TNPSC - PODHUTAMIL - வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று,வினையாலணையும் பெயர்,தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல்

வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் வேர்ச்சொல்லை எப்படி கண்டறிவது என்பதைப் பற்றி பார்த்தோம் அல்லவா! (பார்க்காதவர்கள் பார்க்க)

இந்தப்பகுதியில் வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று,வினையாலணையும் பெயர்,தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல்



          வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று,வினையாலணையும்                 பெயர்,தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல்


           இந்தப் பகுதியிலிருந்து  கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதாக  விடையளிக்கலாம்.
 
           இலக்கண குறிப்பை நன்றாக படித்திருப்பவர்களுக்கு இது இன்னும் எளிமையான பகுதி  நாம் முன்னதாக வேர்ச்சொல்லை எப்படி கண்டறிவது என்பதைக் பார்த்தோம். வேர்ச்சொல்லைக் காண் வினாக்களைக் கேட்பது போல வேர்ச்சொல்லைக் கொடுத்து இதன் வினைமுற்றை கண்டுபிடி அல்லது வினையாலணையும் பெயரைக் கண்டுபிடி என்பதைப்போல வினாக்கள் அமையும்.
          
 (எ.கா)
'படி' என்ற சொல்லின் தொழிற்பெயரைக் கண்டுபிடி

அ)படித்த ஆ)படித்துஇ) படித்தவன் ஈ)படித்தல்
         
விடை:ஈ.படித்தல்


'தல்' எனும் விகுதி வந்தால் தொழிற்பெயர் என்பதை இந்தப்பதிவில் நாம் பார்த்தோம்.

படித்த என்ற சொல்லின் விகுதி 'அ' என்பதால் அது பெயரெச்சம்.படித்து என்ற சொல்லின் விகுதி 'உ' என்பதால் அது வினையெச்சம்.இவ்விரண்டையும் இந்தப் பதிவில் பார்த்திருக்கிறோம்..மீண்டும் பார்க்க இங்கே செல்லவும்.

     படித்தவன் என்ற சொல்  வினையாலணையும் பெயர்..இதை இப்பதிவில்  பார்த்திருக்கிறோம்.


கீழே அட்டவணை கொடுத்துள்ளேன்.அதைப் போல நீங்களும் அட்டவணை தயாரித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

வேர்ச்சொல்

தா

செல்

உண்

கூறு

பெயரெச்சம்

தந்த

சென்ற

உண்ட

கூறிய

வினையெச்சம்

தந்து

சென்று

உண்டு

கூறி

வினையாலணையும் பெயர்

தந்தவன்

சென்றவன்

உண்டவன்

கூறியவன்

வினைமுற்று

நதந்தான்

சென்றான்

உண்டான்

கூறினான்

தொழிபெயர்

தருதல்

செல்தல்

உண்ணல்

கூறுதல்

                          
வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று,வினையாலணையும் பெயர்,தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.