Ads Area

வேர்ச்சொல்லைக் கண்டறிதல் - பகுதி அ - இலக்கணம் - TNPSC

                                      வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி?


வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் ஓரெழுத்து ஒருமொழி அறிதல் பாடத்தைப் பார்த்தோம் அல்லவா! பார்க்காதவர்கள் பார்க்க..

          பகுபத உறுப்பிலக்கணம் படித்திருப்போம்.இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும்.அப்படி மறந்திருந்தாலும் கவலை இல்லை.வேர்ச்சொல்லை மிக எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

வேர்ச்சொல்:

         ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..

          (எ.கா) பார்

    'பார்' என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.

     அப்படியானால் 'வந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா?

     'வந்தான்' என்பதன் வேர்ச்சொல் 'வா'.

     அவ்வளவுதான்.வார்த்தையைப் பார்த்தவுடனே எளிதாக வேர்ச்சொல்லைக் கண்டறியலாம்.

      இதைப் போலவே ஏதோவொரு வார்த்தையைக் கொடுத்து அதன் வேர்ச்சொல்லைக் கண்டுபிடி என கேள்விகள் கேட்கப்படும்.


மாதிரி வினாக்கள்:

1)'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

    அ)சென்ற ஆ)சென்று இ) செல் ஈ)சென்றனன்

2)பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

     அ)பேசி ஆ)பேசு இ)பேசிய ஈ)பேசுதல்

           மேற்கண்ட வினாக்களில் விடையைக் கண்டு பிடிக்க முடிகிறதா.. இல்லையெனில் எளிதாக கண்டுபிடிக்க வழி இருக்கிறது..

           முதலில் கொடுத்த சொல்லை நன்றாக வாசியுங்கள்.பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள்.அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி இருக்கிறதோ அந்தச் சொல்லே வேர்ச்சொல் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

          இப்போது கொடுக்கப்பட்டுள்ள  வினாக்களை பாருங்கள்..அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் கட்டளைச் சொல் எதுவென்று தெரிகிறதா?

         ஆமாம்.முதல் வினாவிற்கு விடை 'செல்'.அச்சொல்தான் கட்டளைச்சொல்.

இரண்டாவது வினாவிற்கு விடை 'பேசு'.அச்சொல்தான் கட்டளைச்சொல். இப்போது எளிதாக உள்ளதா..

கேள்வி எப்படி கேட்கப்படும்?



          மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன்.வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும்.இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்

வேர்ச்சொல்லைக் கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்குங்கள்.. TOUCH HERE
                                                                                                              

Top Post Ad

Bottom Post Ad

Ads Area