எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » முதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748)

முதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748)




கர்நாடக போர்கள்

ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவுடன் வியாபாரம் செய்யும் நோக்கத்தின் அடிப்படையில்தான் தோற்றுவிக்கப்பட்டன. நாளடைவில் இவர்களிடையே போட்டி தோன்றி இந்தியாவில் யார் இருக்க வேண்டும் என்ற மோதலை ஏற்படுத்தியது. வாணிப  நோக்கம் அரசியலாகப்  பிரதிபலித்தது. ஆங்கிலேயர்களும் ,பிரெஞ்சுக்காரர்களும் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட போட்டி சூழ்நிலையை ஏற்படுத்தினர். கி.பி.1740 முதல் கிபி 1763-க்கு இடைப்பட்ட காலங்களில் ஆங்கிலேய பிரெஞ்சுக்காரர்கள் இடையே மூன்று போர்கள் நடைபெற்றன. இந்தப் போர்கள் கர்நாடகப் பகுதியில் நடைபெற்றதால் இவை கர்நாடக போர்கள் என அழைக்கப்பட்டன. 

கர்நாடகம், முகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தது. கர்நாடக நவாப்பான அன்வாருதீன் இப்பகுதியில் தன்னை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.  கர்நாடகத்தின் தலைநகராக ஆற்காடு இருந்தது. ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் தங்களை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர் . எனவே, போட்டி தவிர்க்க முடியாத ஒன்றாகியது. இறுதியில் பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். கர்நாடகம் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
முதல் கர்நாடகப் போர் (கி.பி.1746-கி.பி.1748) 

போருக்கான காரணம்

முதல் கர்நாடகப் போர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமை போரின் பிரதிபலிப்பாகும். இப்போரில் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஒருவருக்கொருவர் எதிராக போரில் இறங்கினர்.  

ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார். அவரை தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரச பதவியை ஏற்றார். மரிய தெரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தெரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது. ரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (ரஷ்யாவின் மகாபிரடரிக் என அறியப்பட்டவர் )இப்புதிய அரசியல் சூழலை தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவக் கைப்பற்றினார். இப்பிரச்சினையில் இங்கிலாந்து பிரான்சிற்கு  எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும் களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்ஸ் க்கும்  இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு இருநாட்டு குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன. போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே (டியுப்ளே) இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலைநாட்ட நோக்கமாகக் கொண்டிருந்தார்.  இதுவே போருக்கு வித்திட்டது.

போரின் நிகழ்வுகள்

புதுச்சேரியின் ஆளுநரான துய்ப்ளே, சென்னையின்  ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இருவரிடையே போர் மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும் படி கேட்டுக் கொண்டார் .ஆனால் பார்னெட் என்பவரின் தலைமையிலான ஆங்கில கப்பற்படை இந்திய பொருள்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக்  கப்பல்களை  கைப்பற்றியது. இந்நிகழ்வால் அதிர்ச்சிக்கு உள்ளான துய்ப்ளே  கர்நாடக நவாப் அன்வாருதீனின்  உதவியை நாடி ஆங்கிலேயரோடு  போர்  ஏற்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார் . இதனால் சில காலம் அமைதி நிலவியது.இதனிடையே  துய்ப்ளே, பிரான்ஸின் தீவின் (மொரீசியஸ்)ஆளுநராக இருந்த லாபோர்டுடோனாய்ஸ் என்பவரை தொடர்பு கொண்டார் . அவர் தனது எட்டு போர்க்கப்பல்கள் உடன் இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்தார். ஆங்கில கப்பல் படைக்கு தலைமை ஏற்ற டைபன் தனது நான்கு கப்பல்களோடு பிரெஞ்ச் கப்பலை இடைமறித்தார். 1746 ஜூலை 6ஆம் நாள் நடைபெற்ற இப்போரில் தோல்வி அடைந்த டைபன் இங்கிலாந்தில் இருந்து வரவேண்டிய கப்பல்களை எதிர்பார்த்து கல்கத்தாவிலுள்ள ஹீக்ளிக்குப் பின்வாங்கினார் .

பகுதிகள் கைப்பற்றல் 

1746ம் ஆண்டு நடந்த போரில் வெற்றி பெற்ற பிரான்ஸ்  கப்பல் படை பாதுகாப்பற்று இருந்த சென்னையை 1746 செப்டம்பர் 15-ஆம் நாள் கைப்பற்றியது. சென்னை ஆளுனர் மோர்ஸ் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் ஆற்காடு நவாப் அன்வாருதீனின் உதவியை நாடினார் .அரசியல் விவேகத்துடன்  செயல் பட்ட துய்ப்ளே சென்னையை கைப்பற்றி நவாப் இடமே ஒப்படைக்கப் போவதாக கூறி அவரை சமாதானம் செய்தார்.

1746 செப்டம்பர் 21 இல் ஆங்கிலேயர் சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .இதனால் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி சென்னையை தன் வசம் ஒப்படைக்கும் படி அன்வாருதீன்  கேட்டபோது துய்ப்ளே  தட்டிக் கழித்தார். உடனடியாக நவாப் 10 ஆயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு படையை தனது மகன் மாபுஸ்கானின்  தலைமையில் அனுப்பி வைத்தார்.

சாந்தோம்,அடையாறு போர்கள்

நவாபின் படைகள் புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி வளைத்தன. ஆனால் பிரெஞ்சு படைகள் அவற்றை சாந்தோம் வரை பின்னுக்கு தள்ளின .இதற்கிடையே பிரான்ஸ் படைக்கு கூடுதல் படைகள் வந்து சேர்ந்தன. பிரெஞ்சுப் படைகளின் முன்னேற்றத்தை அடையாறு ஆற்றங்கரையில் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டார், மாபுஸ்கான்.  ஆனால் பிரெஞ்சு படைகள் சிரமப்பட்டு நீரைக் கடந்து நவாபின் படைகளை தீவிரமாக தாக்கின .நவாபின் படைகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது. இதன் பின்னர் துய்ப்ளே  கடலூரிலிருந்த ஆங்கிலேயருக்கு சொந்தமான புனித டேவிட் கோட்டை மீது கண் வைத்தார் .ஆங்கிலேயர் நவாபின் உதவியோடு பிரெஞ்சுக்காரரிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர். மீண்டும் ஒரு அரசியல் விவேக விளையாட்டை விளையாடினார். அவர் நவாப்பிடம் ஒரு வார காலத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் நவாபின் கொடியை பறக்க விட்ட பின்னர் கோட்டையை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து விடுவதாக உறுதிமொழி அளித்தார் . மேலும் பிரெஞ்சுக்காரர் நவாபுக்கு ரூபாய் 40,000 மதிப்புள்ள பரிசுகளையும் வழங்கினார் .நவாபும், ஆங்கிலேயருக்கு வழங்க  இருந்த உதவிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள சம்மதித்தார் .இதனிடையே ஆங்கிலப் படைகள் கடற்படைத் தலைவர் பாஸ்கோவென்  தலைமையில் புதுச்சேரியை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன .

உடன்படிக்கை

இந்நிலையில் 1748 இல் ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரெஞ்சும் ஐ லா ஷபேல்  உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.  

விளைவுகள் 

முதல் கர்நாடகப் போர் ஐ லா ஷபேல் உடன்படிக்கையின்படி முடிவடைந்தது. இதன்படி ஆங்கிலேயருக்கு மீண்டும் சென்னை கிடைத்தது. இவ்வுடன்படிக்கையின் படி இந்தியாவில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும்  தங்கள் மோதல்களை முடித்துக் கொண்டனர் .பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயர்களுக்கு  திருப்பி தருவது என்றும் அதற்கு மாறாக வட அமெரிக்காவில்  லூயிஸ்பர்க்  என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்கு  கொடுப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்புகள் 

ஆனந்தரங்கப்பிள்ளை 1709முதல் 1761 அக்காலத்தில் தலைசிறந்த வணிகராக  விளங்கிய திருவேங்கடம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் பிரான்ஸ் ஆளுநர்களான டூமாஸ், துய்ப்ளே  ஆகியோர் கொடுத்த ஆதரவால் புதுச்சேரியில் மாபெரும் வணிகரானார். துய்ப்ளே  இவரை தலைமை துபாஷியாகவும் (துபாஷி-இரு மொழிகள் அறிந்தவர்)தலைமை வணிக முகவராகவும்( 1746ல் )அமர்த்தினார் .இது  அவரை புதுச்சேரியில் பெரும் அரசியல் செல்வாக்கு உள்ளவ நபராக மாற்றியது .ஆனால் அவருடைய உண்மையான புகழ் ,தமிழில் எழுதப்பட்ட ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய அவருடைய நாட்குறிப்புகளை சார்ந்துள்ளது .அவரின் நாட்குறிப்பு 1736 முதல் 1760 வரையிலான காலத்திற்கு, முக்கியமாக துய்ப்ளே  ஆளுநராக இருந்த காலப்பகுதியின் வரலாற்றுக்கு மிகவும் மதிப்புமிக்க சான்று ஆதாரமாகும். மேலும் அது சமகால நிகழ்வுகள் குறித்த அவருடைய பார்வை மற்றும் கருத்துகளின் பதிவுமாகும்..

முதல் கர்நாடக போர்பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்..

உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. இப்போது படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும். 


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template