பிறப்பு:
13.04.1930
13.04.1930
ஊர்:
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு
மனைவியின் பெயர்:
கௌரவாம்பாள்
பெற்றோர்:
அருணாச்சலனார் - விசாலாட்சி
மறைவு:
08.10.1959
வாழ்க்கைக்குறிப்பு:
எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். இவரது தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர்.
1959-ஆம் ஆண்டு இவருடைய குழந்தை குமரவேல்
பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம்
அடைந்தார்.
பள்ளிப்படிப்பு மட்டுமே படிக்க முடிந்த
கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிச இயக்கத்தின் மீதும்
ஈடுபாடு கொண்டிருந்தார்.
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர்.
இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக்
காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய
நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.
திரையுலகில் பாட்டாளி மக்களின்
ஆசைகளையும், ஆவேசத்தையும், அருமையான பாடல்களாக இசைத்தார். இவர்
இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி
பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக
முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.
தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு
மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில்
ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில்
இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான
சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர்
ஆகியோர் நடிகர்களாக இருந்தனர்.
பட்டுக்கோட்டை கல்யாணசிந்தரம் ஒ.ஏ.கே.
தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த்
திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும்
கலையைக் கற்றுகொள்வதில் ஆர்வாமாக இருந்தார். புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்து குயில் எனும் பத்திரிக்கையில் உதவியாளராகப் பணியாற்றினார். இதன் நினைவாக தன் மனைவிக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் தன் குரு பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க என்றுதான் ஆரம்பிப்பாராம்.
சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டையாருக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’, ‘அரசிளங்குமரி’, ‘கலை அரசி’, ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘மகாதேவி’, ‘விக்கிரமாதித்தன்’, ‘திருடாதே’ போன்ற படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த ‘மக்களை பெற்ற மகராசி’, ‘அம்பிகாபதி’, ‘இரும்புத்திரை’, ‘உத்தமபுத்திரன்’, ‘பதிபக்தி’, ‘தங்கப்பதுமை’, ‘பாகப்பிரிவினை’, ‘புனர் ஜென்மம்’ போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.
பாரதிதாசனின் தலைமையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் கௌரவாம்பாளுக்கும் திருமணம் நடந்தது..
1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் பாவேந்தர் விருது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது.
மக்கள் கவிஞர் எனும் பட்டம் கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
பாடல்களில் சில:
திருடாதே பாப்பா திருடாதே
தங்காதே தம்பி தூங்காதே
சின்னப்பயலே சின்னப்பயலே
வாடிக்கை மறந்ததும் ஏனோ
ஆடைகட்டி வந்த நிலவோ
நந்தவனத்திலோர் ஆண்டி