எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , » TNPSC | கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை| பொதுத்தமிழ் | Desiyavinayagam Pillai | Kavimani| Vendrukaattu

TNPSC | கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை| பொதுத்தமிழ் | Desiyavinayagam Pillai | Kavimani| Vendrukaattu

 


பிறப்பு:  ஆகஸ்ட் 27, 1876

ஊர்: தேரூர்,குமரி மாவட்டம்

சமூகப் பங்களிப்பு:  கவிஞர்

பெற்றோர் :   சிவதானுப்பிள்ளை, ஆதிலட்சுமி

மனைவி: உமையம்மை

இறப்பு:  செப்டம்பர் 26 1954 

சிறப்புப் பெயர்கள்: கவிமணி, குழந்தைக் கவிஞர்,  இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர்


வாழ்க்கைக் குறிப்பு:

எம்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.

எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 

1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழ்வேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

கவிமணியின் படைப்புகள்:

    ஆசிய ஜோதி , (1941)
    மலரும் மாலையும், (1938)
    மருமக்கள்வழி மான்மியம், (1942)
    கதர் பிறந்த கதை, (1947)
    உமார் கய்யாம் பாடல்கள், (1945)
    தேவியின் கீர்த்தனங்கள்
    குழந்தைச்செல்வம்
    கவிமணியின் உரைமணிகள்
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template