை பரவியிருந்த பகுதிகளில் தமது அரசை நிறுவினார். கி.மு 301 க்கு சில காலம் முன்பாக சந்திரகுப்தர் அவர் மீது போர் தொடுத்து செல்யூகஸைத் தோற்கடித்து அவரை பஞ்சாப் பகுதியை விட்டு விரட்டினார். இறுதியில் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர் அதன்படி 500 போர் யானைகளை செல்யூகஸுக்கு வழங்கினார் சந்திரகுப்தர். 
 
செல்யூகஸ் தனது தூதரை சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பி வைத்தார் அந்த தூதரின் பெயர்தான் மெகஸ்தனிஸ். அவர் எழுதிய இண்டிகா என்ற நூலில் உள்ள குறிப்புகளின் மூலம்தான் சந்திரகுப்தரின் அரசு, நிர்வாகம் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

 மௌரியப் பேரரசு - இந்தியாவின் முதல் பேரரசு

 

 தலைநகர்


பாடலிபுத்திரம். தற்போதைய பாட்னா மௌரியப் பேரரசின் மாபெரும் கலை நகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.

 அரசு

 முடியாட்சி

வரலாற்றுக்காலம்

ஏறத்தாழ கி.மு. 322 முதல் 187 வரை

அரசர்கள்

 சந்திரகுப்தர், பிந்துசாரர், ‌ அசோகர்

சான்றுகள்:

 தொல்லியல் சான்றுகள்

முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்

 கல்வெட்டுகள்

அசோகரின் கல்வெட்டு போராணைகள், ஜூனாகத் கல்வெட்டு ஆகியவை.

 மதச்சார்பற்ற இலக்கியங்கள்

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்

 

விசாகதத்தரின் முத்ராராட்சக்ஷம் மாமூலனாரின் அகநானூறுப் பாடல்

 மதம் சார்ந்த இலக்கியங்கள்

 சமண, பௌத்த நூல்கள், புராணங்கள்

         வெளிநாட்டு சான்றுகள்தீபவம்சம், ‌ மகாவம்சம், இண்டிகா


சந்திரகுப்த மௌரியர்

         மௌரியப் பேரரசே இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும்.  சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார். சந்திரகுப்த மௌரியர் இப் பேரரசை மகதத்தில் நிறுவினார்.இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். இதனால் சந்திர குப்தர் இந்தியாவை ஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான பேரரசன் எனவும் புகழப்படுகின்றார்.  

சந்திர குப்த மௌரியர் கி.மு 317ல் செலூக்கஸ் நிக்கோத்தரின் கிரேக்க செலுக்கியப் பேரரசு மீது படையெடுத்தார். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் கிரேக்க பேரரசின் கிழக்குப் பகுதிகளிலான ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மௌரியப் பேரரசில் இணைக்கப்பட்டது.


மேலும் செலுக்கஸ் நிக்கோத்தரின் மகள் ஹெலெனாவை சந்திரகுப்தர் மணம் முடித்தார். இவரது அரசவையில் கிரேக்க செலுக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்காத்தரின் தூதுவராக மெகஸ்தெனஸ் இருந்தார். சந்திரகுப்தரின் ஆட்சி முறைமை குறித்து சாணக்கியரின் அர்த்தசாத்திரம் மற்றும் மெகஸ்தனிஸ் எழுதிய "இண்டிகா" மூலம் அறியப்படுகிறது. கி.மு 301 வரை அரசாண்ட சந்திரகுப்தர் தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் சமண மதத்தைத் தழுவி துறவியாக வாழ்ந்து, கி.மு 298 ல் தற்கால கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவில், பத்திரபாகு முனிவருடன் வாழ்ந்து
சமணச் சடங்கான சல்லேகனா முறையில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் இது ஒரு சமணச் சடங்கு முறையாகும்.முக்தியடைந்தார்.

சந்திர குப்தர் நினைவாக கட்டப்பட்ட பழைமையான கோவில் சந்திராபாஸ்டி.

மெகஸ்தனிஸ்

       கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக, சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர். 14 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். அவர் எழுதிய நூலின் பெயர் இண்டிகா. இந்நூல் மௌரியப் பேரரசைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஒரு முக்கிய சான்றாகும்.

சாணக்கியர்

மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரை இத்தாலியின் மேக்கிவல்லி என்ற சிந்தனையாளருடன் ஒப்பிடுகின்றனர். ( மேக்கிவல்லி எழுதிய நூல் பிரின்ஸ்) மேற்கத்திய உலகில் இவர் இந்தியாவின் மாக்கியவெல்லி என்று அறியப்படுகிறார். இவர் தக்சசீலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். விற்பனை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இவரின் பூர்விகம் கேரளா

பிந்துசாரர்

      பிந்துசாரர் இயற்பெயர் சிம்ஹசேனா. இவர் சந்திரகுப்த மௌரியன் மகனாவார்அமிர்தகதா என்று இவருக்கு ஒரு பெயர் உண்டு. அதன் பொருள் 'எதிரிகளை அழிப்பவன்' என்பதாகும்.  பிந்துசாரர் இன் ஆட்சியின்போது மௌரியர் ஆட்சி இந்தியாவின் பெரும் பகுதியில் பரவியது. அவர் தனது மகன் அசோகரை உஜ்ஜைனியின் ஆளுநராக நியமித்தார். அவருக்குப்பின் அசோகர் மகதத்தின் அரசரானார்.

அசோகர்

 மௌரிய அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர் அசோகர் ஆவார். அசோகருக்கு அசோகவர்த்தனர், தேவனாம் பிரியர், பிரியதர்ஷன் என்று பல பெயர்கள் உண்டு. அசோகர் என்றால் ’வலிகள் இல்லாத’ , ‘துன்பம் அற்ற’ என்பது பொருள். தேவனாம்பிரியர் என்றால் ’கடவுளை விரும்புபவன்’ என்பது பொருள். பிரியதர்ஷன் என்றால் அனைவரையும் விரும்புபவன் என்பது பொருள். தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார்,  

அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது. எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது, மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.  

அசோகர் கி.மு.261 ல் கலிங்கத்தில் தொடுத்த  போரையும் அப்போரின் பயங்கரத்தையும் அசோகரே தன்னுடைய 13வது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்

      கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் ஒரு பௌதர் ஆனார். தர்மத்தின் கொள்கையை மக்களுக்கு பரப்புவதற்காக அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணங்கள் தர்ம யாத்திரைகள் மேற்கொண்டார். அசோகரின் இரண்டாம் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அது அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மிக உயர்ந்த கருத்தான மனிதாபிமானத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

      கீழ்கண்ட வகைகளுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவை:

*இரக்க உணர்வு

*அறக்கொடை

*தூய்மை

*புனிதத் தன்மை

*சுயகட்டுப்பாடு

*உண்மை உடைமை

*மூத்தோர், ஆசிரியர், பெற்றோர் ஆகியோர் இடத்தில் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்து கொள்ளல்

        அவர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தை பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தார். மதத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார். அசோகர் தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார். பேரரசு முழுவதிலும் பௌத்த மதத்தை பரப்புவதே அவர்களுடைய பணியாகும். அசோகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மத மாநாட்டை கூட்டினார் .

அசோகரின் பேராணைகள்

          பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் 33. அவைகள் அசோகரால் தூண்களிலும் குகை சுவர்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அவை அமைதி நேர்மை நீதி ஆகியவற்றின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் மக்களின் நலன் மீது அவர் கொண்டிருந்த அக்கறையையும் விவரிக்கின்றன

பேராணைஅரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர்கள் வெளியிடப்பட்ட ஆணை பிரகடனம் ஆகும்.

அசோகர் கல்வெட்டுகள் எழுத்து முறை

சாஞ்சி -  பிராமி

காந்தகார் - கிரேக்க மற்றும் அராமிக்

வடமேற்கு பகுதிகள் - கரோஸ்தி

அசோகர் உடைய 2 மற்றும் 13ஆம் பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்கள் ஆன பாண்டியர், சோழர், கேரளபுத்திரர் ஆகியோரையும் சத்திய புத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.

மௌரியரின் நிர்வாகம்

மையப்படுத்தப்பட்ட நிர்வாகம்

 அரசர்

அரசரே மௌரியப் பேரரசின் மேலான இறையாண்மை மற்றும் அதிகாரம் உடையவர் ஆவார்

மந்திரிப் பரிஷத் அமைச்சரவை அரசருக்கு உதவியது. இந்த அமைச்சரவை ஒரு புரோகிதர் ஒரு சேனாபதி ஒரு மகா மந்திரி மற்றும் இளவரசனை கொண்டதாகும்.

அரசர் ஒரு மிகச்சிறந்த உளவுத்துறையை கொண்டிருந்தார்.

வருவாய் முறை

*நிலங்களை அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தந்தது. லும்பினியிலுள்ள அசோகரது கல்வெட்டு பாலி மற்றும் பாகா என்னும் இரண்டு வரிகளை குறிப்பிடுகின்றது

*மொத்த விளைச்சலில்பங்கு  பாகா நில வரியாக வசூல் செய்யப்பட்டது.

*காடுகள் சுரங்கங்கள் உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அரசுக்கு கூடுதல் வருவாயாக அமைந்தன.

*அரசு வருவாயில் பெரும்பகுதி இராணுவத்திற்கான ஊதியம், அறக்கட்டளைகள், நீர்ப்பாசன திட்டங்கள், சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப் பணிகள் ஆகியவைகளுக்காகச் செலவழிக்கப்பட்டன.

நீதி நிர்வாகம்

*அரசரே நீதித் துறையின் தலைவர் ஆவார். அவரே மேல்முறையீட்டு நீதிமன்றமும் ஆவார்.

*அரசர் தனக்கு கீழாக பல துணை நீதிபதிகளை நியமித்தார். தண்டனைகள் கடுமையாக இருந்தன.

இராணுவ நிர்வாகம்

    அரச படைகளின் தலைமைத் தளபதி ஆவார்.

30 நபர்களைக் கொண்ட குழுவும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு குழுவும் கீழ்க்கண்டவற்றை நிர்வாகம் செய்தது.

*கடற்படை

*ஆயுதங்கள் [போக்குவரத்து மற்றும் விநியோகம்]

*காலாட்படை

*குதிரைப்படை

*தேர்ப்படை

*யானைப்படை

நகராட்சி நிர்வாகம் [நகரம் மற்றும் மாநகரம்

*நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 30 உறுப்பினர்களை கொண்ட குழுவானது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தது

*நகரம் நிர்வாகம் 'நகரிகா' என்னும் அதிகாரியின் கீழ் இருந்தது.

(ருத்ரதாமனின் ஜூனாகத்/கிர்னார் கல்வெட்டு சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் சந்திரகுப்த மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது. அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு பெற்றன)

நாணயம்

   பணம் வணிகத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தை பணமாகவே வழங்கியது.

       மயில், மழை மற்றும் பிறைச் சந்திர வடிவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் , 'மாஸாகாஸ்' என்று அழைக்கப்பட்ட செப்பு நாணயங்கள் ஆகியன அரசினுடைய நாணயங்களாக இருந்தன.

வணிகமும் நகரமயமாதலும்

       வணிகம் செழிப்புற்றது. குறிப்பாக கிரேக்கம், மலேயா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது. காசி (பனாரஸ்) வங்கா (வங்காளம்) காமரூபம் (அஸ்ஸாம்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை ஆகிய இடங்களில் சிறப்புமிக்க துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன என்று அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

மௌரியர் கலையும் கட்டடக் கலையும்

மௌரியர் கால கலையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

*உள்ளூர் கலையக்க்ஷன், யக்க்ஷி உருவச்சிலைகள்

(யக்க்ஷன் என்பது நீர் வளம் மரங்கள் காடுகள் காட்டுச் சுழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார். யக்க்ஷன் என்பது யக்க்ஷாவின் பெண் வடிவமாகும்)

*அரச கலைகள்அரண்மனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் ஒற்றைக் கல் தூண்கள் பாறை குடைவரைக் கட்டிடக்கலை,ஸ்தூபிகள்

ஸ்தூபி

  ஸ்தூபியானது செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக் கோள வடிவம் உடைய குவிமாடம் போன்ற அமைப்பாகும். புத்தரின் உடலுறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

சாரநாத்தில் உள்ள ஒற்றைக் கல் தூண்

இத்தூணின் சிகரப்பகுதியில் தர்மசக்கரம் இடம்பெற்றுள்ளது.

குகைக்கோவில்கள்

நாகர்ஜுனா பராபர் குன்றுகளில் உள்ள குடைவரை குகை கோவில்கள் உள்ளன.

புத்தகயாவுக்கு வடபுறம் பல குகைகள் உள்ளன. பராபர் குன்றில் உள்ள மூன்று குகைகளில் அசோகர் உடைய அர்ப்பணிப்புக் கல்வெட்டுகள் உள்ளன. (இக்குகைகள் யாருக்காக அமைத்து தரப்பட்டன என்ற விபரங்கள் அடங்கிய கல்வெட்டுகள்)

 முடிவிற்கான காரணங்கள்

முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த அசோகர், கி.மு. 232 இல் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மௌரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் மகன் குணாளன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரத மௌரியர் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேய மௌரியப் பேரரசு வீழ்ந்தது.

பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்கள்

பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை மேலும் வலிமை குன்றச் செய்தது.

*மௌரிய பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடையடை தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே சுங்க அரச வம்சத்தை நிறுவினார்.


"அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார்"

                  H.G வெல்ஸ்வரலாற்று அறிஞர்

மௌரிய பேரரசு  பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template