Ads Area

தமிழ்நாடு -அடிப்படைத் தகவல்கள்

            
தமிழ்நாடு-அடிப்படை தகவல்கள்


தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது.  இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும்.இதன் தலைநகராகச் சென்னை உள்ளது.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயரை 1969 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்கள் தமிழ்நாடு என்று மாற்றினார்.

இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 9 வது இடத்திலும் மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாக உள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது.

தலைநகரம்        சென்னை
மொத்தப் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ
சராசரி மழையளவு 958.5 மி.மீ
மக்கள் தொகை 7,21,38,958
ஆண்கள்             3,61,58,871
பெண்கள்             3,59,80,087
நகர மக்கள் தொகை 3.495 கோடி
கிராம மக்கள் தொகை 3.719 கோடி
மக்கள் நெருக்கம் 555/  1 ச.கி.மீ
ஆண் பெண் விகிதம் 995/1000
எழுத்தறிவு பெற்றவர் 5,24,13,116(80.33%)
ஆண்கள்                             2,83,14,595(86.81%)
பெண்கள்            2,40,98,521(73.86%)
மாவட்டங்கள்      38
தாலுகாக்கள்
311
கிராமங்கள் 15,243
நகரங்கள் 1,097
நகராட்சிகள் 148
மாநகராட்சிகள்25
சட்டசபை 235(234+1)
லோக் சபை 39
ராஜ்ய சபை 18
மாநில விலங்கு வரையாடு(நீலகிரி)
மாநிலப்பறவை மரகதப் புறா
மாநில மரம் பனை
மாநில மலர் செங்காந்தள்
மாநில நடனம் பரத நாட்டியம்
மாநில விளையாட்டு கபடி
                                                                                                                                        

Bottom Post Ad

Ads Area