எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » TNPSC - Podhutamil - விடைக்கேற்ற வினா அமைத்தல்

TNPSC - Podhutamil - விடைக்கேற்ற வினா அமைத்தல்

 

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

        


        வணக்கம்.. கடந்த பதிவில் சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் அமைப்பது எப்படி எனப் பார்த்தோம். (பார்க்காதவர்கள் பார்க்க)

இப்பதிவில் விடைக்கேற்ற வினாவை எப்படி அமைப்பது எனப் பார்ப்போம்.

ஒரு பதில்  கேள்வியாகக் கொடுக்கப்பட்டிருக்கும்..  பதிலாக மூன்று தவறான வினாக்களும் ஒரு சரியான வினாவும் கொடுக்கப்பட்டிருக்கும்..சரியான  வினாவை சரியாக தேர்ந்தெடுக்கவேண்டும்..

(எ.கா)
   
“பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தார்
இதற்கான வினாவைத் தேர்ந்தெடு:
 
அ. எட்டையபுரத்தில் பிறந்தவர் பாரதியார்.
ஆ) பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?
இ) பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தாரா?
ஈ) எந்த ஊரில் பிறந்தவர் பாரதியார்?

விடை : ஆ) பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?

சில உதாரணங்கள்:

1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

‘இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர வேண்டும்’

அ) இல்வாழ்க்கை வளர்வது எதனால்?
ஆ) வளர்பிறை போல் உயர்வது எது?
இ) இல்வாழ்க்கை வளரக் காரணம் என்ன?
ஈ) இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்.

2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

கலிங்கத்துப்பரணி’ முதலாம் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டது!


அ) ‘கலிங்கத்துப்பரணி’ யாரை பாட்டுடைத் தலைவனாகக்
கொண்டது?
ஆ) கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
இ) முதல் குலோத்துங்க சோழனைப் பாடிய நூல் எது?
ஈ) கலிங்கத்துப்பரணி சிற்றிலக்கியமா?

3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

‘இளமை கல்விக்குரியது’

அ) இளமையில் என்ன செய்ய வேண்டும்?
ஆ)கல்வியை எப்பருவத்தில் கற்க வேண்டும்?
இ) இளமை எதற்குரியது?
ஈ) கல்வி கற்கும் பருவம் யாது?

4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

‘ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழிநிலையைப் பொறுத்தே
அமையும்’

அ) நாடு முன்னேற்றம் அடையக் காரணமென்ன?
ஆ) ஒரு நாட்டின் முன்னேற்றம் எதைப் பொறுத்து அமையும்?
இ) நாடு எவ்வாறு இருக்க வேண்டும்?
ஈ) நாட்டின் முன்னேற்றத்திற்கு மொழி அவசியமா?

5. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

‘ஔவையார் ஆத்திச்சூடி பாடினார்’

அ) ஔவையார் எதனைப் பாடினார்?
ஆ) ஆத்திச்சூடியைப் பாடியவர் யார்?
இ) ஔவையார் பாடிய நூல்கள் யாவை?
ஈ) ஔவையார் ஆத்திச்சூடியைப் பாடினாரா?

அசல் வினா:
 


 விடைக்கேற்ற வினா அமைத்தல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்..தேர்வெழுத TOUCH HERE
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template