எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » TNPSC | நாலடியார் | தேர்வுக்குத் தேவையான குறிப்புகள் | Naladiyar important notes

TNPSC | நாலடியார் | தேர்வுக்குத் தேவையான குறிப்புகள் | Naladiyar important notes

நாலடியார்
 
 

 
 
 • பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார். 
 • முத்தரையரைப் பற்றிக் கூறும் நூல் நாலடியார். 
 • பதினெண்கீழ்க்கணக்கில் திருக்குறளுக்கு அடுத்துப் புகழ்பெற்ற ஒரு நீதி நூல்.
 • இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. 
 • இது பாண்டி நாட்டு சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.  
 • எனவே இது ‘நாலடி நானூறு’ எனவும் அழைக்கப்படுகிறது.
 • திருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூவகை பிரிவுகளுடையது.
 
அறத்துப்பால் 13.
பொருட்பால் 24.
காமத்துப்பால் 3
 
நாலடியாரில் மொத்தம் 40 அதிகாரங்களும் 12 இயல்களும் உள்ளன.
 • நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார்
 • நாலடியாருக்கு அதிகாரம் வகுத்தவர் பதுமனார். 
 • முப்பாலாகப் பகுத்தவர் தருமர்
 • உரைகண்டவர்கள் பதுமனாரும், தருமரும்
 • நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. 
 • திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.
 • "ஆலும் வேலும் பல்லுக்குறுதி;
           நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 
          "சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 
          'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' 
 
என்கிற கூற்றுகள் இதன் பெருமையைத் திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புகின்றன.

 • வேளாண்வேதம், நாலடி நானூறு என்றும் வழங்கப்படும் நூல்.
 • வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது
 • ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
முக்கிய பாடல் வரிகள்:
 
     "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
     ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
     சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
      வந்தது வந்தது கூற்று"
 
  "கல்வி கரையில கற்பவர் நாள்சில
   மெல்ல நினைக்கின் பிணிபல
   தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே
    நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து "
 
 "குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
  மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
  நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
  கல்வி அழகே அழகு"

  "பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
 வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
 வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
 தானே சிறியார் தொடர்பு
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template